உங்கள் அனுமதியின்றி உங்கள் MOBILE LOCK -ஐ ஓபன் செய்ய யாராவது முயற்சி செய்தால் அவர்களை போட்டோவுடன் கண்டுபிடிக்கலாம்

1
3296
How to find Others try to open your mobile lock third eye tamil do something new

Contents

MOBILE LOCK

                ஸ்மார்ட் போன் வந்ததிலிருந்து நம்முடைய முக்கால்வாசி சொந்த தகவல்களை நமது மொபைலில்தான் நமக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ சேமித்து வருகிறோம். உதாராமாக ஆதார், ரேசன்கார்டு, வாக்காளர் அட்டை, கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு, முதலீடு (FIXED DEPOSIT & SAVINGS) போன்ற அனைத்து தகவல்களுக்குமே நமது மொபைல் எண்ணுடன்தான் இணைத்துள்ளோம். எனவே ஒருவருடைய மொபைலை எடுத்து பார்த்தால் அவரின் 95 % தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமில்லாமல் ஒருவருடைய மொபைலில் உள்ள போட்டோ, வீடியோ, SMS, வாட்சப், பேஸ்புக், இ மெயில் போன்ற அந்தரங்க தகவல்களும் உள்ளதால் இந்த ஸ்மார்ட்போன்களை அடுத்தவர்கள் எடுத்து பார்ப்பதை பெரும்பாலும் அதிகம்பேர் விரும்புவதில்லை.

How to find Others try to open your mobile lock third eye tamil do something new

இதற்காகத்தான் இப்பொழுது புதிய புதிய தொழில்நுட்பத்துடன் MOBILE LOCK அப்ளிகேஷன்கள் வந்துகொண்டேயிருக்கிறது. Face unlock, Finger print lock, Patten lock, Pin lock இந்த மாதிரி mobile locks லாம் தற்போது  நாம் பயன்படுத்தி வருகிறோம்.

அனால் நம்முடைய மொபைலை நாம் நமது வீட்டிலோ, அலுவலகத்திலோ, அல்லது ஏதாவது ஒரு பொது இடங்களிலோ வைக்கவேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போது உங்கள் அனுமதியின்றி உங்கள் மொபைலை வேறு யாராவது எடுத்து லாக்கை திறக்க முயற்சிக்கலாம். உங்கள் லாக் பக்கவாக இருக்கும் பட்சத்தில் அதை திறக்க முடியாமல் அப்படியே வைத்து விடலாம். நீங்கள் வந்து பார்க்கும்போது உங்களுடைய மொபைலை எடுத்ததற்கான அறிகுறி இருக்கும் ஆனால் யாரென்று தெரியாது.

இந்த மாதிரி நமது அனுமதியின்றி நமது Mobile Lock – ஐ திறக்க முயற்சிப்பவரை போட்டோவுடன் கையும் களவுமாக பிடிக்க ஒரு அப்ளிகேஷன் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

இந்த APP பற்றிய வீடியோ பதிவு

அப்ளிக்கேஷன் லிங்க்

https://play.google.com/store/apps/details?id=com.miragestacks.thirdeye&hl=en_IN

இந்த App – ல் உள்ள சிறப்பம்சங்கள்

  • நமது மொபைலை நமது அனுமதியின்றி யாரவது பயன்படுத்த முயற்சித்தால் போட்டோவுடன் கண்டுபிடிக்கலாம்
  • இந்த போட்டோக்களை நமது இ மெயில் -க்கு வருமாறு செய்யலாம். எனவே நம் மொபைலை யாராவது திருடி சென்றால் கூட போட்டோவை வைத்து கண்டுபிடித்து விடலாம்
  • நாம் ஒவ்வொரு முறையும் மொபைலை அன்லாக் செய்யும்போதும் கடைசியாக நாம் மொபைல் லாக் திறந்த நேரம் தெரியும். எனவே நமது  மொபைலை நம்மைத்தவிர வேறு யாரேனும் ஓபன் செய்தார்களா என்று நேரத்தை வைத்து கணக்கிடலாம்

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.

1 COMMENT