வாக்காளர் அட்டை
VOTER ID என்பது ஓட்டு போடுவதற்கு மட்டுமின்றி பல அரசு மற்றும் தனியார் துறைகளில் முக்கியமாக அனுமதிக்கப்படும் அடையாள அட்டைகளில் ஒன்று. நாம் வேலைக்ககாவும், வீட்டிற்காகவும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறும்போது நமது அடையாள சான்றுகள் அனைத்திலும் முகவரியை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு முந்தய பதிவில் ஆதாரில் எப்படி ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்வது என்று பார்த்தோம். இந்த பதிவில் வாக்களர் அட்டையில் எவ்வாறு முகவரி மாற்றம் ஆன்லைனில் செய்வது என்று பார்க்கலாம்.
வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் இரண்டு வகைப்படும்.
- ஒரே பாராளுமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம்.
- ஒரு பாராளுமன்ற தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு முகவரி மாற்றம்.
முகவரி மாற்றத்திற்கு தேவையான அடையாள சான்றுகள்
ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய
- பாஸ்போர்ட்
- ஓட்டுனர் உரிமம்
- வங்கி, கிசான்,அஞ்சலக கணக்கு புத்தகங்கள்
- ரேசன் கார்டு
- வருமான வரி மதிப்பீட்டு ஆணை
- வாடகை ஒப்பந்தம்
- குடிநீர் ரசீது
- டெலிபோன் ரசீது
- மின்சார ரசீது
- சமையல் எரிவாயு ரசீது
- இந்திய அஞ்சலகத்தால் அனுப்பப்பட்ட அஞ்சல், கடிதம்
ஒரு பாராளுமன்ற தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய
வயதுக்கான சான்று
- பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அல்லது திருநங்கை சான்றிதழின் நகராட்சி அதிகாரிகள் அல்லது மாவட்ட அலுவலகத்தால் வழங்கப்பட்ட பிறந்த சான்றிதழ்
- பிறப்பு சான்றிதழ் ,எந்த அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது கடந்த பள்ளியில் இருந்து பெற்ற சான்றிதழ் (அரசு / அங்கீகாரம் பெற்றது)
- 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட தேர்ச்சிகள் பெற்றிருப்பின் அவர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கொடுக்க வேண்டும்
- பிறந்த தேதி இருந்தால் 8 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கலாம்
- பிறந்த தேதி இருந்தால் 5 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கலாம்
- பாஸ்போர்ட்
- பான் கார்டு
- ஓட்டுனர் உரிமம்
- UIDAI ஆல் வழங்கப்பட்ட ஆதார் கடிதம்
இருப்பிடச்சான்று
- வங்கி,கிசான்,அஞ்சலக கணக்கு புத்தகம்
- ரேசன் கார்டு
- பாஸ்போர்ட்
- ஓட்டுனர் உரிமம்
- வருமான வரி மதிப்பீட்டு ஆணை
- சமீபத்திய வாடகை ஒப்பந்தம்
- அந்த முகவரிக்கு விண்ணப்பதாரர் அல்லது பெற்றோரைப் போன்ற அவரது உடனடி உறவு என்ற பெயரில் புதிய முகவரி / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பு பில்
- இந்திய அஞ்சலகத்தால் அனுப்பப்பட்ட அஞ்சல், கடிதம்
ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
இந்த லிங்கை கிளிக் செய்துகொள்ளுங்கள். வாக்காளர் அட்டை முகவரி மாற்றம்.
இந்த பக்கத்தில் உங்களது விவரங்களை படத்தில் உள்ளாவாறு அந்தந்த இடங்களில் டைப் செய்யுங்கள்.
பிறகு உங்களது புதிய முகவரியை தவறில்லாமல் அஞ்சலகம்,அஞ்சல் எண் போன்ற தகவல்களை டைப் செய்து, முன்பே ஸ்கேன் செய்து வைத்திருக்கும் உங்களது போட்டோ, அடையாள சான்று ஆகியவற்றை தேர்வு செய்து UPLOAD செய்யுங்கள். பின்னர் இடம், தேதி டைப் செய்து கீழே SUBMIT -ஐ கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு ஒப்புகை எண் உள்ள பக்கம் வரும் இதை பத்திரமாக சேமித்து வையுங்கள். இதை வைத்துதான் நம்முடைய VOTER ID விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும்.
ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு முகவை மாற்றம் செய்வது எப்படி?
இந்த லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு செல்லுங்கள். வாக்காளர் அட்டை தொகுதி மாற்றம்
படத்தில் உள்ளது போல உங்கள் விவரங்களை அந்தந்த இடங்களில் டைப் செய்யுங்கள்.
குறிப்பு
உங்களுடைய மொபைல் எண் மற்றும் இ மெயில் கண்டிப்பாக கொடுக்கவும். ஏனென்றால் நமது விண்ணப்பத்தின் நிலை பற்றிய தகவல் தொடர்புக்கு பயன்படும். இறுதியில் வரும் ஒப்புகை எண்ணை பத்திரமாக சேமித்து வைத்து, இந்த லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.விண்ணப்பத்தின் நிலை .
உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக நிறைவேறியதும் உங்கள் அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று உங்கள் VOTER ID – ஐ பெற்றுக்கொள்ளலாம்
[…] வாக்காளர் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி, பாலினம், […]
[…] வாக்காளர் அட்டை […]
[…] வட்டி விகிதம் எவ்வளவு-VOTER ID PORT AND SERIAL NUMBER-VOTER ID ADDRESS CHANGE ONLINE-cibil score check free in cibil official […]
Dear sir,
I have one doupt in case for example now i living in mumbai after how can I change my address from tamil nadu to mumbai state which form i can will pls give feed back soon
Dear sir,
I have one doupt in case for example now i living in mumbai after marriage how can I change my address from tamil nadu to mumbai state which form i can will and send pls give feed back me soon
[…] PAN, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவைகளை நமது PF Account […]