Tamilnadu RTE Application 2022-23 ஆம் ஆண்டிற்கான விண்ணப்ப தேதி மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி தேவையான ஆவணங்கள்

0
4475

Contents

Tamilnadu RTE Application 2022-23 ஆம் ஆண்டிற்கான விண்ணப்ப தேதி மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி தேவையான ஆவணங்கள்

Tamilnadu RTE Application 2022-23 ஆம் ஆண்டிற்கான விண்ணப்ப தேதி மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆகிய அனைத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

அனைத்து குழந்தைகளும் நல்ல தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் நமது நாட்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டம் இயற்றி அதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

Tamilnadu RTE Application 2022-23

ஒரு நாட்டின் உண்மையான நல்ல முன்னேற்றத்தை, முறையான தகுதியான கல்வியை அனைவரும் பெற்றால் மட்டுமே அடைய முடியும். நல்ல கல்வியை பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் மட்டுமே பெற முடியும் என்ற நிலை மாற வேண்டும் என்பதற்காகவே இந்த வாய்ப்பை அரசு நமக்கு அளித்து வருகிறது. எனவே அதை தகுதியான நபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2022-23 கல்வியாண்டிற்கான RTE Tamilnadu Application 2022-23 வருகிற 20 ஏப்ரல் 2022 அன்றிலிருந்து ஆன்லைனில் நாம் விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.

2022-23 கல்வியாண்டிற்கான RTE Tamilnadu Application 2022-23 வருகிற 18 மே 2022 அன்று ஆன்லைன் விண்ணப்பம் முடிவடைகிறது. எனவே இந்தத் தேதிக்குள் தகுதியான நபர்கள் www.rte.tnschools.gov.in என்ற லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Tamilnadu RTE Application 2022-23 இந்த கல்வி ஆண்டில் விண்ணப்பிப்பதற்கு வயது வரம்பு

தமிழ்நாடு RTE Application 2022-23 -ல் விண்ணப்பிக்க வேண்டிய குழந்தைகள் 31-07-2018 லிருந்து 31-07-2019 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே இந்த 2022-23 கல்வி ஆண்டிற்கான RTE Tamilnadu Application -ல் விண்ணப்பிப்பதற்கு தகுதியான வயதுவரம்பு உள்ளவர்கள்.

Tamilnadu RTE Application 2022-23 ஆன்லைனில் நாம் விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

  1. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
  2. குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
  3. குழந்தையின் ஆதார்
  4. ஜாதி சான்றிதழ் அல்லது வருமான சான்றிதழ்
  5. முகவரி சான்று