Contents
ஸ்மார்ட் ரேஷன் கார்டு
தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டு விட்டது. அந்த குடும்ப அட்டையில் முகவரி மாற்றம்,உறுப்பினர் சேர்ப்பு,உறுப்பினர் நீக்கம் போன்ற விவரங்களை நாமே ஆன்லைனில் செய்து கொள்ளலாம். எங்கேயும் வரிசையில் காத்துகிடக்க வேண்டியதில்லை, யாருக்கும் பணம் செலுத்த தேவை இல்லை.
முகவரி மாற்றம்
குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.https://www.tnpds.gov.in/
கிளிக் செய்ததும் வரும் இந்த பக்கத்தில் முகவரி மாற்றம் செய்ய என்ற இடத்தில் கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக வரும் பக்கத்தில் உங்கள் குடும்ப அட்டையுடன் இணைத்துள்ள மொபைல் எண்ணை டைப் செய்து, கீழே உள்ள கேப்ட்சா எண்ணையும் டைப் செய்து பதிவு செய் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவு எண்ணை இந்த இடத்தில் டைப் செய்து பதிவு செய் என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து நீங்கள் இந்த பக்கத்திற்கு வருவீர்கள். இங்கு உங்களது விவரங்கள் இருக்கும். அதில் புதிய முகவரி விவரங்கள் என்பதற்கு கீழே உங்களது புதிய முகவரியை முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் பிழையில்லாமல் டைப் செய்யுங்கள்.
அஞ்சல் எண், மாவட்டம், கிராமம் போன்ற அனைத்து விவரங்களையும் தேர்வு செய்யுங்கள்.
அடுத்து இங்கே கேட்கப்படும் புதிய முகவரி உள்ள ஆவணங்களில் உங்களிடம் உள்ளதை தேர்வு செய்து பதிவேற்றம் செய்யுங்கள்.
பிறகு இங்கே உறுதிப்படுத்துதல் கீழே டிக் செய்து பதிவு செய் – ஐ கிளிக் செய்யுங்கள். இவ்வாறு செய்ததும் அடுத்த பக்கத்தில் ஒரு ஒப்புகை எண் வரும். அதை பத்திரமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஒப்புகை எண்ணை வைத்து இந்த லிங்கை கிளிக் செய்து https://www.tnpds.gov.in/pages/servicerequest/service-request-status-1.xhtml
உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் செய்யும் வழிமுறைக்கான வீடியோ
ஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் செய்ய தேவையான சான்றுகள்
- ஆதார் கார்டு
- வாக்காளர் அட்டை
- சமையல் எரிவாயு புத்தகம்
- உங்கள் பெயரில் வீட்டு வரி ரசீது
- வாடகை ஒப்பந்த பத்திரம்
- குடிசை மாற்று ஒப்பந்த பத்திரம்
- வீட்டு ஆவணங்கள்
- மின்சார கட்டண ரசீது
- BSNL தொலைபேசி ரசீது
- அஞ்சலக மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள்
- பாஸ்போர்ட்
- ஓட்டுனர் உரிமம்
- பான் கார்டு
- வீட்டு வசதி வாரிய ஆவன பத்திரங்கள்
- அஞ்சல் துறையால் கொடுக்கப்படும் அடையாள அட்டை
இவற்றுள் ஏதாவது ஒரு அடையாள சான்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு 100 KB க்குள் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். மொபைலில் ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி என்ற வீடியோ கீழே உள்ளது. தேவைப்பட்டால் பார்வையிடுங்கள்.
மேலும் ஸ்மார்ட் ரேஷன்கார்டு பற்றிய வீடியோக்கள்
உங்கள் நட்புகளும், உறவுகளும் பயன்பெற முடிந்தவரை பகிருங்கள். நன்றி.
[…] ரேசன்கடை […]