Oxygen Plant ஆக்சிஜன் அதிகம் தரும் இந்த மரங்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கா? அப்போ நீங்கதான் கெத்து!

14111
ஆக்சிஜன் தாவரங்கள் aksijan oxygen plants oxygen Oxygen Plant ஆக்சிஜன் அதிகம் தரும் இந்த மரங்களை உங்கள் வீட்டில் அருகில் இருக்கா! அப்போ நீங்கதான் கெத்து ஆக்சிஜனை இரவு பகலில் வாரி வழங்கும் தாவரங்கள் Oxygen Plants

ஆக்சிஜன்

                இப்பொழுது நகரமாக இருந்தாலும் கிராமமாக இருந்தாலும் காற்று, நீர், மற்றும் சுற்று சூழல் மாசு என்பது அதிகமாகிவிட்டது. அந்த காலத்தில் பேசிக்கொள்வார்களாம், வரும் காலத்தில் தண்ணீரைக்கூட காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உண்டாகலாம் என்று. அது இன்று நடந்து கொண்டிருக்கிறது. இன்றுஉச்சத்தில் இருக்கும் வியாபாரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வியாபாரமும் ஒன்று.

அதேபோல் இப்பொழுது நடக்கும் ஆய்வுகளில் பெரும்பான்மையான முடிவுகள் வரும் காலங்களில் நாம் தூய்மையான பிராணவாயுக்காக (oxygen) காற்றை காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழல் வரும் என்று கூறுகிறது. சரி அத விடுங்க. அது எதிர்காலம்.

இப்பொழுது நம்மையும், நம்மை சுற்றியுள்ள சிறிய பகுதியையாவது நம்மால் முடிந்த அளவு மாசு இல்லாமல் சுத்தமான ஆக்ஸிஜன் நிறைந்த பகுதியாக மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இன்று 70 சதவிகித மக்கள் தங்கள் வீடுகளில் அழகுக்காக தொட்டிகளில் செடிகளை வளர்த்து வருகிறார்கள். ஒரு சிலர் தங்கள் வீடுகளில் சிறு தோட்டம் அமைத்து செடிகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் இப்படி நீங்கள் வளர்க்கும் தாவரங்களில் பின்வரும் தாவரங்களையும் Oxygen Plants சேர்த்து வளர்த்து வாருங்கள். உங்கள் வீட்டிலும், வீட்டை சுற்றியும் நல்ல ஆக்சிஜன் நிறைந்திருக்கும்.

இரவிலும் பகலிலும் ஆக்சிஜனை வாரி வழங்கும் தாவரங்கள் Oxygen Plants

ஆக்சிஜன் தாவரங்கள் aksijan oxygen plants oxygen Oxygen Plant ஆக்சிஜன் அதிகம் தரும் இந்த மரங்களை உங்கள் வீட்டில் அருகில் இருக்கா! அப்போ நீங்கதான் கெத்து ஆக்சிஜனை இரவு பகலில் வாரி வழங்கும் தாவரங்கள் Oxygen Plants

  • கற்றாழை
  • துளசி செடி
  • பாம்பு செடி
  • புங்கை மரம்
  • வேப்ப மரம்
  • அரச மரம்
  • மூங்கில்

பொதுவாக தாவரங்கள் அனைத்தும் பகலில் ஆக்சிஜனையும் இரவில் கார்பன்டை ஆக்சைடையும் வெளியிடும். ஆனால் இந்த பாம்பு செடி, துளசி செடி இவைகள் இரவிலும் ஆக்சிஜனை வெளியிடும் தாவரங்களாகும். கற்றாழை, புங்கை, வேம்பு, அரச மரம், மூங்கில் இவை அனைத்தும் ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் தாவரங்களாகும். அதிலும் ஒரு மூங்கில் கொத்து ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை விட அதிககமாக உற்பத்தி செய்கிறது.

எனவே பெரிய அளவில் மரங்களை நாட்டுக்காக நட்டு வளர்க்க வில்லையென்றாலும், நமது வீட்டுக்காகவாவது மேற்கண்ட தாவரங்களை Oxygen Plants வளர்த்து நம்மை சுற்றியுள்ள சிறு பகுதியையாவது தூய சூழலில் பாதுகாப்போம். நன்றி.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.