நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் போன் உலகத்தில் எல்லாமே ஆன்லைனில்தான் நடக்கிறது. அதில் முக்கியமாக பண பரிமாற்றம் அதிக அளவில் ஆன்லைனில் செய்யப்படுகிறது. வங்கிக்கு சென்று வரிசையில் நிற்காமல் இருந்த இடத்தில் இருந்து அனைத்து பரிவர்த்தனைகளையும் முடித்துவிடும் அளவிற்கு வசதிகள் உள்ளன. அதே போல நாம் செலுத்த வேண்டிய போன், மின்சாரம், கிரெடிட்கார்டு, Dth, அரசாங்க வரிகள், பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்கள் இன்னும் பலவற்றை நாம் எங்கும் அலையாமல் மொபைலிலேயே செலுத்தி கொள்கிறோம். இந்த மாதிரி பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு தற்பொழுது முக்கியமாக தேவைப்படும் MMID CODE பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
MMID CODE
MMID CODE பெரும் முறைகள்
- MMID தேவைப்படுபவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று அங்கு கொடுக்கப்படும் MMID FORM -ஐ பூர்த்தி செய்து கொடுத்தால் பெற்றுக்கொள்ளலாம்
- மொபைல் பாங்கிங் வசதிக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது USER NAME, பாஸ்வேர்டு இவைகள் வரும் கவரில் இந்த MMID code – ம் வரும்
- அடுத்து ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு விதத்தில் SMS அனுப்பி விண்ணப்பிப்பதன் மூலம் இந்த MMID code -ஐ பெற முடியம்
- இன்னும் ஒருசில வங்கிகளில் மொபைல் பாங்கிங் APP மூலமாகவே MMID code உருவாக்கிக்கொள்ளும் வசதியும் உள்ளன
கீழே சில வங்கிகளுக்கு SMS மூலமாக MMID code பெறுவதற்கான மொபைல் எண்களும் SMS டைப் செய்யும் முறையும் உள்ளது. தேவை படுபவர்கள் பயன் படுத்திக்கொள்ளுங்கள்.
குறிப்பு; SMS முறையில் உங்கள் MMID எண்ணை தெரிந்துகொள்ள உங்கள் வங்கி கணக்குடன் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண்ணை மட்டுமே பயன்படுத்த முடியும்.
SBI BANK
MMID SBI என்று டைப் செய்து 9223440000 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கான MMID code SMS வாயிலாக வரும்
AXIS BANK
MMID என்று டைப் செய்து 5676782 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கான MMID code SMS வாயிலாக வரும்
HDFC BANK
MMID என்று டைப் செய்து 5676712 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கான MMID code SMS வாயிலாக வரும்
ICICI BANK
MMID<SPACE> என்று டைப் செய்து 9222208888 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கான MMID நம்பர் SMS -ல் வரும்
CANARA BANK
CAN MMID என்று டைப் செய்து 5607060 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கான MMID code SMS மூலமாக வந்துவிடும்
KOTAK MAHINDRA BANK
K MMID B என்று டைப் செய்து 5616788 அல்லது 9971056767 என்ற எண்ணிற்கு SMS செய்தால் உங்களின் MMID நம்பர் வரும்
UNION BANK OF INDIA
MMID என்று டைப் செய்து 9223173921 என்ற எண்ணிற்கு SMS அனுப்பினால் உங்களின் MMID நம்பர் SMS -ல் வரும்
BANK OF BARODA
MMID என்று டைப் செய்து 9223173928 என்ற எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கான MMID நம்பர் SMS -ல் வந்து சேரும்
INDIAN BANK
MMID <space>YOUR ACCOUNT NUMBER டைப் செய்து 9444394443 என்ற எண்ணிற்கு அனுப்ப்பினால் MMID நம்பர் SMS -ல் வரும்
CITY BANK
MMID <space> ATM கார்டின் கடைசி நான்கு இலக்கங்கள் டைப் செய்து 52484 என்ற எண்ணிற்கு அனுப்பி உங்களின் MMID நம்பரை பெறலாம்
IDBI BANK
MMID என்று டைப் செய்து 5676777 என்ற எண்ணிற்கு அனுப்பி உங்களின் MMID எண்ணை பெறலாம்
PUNJAB NATIONAL BANK
MMID என்று டைப் செய்து 5607040 என்ற எண்ணிற்கு SMS செய்து உங்களின் MMID எண்ணை பெறலாம்