Contents
தலைவலி
தலை வலி என்பது 90 சதவிகித மக்களுக்கு, தங்களுக்கு எதற்கு வருகிறது என்று தெரியாமல் கண்ட மாத்திரைகளையும் தைலங்களையும் பயன்படுத்தி நமது உடலை உள்ளேயும் வெளியேயும் கெடுத்துக்கொள்கிறோம்.
ஒருசிலருக்கு ஒற்றை தலைவலியாக வலிக்கும். இது மட்டும்தான் நாம் மிகவும் கவனமாக மருத்துவரிடம் சென்று தக்க மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் சாதரணாமாக இரண்டுப்பக்கமும் வரும் தலைவலியானது எதோ ஒரு நோயின் அறிகுறியாக மட்டுமே இருக்கும். ஆனால் நாம் தலை வலி வந்ததும் என்ன செய்கிறோம்? ஒரு மாத்திரை போடுகிறோம். மாத்திரை தலைவலியை குணமாக்குவது கிடையாது. மாறாக நம்மால் அந்த வலியை உணரமுடியாதவாறு மாற்றுகிறது.
இந்த மாதிரி இரண்டு பக்கமும், சாதரணமாக அனைவருக்கும் வரும் தலைவலியானது பெரும்பாலும் மூளைக்கு அல்லது மற்ற உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறையும்போது அதை நமக்கு அறிவுறுத்தவே வருகிறது. அல்லது உடலில் ஏற்படும் சூட்டினாலும் வருகிறது. 98 சதவிகித தலைவலி இந்த காரணத்தினால்தான் வருகிறது. இதை நாம் சரிசெய்தாலே போதும் தலைவலியை விரட்டிவிடலாம்.
தலைவலியை போக்க எளிமையான வழிகள்
- தினமும் காலை வெறும் வயிற்றில் ஒன்னரை லிட்டர், மாலையிலும் ஒன்னரை லிட்டர் தண்ணீரை குடித்து வந்தால், நம் உடலின் இரத்த ஓட்டம் நன்கு வேகப்படுத்தப்படும். எடுத்ததும் இவ்வளவு தண்ணீர் குடிப்பது கடினம்தான். பழக்கபடுத்திக் கொள்ளுங்கள்.
- அர்த்த சிரசாசனம் என்று கூகுளில் தேடுங்கள். அதில் வரும் ஆசனத்தை பழகி செய்து வர தலைவலி என்றால் என்ன என்று கேட்பீர்கள். எல்லாவற்றையும் விட இந்த ஆசனதிற்குத்தான் தலைவலி மிரண்டோடும். ஒரு வாரம் செய்தாலே ஒரு மாதத்திற்கு உங்களுக்கு தலைவலி பிரச்சினை இருக்காது.
- எண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூட்டால் வரும் தலைவலி வராது. ஆனால் இப்பொழுதுள்ள இயந்திர வாழ்க்கையில் எண்ணெய் தேய்த்து ஊற வைத்து குளிப்பதற்கெல்லாம் யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. எனவே நாம் குளிப்பதற்கு முன் அரை மணி நேரத்திற்கு முன்பாக நல்லெண்ணெய் தலையில் வைத்து தினமும் குளித்து வந்தால் எண்ணெய் குளியலில் கிடைக்கும் பலனில் பாதி பலன் கிடைக்கும். இதனால் சூட்டினால் வரும் பிரச்சினைகள் வராது.
இந்த பதிவிற்கான வீடியோ
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.
[…] தலயனையாகப் பயன்படுத்தி வந்தால் தலைவலி,தலைப்பாரத்திலிருந்து […]