aadhar address change online witout proof ஆதார் கார்டு அட்ரஸ் மாற்றுவது எப்படி ஆன்லைனில் Do something new

0
4988
aadhar address change online without proof tamil Do something new

Contents

Aadhar address change online – ஆதார் முகவரி மாற்றம்

ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய ஆதார் ஆணையம் புது வசதி ஒன்றை வழங்கியிருக்கிறது. நாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும்போது அந்த புது முகவரிக்கு நமது முகவரி சான்றுகளை மாற்ற ஏதேனும் சான்று தேவைப்படும். Aadhar Address change online

இதனால் ஆதார் கார்டு அட்ரஸ் மாற்றுவது எப்படி என்று அதிக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். ஏனெறால் புதிய முகவரிக்கு சான்று பெறுவதற்குள் படாத பாடு பட வேண்டியிருக்கும்.

ஆனால் இந்த புது வசதி மூலம் நாம் இனி புதிய முகவரிக்கு ஆதாரை மாற்ற நமது உறவினர்கள், நண்பர்கள், வீட்டின் உரிமையாளர்கள், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என யாருடைய ஆதாரை பயன்படுத்தியும் அவர்களின் ஆதாரில் இருக்கு அதே முகவரியை நமது ஆதாரிலும் மாற்றிக்கொள்ள முடியும்.

வழிமுறைகள்

  • கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வந்து கொள்ளுங்கள்.

https://ssup.uidai.gov.in/ssup/

Request address validation letter என்பதை கிளிக் செயுங்கள்.

  • அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் ஆதார் எண் மற்றும் Captcha எண்ணை டைப் செய்து Send OTP என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • உங்கள் ஆதார் பதிவு மொபைல் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவு எண்ணை டைப் செய்து Login செய்து கொள்ளுங்கள்.

aadhar address change online without proof tamil Aadhar Address change ஆதார் Do something new

  • அதன் பிறகு உங்களுக்காக ஆதார் தருபவரின் ஆதார் எண்ணை டைப் செய்து send request என்பதை கிளிக் செய்து அவர்களின் ஆதார் பதிவு மொபைல் எண்ணிற்கு வரும் SMS வரும்.
  • அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால், மறுபடியும் வரும் OTP எண்ணை டைப் செய்து Send Request என்பதை கிளிக் செய்யுங்கள்.

aadhar address change online without proof tamil Aadhar Address change ஆதார் Do something new

  • இப்பொழுது உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் SMS -ல் SRN Number என்று 10 இலக்கங்கள் கொண்டு வந்திருக்கும்.
  • அதற்கு கீழே ஒரு லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்து அந்த SRN எண்ணை டைப் செய்து send otp என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை டைப் செய்து login செய்தால் அவர்களின் ஆதாரில் உள்ள முகவரி வரும்.

aadhar address change online without proof tamil Aadhar Address change ஆதார் Do something new

  • அதை தேவைப்படுமாயின் உங்கள் தாய் மொழியில் திருத்திக் கொள்ளலாம். பின்னர் கீழே உள்ள Terms and conditions -ல் டிக் செய்யுங்கள்.
  •  பிறகுsubmit என்பதை கிளிக் செய்தால், அதிலிருந்து 15 முதல் 20 நாட்களுக்குள் அந்த முகவரிக்கு ஆதார் தரப்பிலிருந்து ஒரு கடிதம் வரும்.

aadhar address change online without proof tamil Do something new

  • அதில் ஒரு Secret Code 6 இலக்கங்களில் இருக்கும். பின் அந்த கடிதத்தை ஸ்கேன் செய்து உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • பின்னர் இந்த லிங்கை கிளிக் https://ssup.uidai.gov.in/ssup/ செய்து வரும் பக்கத்தில் Proceed to update aadhar என்பதை கிளிக் செய்து உங்களின் ஆதார் எண்ணை டைப் செய்து send otp கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP வைத்து login செய்து கொள்ளுங்கள்.

aadhar address change online without proof tamil Aadhar Address change ஆதார் Do something new

  • அதன் பின்னர் வரும் பக்கத்தில் update address via secret code கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்ததாக வரும் பக்கத்தில் உங்கள் முகவரிக்கு வந்த கடிதத்தில் உள்ள Secret number -ஐ டைப் செய்து Proceed என்பதை கிளிக் செய்யுங்கள்.

aadhar address change online without proof tamil Aadhar Address change ஆதார் Do something new

  • அடுத்து Upload Document என்பதை கிளிக் செய்து ஸ்கேன் செய்து வைத்திருக்கும் கடிதத்தை upload செய்யுங்கள். பின்னர் Submit என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு URN நம்பர் திரையில் வரும் அதை வைத்து இந்த லிங்க்கை https://ssup.uidai.gov.in/checkSSUPStatus/checkupdatestatus க்ளிக் செய்து நமது விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியும். Aadhar Address change online

ஆதாரில் எந்த முகவரி சான்றும் இல்லாமல் முகவரி மாற்றம் செய்ய வழிமுறை வீடியோ