WEBSITE
இன்றைய உலகத்தில் எல்லாம் இணையம் மயம்தான். முன்பெல்லாம் ஒரு விளம்பரம் செய்ய சுவர்கள், செய்தி தாள்கள், வானொலி, தொலைக்காட்சி இப்படி பல வழிகளை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போதைய சூழலில் இணையம் வழியாக விளம்பரம் செய்தால் வாடிக்கையாளர்களிடம் எளிதில் சென்று சேரும் என்று விளம்பரம் கொடுப்பவர்கள் அனைவரும் நினைத்து இணையம் வழி விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
வெப்சைட் அதிகமாக தொடங்குவதற்கான 2 காரணங்கள்
- ஒருசிலர் அவர்கள் நிறுவனத்திற்கோ அல்லது பொருட்களுக்கோ தனியாக இணைய தளங்களை தொடங்கி அதில் தகவல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
- அதிக நபர்கள் ஒரு வெப்சைட் தொடங்கி அதில் அவர்களுக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் செய்திகளை பதிவிட்டு அதை விளம்பர நிறுவங்களிடம் சமர்ப்பித்து அவர்களின் விளம்பரங்களை காட்டச்செய்து வருமானம் பார்க்க தொடங்குகிறார்கள்.
வெப்சைட்தொடங்குவதற்கு என்ன தேவை
- ஒரு வெப்சைட் தொடங்குவதற்கு டொமைன் (domain) மற்றும் ஹோஸ்டிங்(hosting) தேவைப்படும். டொமைன் என்பது நமது வெப்சைட்டிற்கான முகவரி.
- எடுத்துக்காட்டு www.dosomethingnew.in இங்கே in -ற்கு பதில் com, org, us, tv, co.in இந்தமாதிரி பல முகவரிகளில் நமக்கு எது வேண்டுமோ தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு விலை.
- அடுத்து ஹோஸ்டிங் என்பது நமது வெப்சைட்டை இணைய சர்வர்களுடன் இணைத்து அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது. அதற்கு ஒரு விலை.இவ்வாறாக நாம் வெப்சைட் தொடங்குவதற்கு பல நிறுவனங்கள் உள்ளன.
நாம் இந்த பதிவில் ZolaHost என்ற நிறுவனத்தில் குறைந்த விலையில் மிக எளிதாக நாமே எப்படி ஒரு வெப்சைட்டிற்கு டொமைன் ஹோஸ்டிங் வாங்குவது என்று பார்க்கலாம்.
டொமைன் மற்றும் ஹோஸ்டிங் வாங்கும் வழிமுறைகள்
இந்த ZolaHost லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வந்து இதில் MY ACCOUNT – REGISTER என்பதை கிளிக் செய்து,

உங்களின் பெயர், முகவரி, இ மெயில், மொபைல் எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை டைப் செய்து REGISTER செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக LOGIN செய்து இந்த பக்கத்திற்கு வந்து DOMAINS என்பதை கிளிக் செய்து அதில் SEARCH DOMAINS ஐ தேர்ந்தெடுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்களுக்கு தேவையான வெப்சைட் பெயரை டைப் செய்து com,in,tk,us,co.in என்பதையும் தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் டைப்செய்த டொமைன் வேறு யாரும் பயன்படுத்தாமல் இருந்தால் AVAILABLE என்று வந்துவிடும். அடுத்து WebHosting என்பதை தேர்ந்தெடுத்து உங்கள் தேவைக்கேற்ற ப்ளான்-ஐ தேர்ந்தெடுங்கள்.
இதில் இந்த Advance Plan என்பது அனைவருக்கும் பெரும்பாலும் போதுமானதாக இருக்கும்.
அடுத்த பக்கத்தில் Register a New Domain -ஐ தேர்ந்தெடுத்து நீங்கள் தேர்வு செய்த டொமைனை இங்கே டைப் செய்து CHECK -ஐ கிளிக் செய்து அடுத்து Continue – ஐ கிளிக் செய்யுங்கள்.
அடுத்தததாக வரும் பக்கங்களில் Continue – ஐ கிளிக் செய்யுங்கள்.
அடுத்து Apply Promo Code என்ற இடத்தில் 25FORALL என்ற code -ஐ டைப் செய்து Validate Code என்பதை கிளிக் செய்தால் மொத்த விலையில் 25 % குறையும்.
அடுத்தது Checkout என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் கொடுத்த முகவரி விவரங்கள் வரும்.
அதற்கு கீழே Payment Details -ல் நீங்கள் எந்த வழியில் பணம் செலுத்த போகிறீர்களோ அதை தேர்ந்தெடுங்கள்.
அனைத்தையும் ஒருமுறை பரிசோதித்து விட்டு Complete Order என்பதை கிளிக் செய்தால் Unpaid Invoice வரும். அதில் PAY NOW என்பதை கிளிக் செய்து பணம் செலுத்திக்கொள்ளலாம்.
அடுத்து வரும் பதிவில், நாம் வாங்கிய டொமைன் மற்றும் ஹோஸ்டிங் -ஐ வைத்து ஒரு வெப்சைட்டை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள்.