Contents
Passport
இன்றைய கால கட்டத்தில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது முன்பைவிட அதிகரித்துள்ளது. வேலைக்கு மட்டுமின்றி சுற்றுலா, ஆன்மீகம், உறவினர்களை காண்பதற்கு போன்ற அனைத்து தேவைகளுக்காகவும் வெளிநாட்டுக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் passport விண்ணப்பிக்கும் முறை பற்றிய தெளிவான தகவல்கள் கீழே உள்ள வீ டியோவில் உள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க பாஸ்போர்ட் சேவா லிங்க் மற்றும் என்னென்ன சான்றுகள் தேவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க
http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான வயது சான்றுகள்
அனாதை இல்லம் அல்லது சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் தலைமை அதிகாரியின் அதிகாரபூர்வ பிறந்த தேதியின் உறுதி கடிதம்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்
அரசாங்க ஊழியராக இருந்தால் வேலை பார்ப்பதற்கான சான்றிதழ், ஓய்வூதிய சான்றிதழ் இவைகளில் அதிகாரபூர்வ அதிகாரியின் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்கலாம்.
மாநில அரசால் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம்
பான் கார்டு
LIC பத்திரங்கள்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ்
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான முகவரி சான்று
[wp_ad_camp_3]
ஆதார் அட்டை
ஆயுத உரிமம்
வங்கி, கிஸான்,அஞ்சலக சேமிப்பு புத்தகங்கள்
வாக்காளர் அட்டை
மின்கட்டண ரசீது
மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம்
கணவன் அல்லது மனைவி – யின் பாஸ்போர்ட்
SC,ST,OBC சான்றிதழ்கள்
பாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் என்ன பயன்
ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் பணம் கண்டிப்பாக மிச்சப்படுத்தலாம். வெளியில் கொடுத்து விண்ணப்பிக்க குறைந்தது 2000- லிருந்து எவ்வளவு முடியுமோ வாங்கி கொள்கின்றனர். எனவே நமக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 1500 மட்டுமே ஆகும்.
நாம் எங்கும் அலையாமல் நமது வீட்டிலேயே இருந்து பொறுமையாக நமது தகவல்களை கொடுத்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைக்கான வீடியோ