CAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் – What Is CAN Number
- தமிழ்நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்களுக்கு வேண்டிய அரசு சம்பந்தப்பட்ட சேவைகளை அவர்களே இணையம் வழியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் தமிழக அரசால் தொடங்கப்பட்ட இணையத்தளம் தமிழ்நாடு இ சேவை TNEGA ஆகும்.
- இந்த இணையத்தளத்தில் பல சேவைகளை நாம் பெறுவதற்கு இந்த CAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் தேவைப்படும். இதை எப்படி பெறுவது என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
TNeGA- தமிழ்நாடு இ சேவை – CAN Number Register
- இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ்நாடு இ சேவை வெப்சைட்டிற்கு வாருங்கள். அதில் CITIZEN LOGIN என்பதை கிளிக் செய்து அடுத்து வரும் பக்கத்தில் SIGN UP என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்ததாக இந்தப்பக்கத்தில் உங்கள் பெயர், இ மெயில், மொபைல் எண், USER ID, PASSWORD போன்ற விவரஙகளை பதிவு செய்து பின் SUBMIT – ஐ கிளிக் செய்யவும்.
- இ மெயில் கண்டிப்பாக கொடுக்கவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் சில சமயங்களில் மொபைலிற்கு OTP வருவதில்லை எனவே இ மெயில் கொடுத்தால் மெயில் – க்கும் OTP வரும்.
- SUBMIT கொடுத்ததும் அடுத்து வரும் இந்த பக்கத்தில் உங்களுக்கு வந்த OTP- ஐ டைப் செய்து SUBMIT கொடுத்தால் உங்களது தமிழ்நாடு இ சேவை கணக்கு வெற்றிகரமாக பதிவாகி விடும்.
- அடுத்து முதன்மை பக்கத்திற்கு சென்று நீங்கள் உருவாக்கிய USER ID, PASSWORD, மற்றும் கேப்ட்சா எண்ணை டைப் செய்து LOGIN செய்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது இந்த பக்கத்தில் இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்தெந்த துறைகள் சேவைகளை வழங்குகிறதோ அந்த துறைகளின் பெயர்கள் இருக்கும். அதில் REVENUE DEPARTMENT என்பதை கிளிக் செய்யுங்கள்.
- இங்கே பல துறைகளில் இருந்து சான்றிதழ்கள் பெறுவதற்கான பட்டியல் இருக்கும். அதில் நீங்கள் ஏதாவது ஒரு சான்றிதழை கிளிக் செய்யுங்கள். எடுத்துக்காட்டுக்கு COMMUNITY CERTIFICATE– ஐ கிளிக் செய்தால் இந்த பக்கம் வரும்.இதில் PROCEED என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து வரும் பக்கத்தில் REGISTER CAN என்பதை கிளிக் செய்யுங்கள். இதில் கேட்கப்படும் உங்களின் அனைத்து விவரங்களையும் டைப் செய்யுங்கள். உங்கள் மொபைல் எண்ணை சரியாக கொடுங்கள்.
- உங்களின் அனைத்து விவரங்களையும் டைப் செய்ததும் REGISTER என்பதை கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு ஒரு OTP எண் வரும். அதை அதற்கான இடத்தில் டைப் செய்து உறுதி செய்ததும் உங்களுக்கான CAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் வந்து விடும். அதை மறக்காமல் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களது CAN நம்பர் மறந்து விட்டால் இந்த பக்கத்தில் APPLICANT MOBILE NUMBER என்பதை கிளிக் செய்து நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணை டைப் செய்து SEARCH கொடுத்தால் அந்த மொபைல் எண் வாயிலாக நீங்கள் பதிவு செய்த அத்தனை CAN நம்பர்களும் பெயர்களும் வரும். அதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
இனிமேல் இந்த CAN நம்பரை வைத்து நமக்கு தேவைப்படும் சான்றிதழ்களை ஆன்லைனிலேயே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
CAN Number -க்கான வீடியோ
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்து உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயனாக்குங்கள். நன்றி.
[…] CAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் […]
[…] CAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் […]