உடல் சூடு குறைய
இன்றைய காலக்கட்டத்தில் பருவநிலை ஒரே சீராக இருப்பதில்லை. மழைக்காலத்தில் வெயில் அதிகம் காணப்படுகின்றது.வெயில் காலத்தில் மழை அதிகம் காணப்படுகின்றது. இதனால் நம் உடலில் ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானது உடல் சூடு ஆகும். அந்த உடல் சூடு குறைய நம் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து செய்யகூடிய மருந்தை பற்றி இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
மேலும் உடல் சூடு ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள்:
உடல் சூடு எதனால் ஏற்படுகிறது என்றால் அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் டிவி முன்னால் அமர்வதனால், ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு மொபைல் பார்ப்பது, அடிக்கடி அதிக தொலைவில் பயணம் செய்வதனால்,ஷோபா மற்றும் சேர்களில் அதிக நேரம் அமர்வதனால், மற்றும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.
உடல் சூட்டினால் ஏற்ப்படக்கூடியப் பாதிப்புக்கள் :
- உடலில் சூட்டுக்கட்டிகள் தோன்றுதல்
- அதிக தலைவலி
- அதிக வயிற்று வலி
- கண் எரிச்சல்
- தலைமுடி உதிர்தல்
- தோல் நோய் எற்ப்படுதல்
- உடல் எடை குறைதல்
- முகப்பரு எற்ப்படுதல்
உடல் சூட்டினை சரி செய்யும் வழிமுறைகள்
இப்படி நேரம் இல்லாதவர்கள் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே தலையில் மட்டும் நல்லெண்ணெய் தேய்த்து பின் குளித்து வந்தால் முழு எண்ணெய் குளியலில் கிடைக்கும் பயன்களில் ஒரு கால்வாசி அளவாவது கிடைக்கும்.
அதுவும் முடியாதவர்கள் கீழே உள்ள சித்தர்கள் சொன்ன முறையை செய்து பாருங்கள்
தேவையான பொருட்கள் :
- நல்லெண்ணை
- பூண்டு
- மிளகு
செய்முறை:
நல்லெண்ணெய் ஒரு குழிகரண்டி அளவு எடுத்துக்கொள்ளவும்.அதை அடுப்பில் வைத்து நன்கு சூடு பண்ணவும். பின்பு அதில் தோல் உரிக்காத பூண்டினையும்,மிளகினையும் சேர்த்து சூடு பண்ணவும்.அவை நன்கு சூடானதும் அதை இறக்கி நன்கு ஆறவைக்கவும்.
அவை ஆறிய பின் காலில் உள்ள இரண்டு கட்டைவிரல்களில் நன்கு தடவவும். 2 நிமிடம் கழித்து கால்களை கழுவி விடலாம்.
இதனால் உடலில் உள்ள சூடு முழுவதும் தணிந்து உடல் குளிர்ச்சியாக இருப்பதை உணர முடியும்.
அந்த காலத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க சித்தர்கள் கூறிய மருத்துவ முறையும் இதுதான்.
இந்த வழிமுறைகளை பின்பற்றக்கூடாதவர்கள் :
காய்ச்சல், சளி, வீசிங், ஆஸ்துமா உள்ளவர்கள் இம்முறையை பின்பற்றக்கூடாது.
[…] காலத்தில் வேனல் கட்டி, அம்மை மற்றும் உடல் சூடு சம்பத்தப்பட்ட நோய்கள் தாக்கும். மழை […]
[…] ஸ்பூன் சுண்ட வத்தல் – தேவையான அளவு நல்லெண்ணெய் கடுகு-1/4 ஸ்பூன் காய்ந்த மிளகாய்-4 புளி-1 […]