ஆதார் கார்டு
இந்தியர்களின் முக்கியமான அடையாள அட்டைகளில் ஒன்று ஆதார் கார்டு. நமது இந்திய அரசு, அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. சமையல் எரிவாயு,பான் கார்டு,வங்கி கணக்கு,செல்போன் எண் போன்ற அனைத்து சேவைகளையும், மானியத்தையும் பெற ஆதார் இணைப்பு முக்கியம்.
ஆதார் கார்டு முகவரி மாற்றம்
நாம் வேலைக்காகவும், குடியிருப்பிற்காகவும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர வேண்டியுள்ளது. அவ்வாறு மாறும்போதெல்லாம் நாம் பெற்று வரும் அனைத்து சேவைகளிலும் புதிய முகவரியை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே போலத்தான் ஆதாரிலும் நமது முகவரியை மாற்றியாக வேண்டும்.
ஆனால் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்ய,புதிய முகவரிக்கு வேறு அடையாள அட்டைகள் தேவைப்படும். இதற்கு சமையல் எரிவாயு இணைப்பு உங்கள் பெயரில் இருந்தால் முதலில் அதில் முகவரியை மாற்றிவிடுங்கள்.பின்பு அந்த ரசீதை வைத்து ரேஷன் கார்டு,வாக்காளர் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை மாற்றிவிட்டு, அதை வைத்து ஆதாரை மாற்றிக்கொள்ளலாம்.
மற்றவர்கள் உங்கள் அருகே உள்ள தபால் நிலையத்தில் உங்கள் புதிய முகவரிக்கு பணம் செலுத்தி அடையாள அட்டை பெறலாம். அதை வைத்து வங்கி கணக்கில் உள்ள முகவரியை மாற்றி பின் ஆதார் கார்டு -லும் மாற்றிக்கொள்ளலாம்.
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம்
உங்கள் அருகே உள்ள ஆதர் சேவை மையத்திற்கு சென்று உங்களிடம் உள்ள புதிய முகவரிக்கான சான்றுகளை காண்பித்து மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அங்கு அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டியிருக்கும். தனியாரிடம் சென்றால் பணம் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் ஆன்லைன்-ல், எந்த ஒரு செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
Step 1
இந்த லிங்கை கிளிக் செய்து ஆதாரின் வெப்சைட்டிற்குள் செல்லுங்கள். அங்கு ADDRESS UPDATE REQUEST (ONLINE ) என்ற இடத்தில் கிளிக் செய்யுங்கள்.
இந்த பக்கத்தில் PROCEED- ஐ கிளிக் செய்யவும்.
STEP 2
அடுத்ததாக இந்த பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணையும், சரி பார்ப்பு எண்ணையும் டைப் செய்து விட்டு SEND OTP- ஐ கிளிக் செய்யுங்கள்.
இதன் பிறகு நீங்கள் ஆதாருடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு பாஸ்வோர்டு வரும். அதை இங்கு டைப் செய்துவிட்டு LOGIN -ஐ கிளிக் செய்யுங்கள்.
STEP 4
அடுத்து வரும் இந்த பக்கத்தில் ADDRESS -ஐ டிக் செய்து விட்டு SUBMIT கிளிக் பண்ணுங்கள்.
உங்கள் புதிய முகவரியை இங்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் டைப் செய்யுங்கள்.பின்னர் அஞ்சல் எண்,அஞ்சலகம் இரண்டையும் சரியாக தேர்வு செய்து பின் SUBMIT UPDATE REQUEST -ஐ கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் டைப் செய்த முகவரி முழுவதும் அடுத்து வரும். அதை ஒருமுறை நன்கு சரிபார்த்து கொள்ளுங்கள். அடுத்து PROCEED – ஐ கிளிக் செய்யுங்கள்.
STEP 5
புதிய முகவரியின் நகலை போட்டோ அல்லது ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். jpg,jpeg,pdf,tiff,png இவற்றில்ஏதாவது ஒரு FILE FORMAT ஆக இருந்து 2 MP -க்குள் இருக்க வேண்டும். மேலும் முக்கியமாக அதில் உங்களது கையெழுத்து(SELF ATTESTED) இருக்க வேண்டும்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்களின் புதிய முகவரிக்கான சான்று எந்த வகை என்பதை தேர்ந்தெடுங்கள்.
CHOOSE FILE -ஐ கிளிக் செய்து ஸ்கேன் செய்து வைத்திருக்கும் FILE- ஐ தேர்ந்தெடுத்து SUBMIT கிளிக் செய்யவும்.
நீங்கள் ஸ்கேன் செய்து அனுப்பிய முகவரி சான்று உண்மையானதுதானா என்பதற்கு YES -ஐ கிளிக் செய்யுங்கள்.
STEP 6
இந்த பக்கத்தில் இங்கு டிக் செய்து விட்டு SUBMIT- ஐகிளிக் செய்யுங்கள்.
நீங்கள் வின்னப்பித்ததற்கான ஒப்புகை எண் வழங்கப்படும்.
அதை மறக்காமல் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.அதை வைத்து நாம் நம்முடைய விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.ONLINE– ல் CHECH செய்யும்போது புது முகவரி மாறியிருந்தால், உங்கள் அருகில் உள்ள ஆதர் இ-சேவை மையத்திற்கு சென்று நம்முடைய கலர் ஆதார் கார்டு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
முக்கியமான ஆதார் கார்டு விவரங்களுக்கான லிங்க்ஸ்
- ஆதார் மெயின்(OFFICIAL)வெப்சைட் https://uidai.gov.in/
- ஆதார் கார்டு -ல் முகவரி மாற்றம் செய்ய https://ssup.uidai.gov.in/web/guest/ssup-home#/
- விண்ணப்பத்தின் நிலை அறிய https://ssup.uidai.gov.in/web/guest/check-status
- உங்கள் அருகில் உள்ள ஆதர் சேவை மையங்களை தெரிந்து கொள்ள https://appointments.uidai.gov.in/easearch.aspx
முகவரி மாற்றத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும் ஆவணங்கள்
- PASSPORT
- BANK STATEMENT/PASSBOOK
- POST OFFICE ACCOUNT STATEMENT/PASSBOOK
- RATION CARD VOTER ID
- DRIVING LICENSE
- GOVERNMENT PHOTO ID CARDS/ SERVICE PHOTO IDENTITY CARD ISSUED BY PSU ELECTRICITY BILL (NOT OLDER THAN 3 MONTHS)
- WATER BILL (NOT OLDER THAN 3 MONTHS)
- TELEPHONE LANDLINE BILL (NOT OLDER THAN 3 MONTHS)
- PROPERTY TAX RECEIPT (NOT OLDER THAN 1 YEAR)
- SIGNED LETTER HAVING PHOTO FROM BANK ON LETTERHEAD
- CREDIT CARD STATEMENT (NOT OLDER THAN 3 MONTHS)
- INSURANCE POLICY
- SIGNED LETTER HAVING PHOTO ISSUED BY REGISTERED COMPANY ON LETTERHEAD
- NREGA JOB CARD
- ARMS LICENSE
- PENSIONER CARD
- FREEDOM FIGHTER CARD
- SIGNED LETTER HAVING PHOTO ISSUED BY RECOGNIZED EDUCATIONAL INSTRUCTION ON LETTERHEAD
- KISSAN PASSBOOK
- CGHS / ECHS CARD
CERTIFICATE OF ADDRESS HAVING PHOTO ISSUED BY MP OR MLA OR GAZETTED OFFICER OR TEHSILDAR - CERTIFICATE OF ADDRESS ISSUED BY VILLAGE PANCHAYAT HEAD OR ITS EQUIVALENT AUTHORITY (FOR RURAL INCOME TAX ASSESSMENT ORDER
- VEHICLE REGISTRATION CERTIFICATE
- REGISTERED SALE / LEASE /RENT AGREEMENT
- ADDRESS CARD HAVING PHOTO ISSUED BY DEPARTMENT OF POSTS
- CASTE AND DOMICILE CERTIFICATE HAVING PHOTO ISSUED BY STATE GOVT
- GAS CONNECTION BILL( NOT OLDER THAN 3 MONTHS)
- PASSPORT OF SPOUSE PASSPORT OF PARENTS (IN CASE OF MINOR)
- Marriage Certificate issued by the Government, containing address Allotment letter of accommodation issued by Central/State Govt. of not more than 3 years old
[…] ஆதார் அட்டை […]
ஆதார் அட்டையில் தொலைபேசி அல்லது அலைபேசி எண் முதலில் இணைக்கப்பட வில்லை தற்போது இணைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் விளக்கம் தேவை
நீங்கள் உங்கள் அருகில் உள்ள ஆதார் இ சேவை மையத்திற்கு சென்று உங்கள் விரல் ரேகை வைத்து உங்களின் மொபைல் எண்ணை சேர்த்துக்கொள்ளலாம். ஏற்கனவே கொடுத்து மொபைல் எண் தொலைந்து போனாலோ அல்லது உங்களிடம் தற்போது இல்லை என்றாலோ இதே வழிமுறையில்தான் புதிய மொபைல் எண்ணை சேர்க்க முடியும்.
[…] ஆதார் கார்டு […]
[…] ரேசன் கார்டுகளில் இன்னும் ஆதார் இணைக்கப்பட வில்லை. ஆக அவையெல்லாம் […]
[…] டவுன்லோடு செய்வது, ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது, விர்ச்சுவல் ID உருவாக்குவது, […]
Thanks for sharing this information.Have shared this link with others keep posting such information.
[…] அவர்களின் பெற்றோர் மற்றும் முகவரியை வைத்து கண்டு […]
[…] கொடுப்பவர்கள் அனைவரும் நினைத்து இணையம் வழி விளம்பரத்திற்கு முக்கியத்துவம் […]
I really like your writing style, good information, thankyou for posting D. aadcabkacfadkbfe