அரசு சான்றிதழ்கள்
ஒரு காலத்தில் அரசு அலுவலகங்களில் ஒரு சான்றிதழ் விண்ணப்பித்து அதை வாங்குவதற்கு எவ்வளவு அலைய வேண்டியிருக்கும் என்று அலைந்தவர்களுக்குத்தான் தெரியும்.
ஆனால் தற்போது UMANG APP -ஐ பயன்படுத்தி நமது மொபைலில் இருந்தே சாதி சான்றிதழ், பிறப்பிட மற்றும் இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை வந்து விட்டது. அதை பற்றித் தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
UMANG APP
இந்த UAMANG APP – ஐ பதிவிறக்கம் செய்து அதில் எப்படி REGISTER செய்வது என்று இந்த வீடியோ வில் உள்ளது. அதை பார்த்து UMANG APP INSTALL செய்து உங்களுக்கான அக்கவுண்ட் உருவாக்கி கொண்டு இந்த பக்கத்திற்கு வாருங்கள்.
இந்த பக்கத்தில் மாநிலம் என்பதை கிளிக் செய்து தமிழ்நாடு என்பதை தேர்ந்தெடுங்கள்.அதில் வருமானம் (REVENUE DEPARTMENT) என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து இந்த பக்கத்தில் சுய விவரங்கள் என்பதை தேர்ந்தெடுங்கள். அடுத்து உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்யுங்கள்.
CAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண்
நீங்கள் முன்பே CAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் REGISTER செய்திருந்தால் உங்களின் விவரங்கள் அனைத்தும் வந்துவிடும். ஒருவேளை நீங்கள் CAN NUMBER REGISTER செய்ய வில்லை என்றால் இந்த பக்கம் வரும்.
இதில் இந்த புதிய பயனர் என்பதை கிளிக் செய்யுங்கள்.அடுத்து ஓ டி பி பெறுக என்பதை கிளிக் செய்யவும். உங்கள் மொபைலிற்கு வரும் OTP எண்ணை இந்த இடத்தில் டைப் செய்து சமர்ப்பி என்பதை தேர்ந்தெடுங்கள்.
அடுத்து சுயவிவரங்கள் பதிவு என்ற ஒரு பக்கம் வரும். உங்களின் ஒரு சில விவரங்கள் தானாகவே வந்திருக்கும். மீதி விவரங்களையும் டைப் செய்து அடுத்தது என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் முகவரி விவரங்கள் என்ற பக்கத்தில் உங்களின் ஆதாரில் உள்ள முகவரியை டைப் செய்துகொள்ளுங்கள். தற்காலிக முகவரியும் நிரந்தர முகவரியும் ஒன்றாக இருந்தால் டிக் செய்து விடுங்கள்.அடுத்த பக்கத்தில் மேலும் ஏதாவது ஒரு அடையாள சான்றை கிளிக் செய்து அதற்கான எண்ணையும் டைப் செய்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்களின் CAN NUMBER -குடிமக்கள் கணக்கு எண் வந்து விடும். இதை மறக்காமல் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு தேவையான சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை
இப்பொழுது இந்த பக்கத்திற்கு வந்து சான்றிதழுக்கு விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து இந்த பக்கம் வரும். இதில் உங்களின் விவரங்கள் வரும். அதற்கு கீழே சான்றிதழுக்கு விண்ணப்பிக்க என்பதை தேர்ந்தெடுங்கள்.
ஒருவேளை நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள வேறு நபர்களுக்கு சான்றிதழ்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் புதிய விண்ணப்பதாரரை சேர்க்க என்பதை கிளிக் செய்து அவரின் ஆதார் விவரங்களை கொடுத்து அவருக்கு CAN NUMBER உருவாக்கி சான்றிதழ்கள் விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழுக்கு விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ததும் இந்த பக்கம் வரும். இதில் நீங்கள் எந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள். எடுத்துக்காட்டுக்கு சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கலாம்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் தாய் தந்தையாரின் வகுப்பு மற்றும் சாதியை தேர்ந்தெடுங்கள். தந்தையின் விவரங்களை அல்லது தாயின் விவரங்களை பயன்படுத்தலாமா என்பதை தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் எந்த வகுப்பு, எந்த சாதி விண்ணப்பிக்க வேண்டுமோ அதை டைப் செய்யுங்கள்.(ஒருவேளை தாய் அல்லது தந்தையின் சாதி அந்த பட்டியலில் இல்லை என்றால் நேரில் சென்று விண்ணப்பிப்பது நல்லது)
அடுத்து அதில் கேட்கப்படும் ஆவணங்களை உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்து வைத்து பதிவேற்றம் செய்யுங்கள். ஒவ்வொரு ஆவணங்களும் 150kb க்குள், JPG,JPEG பார்மட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.அடுத்து பணம் செலுத்துங்கள் என்பதை கிளிக் செய்யுங்கள்.
நீங்கள் பணம் செலுத்திய பிறகு விண்ணப்பித்த சான்றிதழ் உங்கள் தகவல்களுடன் ஒத்துள்ளாதா என அதிகாரிகளின் சரிபார்பிற்காக சில நாட்கள் ஆகும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணிற்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா அல்லது மறுக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் வரும். உங்களுக்கு சான்றிதழ் உறுதியாகிவிட்டால் நீங்கள் இந்த சான்றிதழ் பதிவிறக்கம் என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த பதிவு உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.