மொபைல் ஹேங்கிங் பிரச்சினை
என்னதான் 50 ஆயிரம் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து மொபைல் வாங்கினாலும் 6 மாதம் ஆனதும் மொபைல் போன் ஹேங் பிரச்சினை, பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கவில்லை போன்ற பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிக்கும். இதற்காக நாம் கண்ட கண்ட செயலிகளை நிறுவி மேலும் நமது பங்குக்கு மொபைலை ஹேங் ஆக்குகிறோம்.
இந்த மாதிரி பிரச்சினைகளை சரி செய்ய வேறு செயலிகளெல்லாம் தேவை இல்லை. நமது மொபைலில் உள்ள செட்டிங்ஸ் மாற்றுவதன் மூலமாக சரி செய்ய முடியும். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் மொபைல் போனில் அடுத்து வரும் படங்களில் உள்ளவாறு ஓபன் செய்து கொள்ளுங்கள்.
1)SETTINGS – STORAGE – INTERNAL STORAGE – CACHED DATA
இந்த பக்கம் வந்ததும் சிறிதுநேரம் process -க்கு பிறகு Cached Data என்பதை கிளிக் செய்தால் Clear Cached Data ? என்ற ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும். அதில் Ok- ஐ கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது உங்கள் மொபைலில் தேவை இல்லாத பைல் -கள் அனைத்தும் அழிந்து விடும். இந்த முறையை வாரம் ஒரு முறையாவது செய்தாலே போதும் 50 சதவீதம் மொபைல் போன் ஹேங் பிரச்சினை தீர்ந்து விடும்.
2)அடுத்து SETTINGS – APPS சென்று தேவை இல்லாத Default App – களை Disable செய்து விடுங்கள்.
3)அடுத்து SETTINGS – DEVELOPER OPTION – RUNNING SERVICES இதை கிளிக் செய்தால் நாம் பயன்படுத்தாத APPS எல்லாம் பின்புலத்தில் இயங்கிகொண்டிருப்பதை பார்க்கலாம். அதை எப்படி நிறுத்துவது என்று பார்க்கலாம்.
SETTINGS – DEVELOPER OPTION – BACKGROUND PROCESS LIMIT இதை கிளிக் செய்து NO BACKGROUND PROCESS என்பதை தேர்ந்தெடுங்கள்.
இதை தேர்ந்தெடுப்பதால் APPS -கள் பின்புலத்தில் இயங்குவது நிறுத்தப்படும். எனவே WHATSAPP, FACEBOOK போன்ற முக்கியமான APPS -களில் வரும் செய்திகளை உள்ளே சென்றுதான் பார்க்க முடியும். NOTIFICATION வராது. இதை நிறுத்துவதன் மூலம் மொபைல் ஹேங் மற்றும் பேட்டரி நீடிக்காத பிரச்சினைகள் குறையும்.
4)அடுத்து நீங்கள் இன்ஸ்டால் செய்யும் APPS -களுக்கு FILE MANAGER -ல் FOLDER இருக்கும். நீங்கள் UNINSTALL செய்த APP -களின் போல்டர்களை அழித்து விடுங்கள்.
5)SETTINGS – DATA USAGE -MOBILE DATA USAGE இதில் உங்கள் மொபைலில் உள்ள எந்தெந்த APP – கள் பின்புலத்தில் இன்டர்நெட் டேட்டா -வை பயன்படுத்தி இயங்கிகொண்டிருக்கிறது என்பதை காண முடியும்.
இதில் நீங்கள் பயன்படுத்தாத APP – களை கிளிக் செய்து BACKGROUND DATA -ஐ OFF செய்து விடுங்கள்.
இந்த முறையால் உங்களது இன்டர்நெட் டேட்டா, பேட்டரி நீடிக்கும் நேரம், INTERNAL MEMORY, RAM MEMORY, போன்றவைகள் நன்கு சேமிக்க முடியும். இதனால் மொபைல் போன் ஹேங் பிரச்சினை குறையும்.
6)PLAY STORE – SETTINGS – AUTO UPDATE APPS இதில் DO NOT AUTO UPDATE APPS என்பதை தேர்ந்தெடுங்கள்.
இதனால் உங்களது அனுமதியின்றி மொபைலில் உள்ள APP – கள் அப்டேட் ஆவது தடுக்கப்படும். இதனால் உங்களது இன்டர்நெட் டேட்டா மற்றும் INTERNAL MEMORY- யும் மிச்சப்படும்.
இந்த பதிவு உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் முடிந்தவரை பகிருங்கள். நன்றி.
ANDROID MOBILE HANGING SOLUTION VIDEOS
[…] ஆண்ட்ராய்டு செட்டிங்ஸ் -களுக்கு இந்த டெவலப்பர் ஆப்சன் நமது […]
[…] ஆப்சன் கொண்டுவருவது எப்படி-மொபைல் போன் ஹேங் ஆகாமல் இருக்க 6 வழிகள…-ரேசன் கடையில் விரல்ரேகை […]
[…] மொபைல் பாங்கிங் வசதிக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது USER NAME, பாஸ்வேர்டு இவைகள் வரும் கவரில் இந்த MMID code – ம் வரும் […]
[…] ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு மொபைல் பார்ப்பது, அடிக்கடி அதிக தொலைவில் […]