வாகன இன்சூரன்ஸ் ஆன்லைனிலேயே புதுப்பிப்பது எப்படி

9232

ABOUT THIS POST (இந்த பதிவின் நோக்கம்)

வணக்கம் நண்பர்களே,இந்த பதிவில் அனைத்து  TWO WHEELER AND CAR இன்சூரன்ஸ் -களும் ஆன்லைன் -ல் எவ்வாறு புதுப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.இந்த பதிவை தொடர்ந்து மேலும் இன்சூரன்ஸ், வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு, மருத்துவ காப்பீடு போன்ற அணைத்து துறைகளிலும் நமக்கு தேவைப்படும் பயனுள்ள விவரங்களை நமது தமிழ் மொழியிலேயே பதிவிடப்போகிறோம். எனவே நமது இணையப்பக்கத்தை தொடர்ந்து பார்வையிட்டு பயன் பெறுங்கள்.

USES OF ONLINE RENEWAL (ஆன்லைன்-ல் புதுப்பிதலின் பயன்கள்)

  • உங்கள் வாகனத்தின் காப்பீடு முடிந்திருந்தாலும்,முடியாவிட்டாலும் நாம் நமது வாகனத்தை ஆய்வுக்கு காட்ட தேவை இல்லை.
  • தேவை இல்லாத அலைச்சல் இல்லை. காப்பீட்டின் தவணை தொகையும் குறைவாக இருக்கும்.
  • பல நிறுவனங்களிலிருந்து நமது வாகனத்திற்கான தவணை தொகைகளையும் பார்த்து அதில் சிறந்ததை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்.

STEP 1

பாலிசி பஜார் இணையதளத்திற்கு வந்துகொள்ளுங்கள்.

கிளிக் செய்ததும் வரும் இந்த பக்கத்தில், உங்களது வாகனம் கார் அல்லது மோட்டார் சைக்கிள் என்பதை தேர்ந்தெடுக்கவும்.

two wheeler and car insurance 1

 

அடுத்து வரும் இந்த பக்கத்தில் வாகனத்தின் எண்ணை  டைப் செய்து, GET DETAILS-ஐ கிளிக் பண்ணவும்.
two wheeler and car insurance 2

STEP 2

அடுத்து உங்களது வாகனத்தின் விவரங்கள் வந்து விடும். அதாவது வாகனத்தின் கம்பெனி,தயாரித்த வருடம்,கலர்,மாடல் இந்த விவரங்கள் வந்து விடும். உங்கள் வாகனத்தின் விவரங்கள் வரவில்லை என்றால் நீங்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் வரும். அதில் உங்கள் வாகனத்தின் விவரங்களை சரியாக தேர்ந்தெடுங்கள். இதற்கு முன்பு நீங்கள் காப்பீடு எடுத்த நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்ததும் இந்த மாதிரி உங்கள் வாகனத்தின் விவரங்கள் அனைத்தும் தெரியும். ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு கீழே GET QUOTES – ஐ கிளிக் செய்யவும்

two wheeler and car insurance 3

அடுத்து பல நிறுவனகளில் இருந்து  உங்கள் வாகனத்திற்கு இன்சூரன்ஸ்  தொகை, மற்றும் உங்கள் வாகனத்தின் மதிப்பு(IDV),NO CLAIM BONUS PERCENTAGE போன்ற விவரங்களுடன் தெரியும்

two wheeler and car insurance 4

[wp_ad_camp_3]

உங்கள் வாகனத்தின் மதிப்பு குறைவாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால், இந்த இடத்தில் EDIT -ஐ கிளிக் செய்து வாகனத்தின் மதிப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

two wheeler and car insurance 5

two wheeler and car insurance 6

மேலும் நீங்கள் இந்த THIRD PARTY LIABILITY ONLY – ஐ கிளிக் செய்யுங்கள். THIRD PARTY INSURANCE மட்டும் வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் நமக்கு தவணை தொகை குறையும். ஆனால் விபத்து நேரும் பட்சத்தில், உங்கள் வாகனத்திற்கு எந்த காப்பீடும் விண்ணப்பிக்க இயலாது.

விபத்தில் காயமடைந்த 3 – ம் நபருக்கு மட்டுமே காப்பீடு கோர முடியும். எனவே  யோசித்து THIRD PARTY INSURANCE மட்டும் போதுமா என்று முடிவெடுக்கவும்.

two wheeler and car insurance 7

STEP 3

இறுதியாக நீங்கள் எந்த நிறுவனத்தில் உங்கள் வாகனத்திற்கு காப்பீடு எடுக்க போகிறீர்களோ அந்த தொகையை கிளிக் பண்ணவும்.

two wheeler and car insurance 8

உங்கள் வாகனத்தின் RC புக் -ல் உள்ள மாதிரி உங்களது பெயர், மொபைல் எண்,இமெயில்,முகவரி,ஊர்,மாநிலம்,அஞ்சல் குறியீட்டு எண் போன்ற விவரங்களை இந்த பக்கத்தில் பதிவு செய்து விட்டு CONTINUE TO STEP 2 -ஐ கிளிக் பண்ணுங்கள்.

two wheeler and car insurance 9

STEP 4

அடுத்து வரும் இந்த பக்கத்தில் உங்கள் வாகனத்திற்காக நீங்கள் எடுக்கும் இந்த காப்பீட்டுக்கு வாரிசு தாரரின் பெயர்,உறவு முறை,வாரிசின் வயது போன்ற விவரங்களை பதிவு செய்து விட்டு CONTINUE TO STEP 3 -ஐ கிளிக் செய்யுங்கள்.

two wheeler and car insurance 11
[wp_ad_camp_3]

இந்த பக்கத்தில் உங்களது வாகனத்தின் Engine Number,Chassis Number,Previous Policy Number போன்ற விவரங்களை டைப் செய்ய வேண்டும். இந்த முறை பெரும்பாலும் பழைய வாகனத்திற்கு, முந்தைய POLICY NUMBER மட்டுமே கேட்கும். புது வாகனத்திற்கு இவை அனைத்தும் டைப் செய்ய வேண்டும். எனவே கேட்பதற்கு ஏற்றவாறு டைப் செய்துவிட்டு, அடுத்து SAVE AND PROCEED -ஐ கிளிக் செய்யுங்கள்.

two wheeler and car insurance 12

வரும் பக்கத்தில் நீங்கள் பதிவு செய்த அனைத்து விவரங்களும் வரும். அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்த பிறகு,வலது புரத்தில் இந்த இடத்தில் உள்ள தகவல் என்னவென்று படித்து பாருங்கள்.இது என்னவென்றால் உங்கள் வாகன காப்பீட்டுடன் உங்களுக்கும் விபத்து காப்பீடு எடுத்துக்கொள்ள நாம் அனுமதி அளித்த மாதிரி TICK OPTION இருக்கும். அது உங்களுக்கு தேவை இல்லை என்றால் அந்த TICK OPTION -ஐ நீக்கி விட்டு CLICK TO PAY NOW -ஐ கிளிக் செய்யவும்.

two wheeler and car insurance 13

STEP 5

two wheeler and car insurance 14

 

அதன் பிறகு நீங்கள் இதில் உள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். பிறகு நாம் கொடுத்த இமெயில் -க்கு பாலிசி PDF FILE வடிவில் கிடைக்கும். அதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். மேலும் நமது முகவரிக்கு பாலிசி அஞ்சல் வழியாகவும் வரும்.

 

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற அனைவருக்கும் உங்களால் முடிந்த வரை ஷேர் செய்யுங்கள்.

4 COMMENTS