Contents
ஆதார் பாஸ்வேர்டு
முன்பெல்லாம் ஆதார்கார்டு ஆன்லைனில் டவுன்லோடு செய்து அதை பார்ப்பதற்கு ஆதாரில் உள்ள முகவரி பின்கோடு டைப் செய்தால் போதும். ஆனால் இப்போது அந்த முறையை ஆதார் நிறுவனம் மாற்றியுள்ளது.
உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்தும் உங்களின் பிறந்த வருடத்தையும் டைப் செய்தால் அதுதான் உங்கள் இ ஆதாரின் பாஸ்வேர்டு.
எடுத்துக்காட்டுக்கு ஆதார் வெப்சைட்டில் மாதிரி படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் TOTP
ஆதார் டவுன்லோடு செய்வது, ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது, விர்ச்சுவல் ID உருவாக்குவது, மேலும் ஆதார் சம்பந்தமாக நாம் செய்யும் அனைத்து பரிமாற்றங்களுக்கும் நாம் ஆதாரில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு OTPஎண் வரும். அதை வைத்து நமது அனுமதியுடன்தான் அந்த பரிமாற்றத்தை செய்கிறோம் என்பதற்காக இந்த நடைமுறை.
இந்த OTP முறையில் ஏகப்பட்ட பிரச்சினைகள். சரியான நேரத்திற்கு OTP வராதது, மொபைல் நெட்வொர்க் பிரச்சினை இதெல்லாம் கருத்தில் கொண்டு ஆதார் நிறுவனம் TOTPஎன்ற புதுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நமது மொபைலில் MAADHAR என்ற APP -ஐ இன்ஸ்டால் செய்து அதில் உங்கள் ஆதர் நம்பரை கொடுத்து, உங்கள் மொபைல் எண்ணையும் உறுதி படுத்திய பிறகு உங்களின் ஆதார் வரும்.
ஆதாரை தொட்டால் அடுத்த பக்கத்திற்கு செல்லும். அந்த பக்கத்தில் SHOW TOTP என்ற இடத்தில் கிளிக் செய்தால் உங்கள் ஆதாருக்கான TOTP நம்பர் வரும்.
அதன் வேலிடிட்டி 30 நொடிகள் மட்டும்தான். பின் புதிதாக மற்றொரு TOTP நம்பர் வந்துவிடும்.நாம் செய்யும் அனைத்து ஆதார் பரிவர்த்தனைகளுக்கும் OTP- க்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்.
Thanks for sharing this information.have shared this link with others keep posting such information.