ஸ்மார்ட் போன்
இன்றைய உலகில் சிறு குழந்தை கையில் கூட ஸ்மார்ட் போன் இல்லாமல் இல்லை. அந்த அளவிற்கு ஸ்மார்ட் போன் அனைத்து மக்களுக்கும் இன்றியமையாததாக மாறிவிட்டது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.
இவ்வாறு ஸ்மார்ட் போன்கள் எந்த அளவிற்கு இந்த உலகில் நிறைந்திருக்கிறதோ அந்த அளவிற்கு அதை சுற்றி குற்றங்களும் நிறைந்திருக்கிறது. நாம் அதிக விலையுள்ள நமது மொபைலை ஒரு பொது இடத்தில் வைக்கும்போதோ, சார்ஜ் போடும்போதோ நமக்கு ஒருவித பய உணர்வு இருந்து கொண்டேதான் இருக்கும். நாம் கொஞ்சம் அசந்தாலும் சார்ஜர் ஒயர் மட்டுமே தொங்கிக்கொண்டிருக்கும்.
Mobile Anti Theft
இந்த மாதிரி பிரச்சினைகளை தவிர்க்கவும், பொது இடங்களில் நமது மொபைலை தைரியமாக வைக்கவும், சார்ஜ் செய்யவும் Google play store- ல் ஒரு அருமையான, பாதுகாப்பான ஒரு APP உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த APP – ன் பெயர் Dont’t Touch My Phone – Anti Theft Alarm
லிங்கை கிளிக் செய்து இந்த APP – ஐ இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இந்த Mobile Anti Theft App – ன் சிறப்பம்சங்கள்
பொது இடங்களில் சார்ஜ்-ல் இருக்கும்போதோ அல்லது நமது கவனம் மொபைலில் இல்லாத போது யாராவது எடுத்தாலோ, நமது அனுமதியின்றி மொபைலை பயன்படுத்த நினைத்து தவறாக அன்லாக் செய்தாலோ உடனே அபாய மணி ஒலிக்கும். மொபைல் சார்ஜில் இருக்கும்போது சார்ஜரை நீக்கினால் உடனே ஒலி எழுப்பும்
இந்த APP – ஐ எப்படி ஆக்டிவேட் செய்வது என்று இந்த வீடியோவில் பாருங்கள்
மேலும் மற்றுமொரு மிகவும் பயனுள்ள ஒரு Mobile Anti Theft App உள்ளது. இந்த App -ன் பெயர் ThirdEye. இந்த App -ல் அப்படி என்ன சிறப்பு என்று பார்த்தால், நமது மொபைலை நமது அனுமதியின்றி யாராவது திறக்க முயற்சி செய்தால் அவர்கள் தவறாக லாக் ஓபன் செய்யும்போது அவர்களை போட்டோ எடுத்து நமது இ-மெயில் அனுப்பிவிடும். கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக நீங்கள் கருதினால் அனைவருக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் Share செய்யுங்கள். நன்றி.