ஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய

0
49094
smart ration card address change online ration shop change online ரேஷன்கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம்

Contents

ரேஷன் கார்டு முகவரி மாற்றம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மாற்றம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்காது. ஆனால் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சினை.

அடிக்கடி வீடு மற்றும் ஊர் மாற்றம் செய்பவர்கள் அவர்களின் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு போன்றவற்றில் முகவரி மாற்றுவதற்குள் அடுத்த வீடு மாற்றும் நேரம் வந்து விடும்.

அந்த அளவிற்க்கு ஒரு தலைவலியான இஷயம் இது. எங்கு முகவரி மாற்றத்திற்கு சென்றாலும் ஒன்றுக்கு நான்கு முறை அலைய வேண்டிய சூழல்.

அனால் இப்பொழுது எல்லாவற்றிற்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை வந்து விட்டது.

ஒரு சில அரசு வேலைகளை தவிர மற்ற அனைத்தையும் நமது மொபைலில் இருந்தே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம்

நாம் நமது வீட்டை மாற்றினால் முதலில் செய்யவேண்டியது  இந்த ரேஷன் கார்டு முகவரி மாற்றம் தான். அதுவும் நமது அருகில் உள்ள கடைக்கே மாற்ற வேண்டும்.

இதை ஆன்லைனில் எப்படி செய்வது என்றுதான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம்.

பின்வரும் லிங்கை கிளிக் செய்து இந்த பக்கதிற்கு வந்து கொள்ளுங்கள்.





https://www.tnpds.gov.in/

இந்த பக்கத்தில் முகவரி மாற்றம் செய்ய என்பதை கிளிக் செய்யுங்கள்.

smart ration card address change online ration shop change online ரேஷன்கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம்

இங்கே உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு -ல் எந்த மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளீர்களோ அந்த என்னை டைப் செய்து கீழே உள்ள கேப்ட்சா எண்ணையும் டைப் செய்து பதிவு செய் என்பதை கிளிக் செய்யுங்கள்.

smart ration card address change online ration shop change online ரேஷன்கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம்

அடுத்து வரும் இந்த பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்ணை டைப் செய்து பதிவு செய் என்பதை கிளிக் செய்யுங்கள்.

smart ration card address change online ration shop change online ரேஷன்கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம்

இப்பொழுது உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு விவரங்களுக்குள் வருவீர்கள். இங்கே உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு எண், குடும்பத்தலைவர் பெயர், நியாய விலை கடை குறியீடு எண் போன்ற விவரங்கள் இருக்கும்.

அதற்கு கீழே சேவையை தேர்வு செய்க என்பதில் முகவரி மாற்றம் செய்ய என்பது தேர்ந்தெடுத்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அடுத்தது குடும்ப அட்டை விவரப்படி என்பதற்கு கீழே உங்களது பழைய முகவரி ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கும்.

அதற்கு கீழே புதிய முகவரி விவரங்கள்  என்று இருக்கும். அதற்கு கீழே நமது புதிய முகவரியை ஆங்கிலத்திலும் தமிழிலும் டைப் செய்ய வேண்டும் address line 1,  line 2, line 3, என்பதில் உங்களுடைய புதிய முகவரியை ஆங்கிலத்தில் முழுவதுமாக டைப் செய்துகொள்ளுங்கள். அதற்கடுத்து  உங்களுடைய  மாவட்டம், தாலுக்கா, கிராமம் போன்ற விவரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.smart ration card address change online ration shop change online ரேஷன்கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம்

அதற்கடுத்து அஞ்சல் குறியீட்டு எண்ணை டைப் செய்யுங்கள். பின்னர் உங்களது புதிய முகவரியை தமிழில் டைப் செய்து மாவட்டம், தாலுக்கா, கிராமம் ஆகியவற்றை சரியாக தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அதற்கடுத்து இப்பொழுது நீங்கள் டைப் செய்து இருக்கும் புதிய முகவரிக்கு  தக்க அடையாளச்  சான்றை முன்னரே உங்களது மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

 அடையாள சான்று

இந்த மற்ற ஆவணங்கள் என்பதற்குக் கீழே ஆவண வகையை தேர்ந்தெடுக்கவும் என்பதை கிளிக் செய்து இப்பொழுது நீங்கள் இருக்கும் புதிய முகவரிக்கு  இங்கே கேட்கப்படும் 15 ஆவணங்களில் உங்களிடம் எது இருக்கிறதோ அதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

smart ration card address change online ration shop change online ரேஷன்கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம்

பின்னர் Browse என்பதை கிளிக் செய்து எந்த இடத்தில் ஆவணத்தை ஸ்கேன் செய்து வைத்து இருக்கிறீர்களோ அதை தேர்ந்தெடுத்து பதிவேற்று என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுத்த ஆவணம்  அப்லோடு ஆகிவிடும்.

அடுத்தது உறுதிப்படுத்துதல் என்பதற்கு கீழே நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் கொடுத்திருப்பார்கள். படித்துப் பார்த்துவிட்டு டிக் செய்து பின்  பதிவு செய்ய என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் விண்ணப்பித்ததற்கான குறிப்பு எண் வரும். அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த  குறிப்பு எண்ணை வைத்துக் கொண்டு நமது விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியும்.

Screenshot 11 03 2019 20 16 06

முகப்பு பக்கத்தில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதற்கு கீழே அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்பதை கிளிக் செய்து இந்த குறிப்பு எண்ணை வைத்து நமது விண்ணப்பத்தில் அறிந்து கொள்ள முடியும்.

Screenshot 14 03 2019 19 37 33

ரேஷன் கடை  மாற்றம்

இவ்வாறு நாம் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு  மாவட்டத்திற்கு அல்லது ஒரே மாவட்டத்திற்குள் வேறு பகுதிகளுக்கு வீடு மாற்றம் செய்தால் நமக்கு அருகில் உள்ள ரேஷன் கடை மாற்றம் ஆன்லைனில் தேர்ந்தெடுக்கும் வசதி இல்லை.

smart ration card address change online ration shop change online ரேஷன்கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம்

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இலவச உதவி மைய எண் 18004255901 -ஐ  தொடர்பு கொண்டு கேட்டதற்கு ஆன்லைனில் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் விண்ணப்பித்த பிறகு கிடைக்கும் குறிப்பு எண்ணை எடுத்துக் கொண்டு உங்கள் அருகில் உள்ள நியாய விலை கடை குறியீடு எண்ணையும் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டு, இந்த இரண்டையும் உங்கள் அருகில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகம் அல்லது ஸ்மார்ட் ரேஷன் கார்டு  இ சேவை  மையத்திற்கு சென்று முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்த தகவலை தெரிவித்து உங்கள் அருகில் உள்ள நியாய விலை கடை குறியீடு எண்ணையும் கொடுத்து உங்களுடைய ஸ்மார்ட் ரேஷன் கார்டு உங்கள் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்கள்.

 குறிப்பு:

இப்பொழுதெல்லாம் ஆன்லைனில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம், ரேஷன் கடை மாற்றம் அல்லது வேறு ஏதேனும் மாற்றத்திற்காக விண்ணப்பித்தால் 2 நாட்களுக்குள் மாறிவிடுகிறது. எனவே முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்த  மறுநாளே குறிப்பு எண் மற்றும் நியாய விலை கடை குறியீடு எண் இரண்டையும் வட்ட வழங்கல் அலுவலகம் அல்லது ஸ்மார்ட் ரேஷன் கார்டு இசேவை மையத்திற்கு சென்று கடை மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.