கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு என்ற பழமொழி நம் அனைவருக்கும் தெரியும். அதில் இந்த கொள்ளு பருப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கொள்ளு பருப்பு முக்கியமாக உடலுக்கு தேவையான சக்தியை அதிக அளவில் வழங்கியும், அதே சமயம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது. இதனாலேயேதான் நம் முன்னோர்கள் மேலே சொன்ன அந்த பழமொழியை கூறி வைத்துள்ளனர்.
கொள்ளு பருப்பு – மேலும் சில முக்கிய பயன்கள்
உடல் பருமனானவர்கள் கொள்ளு பருப்பு எந்த வகையிலாவது உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீரும், கொழுப்பும் நீங்கி உடலின் ஊளைச்சதை காணாமல் போகும்.
கொள்ளு பருப்பை முதல் நாள் இரவில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேற்சொன்ன பலனை அடையலாம்.
மேலும் பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் கோளாறுகளையும், அதிக வெள்ளை படுதலையும், பிரசவ வலிகளையும் இந்த கொள்ளு இட்டு கொதிக்க வைத்த நீர் குணப்படுத்தும்.
கொள்ளு பருப்பு அரிசியை சேர்த்து கஞ்சி செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கி நன்கு பசியெடுக்கத் தொடங்கும். மேலும் இதை ஆண்கள் அதிக அளவில் எடுத்துக்கொண்டால் தாது பலப்படும்.
கொள்ளு பருப்பு சீரகம், சோம்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜலதோஷ பிரச்சினைகள் தலை காட்டாது.
அடிக்கடி இதை செய்ய முடியாதவர்கள் கொள்ளு பருப்பை இடித்து பொடி செய்து வைத்துக்கொண்டு ரசம் வைக்கும்போது அதில் சேர்த்து பயன்பெறலாம்.
கொள்ளு பருப்பை அரைத்து அதிலிருந்து பால் எடுத்து, தண்ணீருக்கு பதில் இந்த பாலை பயன்படுத்தி ரசம், சூப் வைத்தால் சுவை கூடுவதுடன் கொள்ளின் பலன்களும் கிடைக்கும். கொள்ளில் ரசம், சூப், துவையல், குழம்பு போன்றவைகளை நமது விருப்பத்திற்கேற்ப செய்து சாப்பிடலாம். மேலும் கொள்ளு பருப்பை ஊறவைத்தும், வருத்தும் சாப்பிட்டு பலன் பெறமுடியும்.
குறிப்பு;
- எள்ளு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதை சாப்பிட்டுவிட்டு எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் பலன் தராது. எனவே சிறு உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
- எள்ளு சூடு தன்மை கொண்டது. எனவே உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் அளவாக எடுத்துக்கொள்ளவும்.
[…] உணவுகளை வாங்கி சாப்பிடுவதனால்தான் தேவையில்லாத கொழுப்புகளை உடலில் உண்டாகிறது. இத்தகைய கெட்ட […]