இரத்தம் தேவையா? எங்கும் அலைய வேண்டாம். இந்த Blood Donation App இன்ஸ்டால் செய்தால் போதும்.

1
3201
blood donation app tamil

Contents

Blood Donation App

உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்ற இரத்த தானம் செய்வது எவ்வளவு நன்மை என்று நம் அனைவருக்கும் தெரியும். இரத்த தானம் செய்யும் அனைவருமே நிஜ வாழ்க்கையில் ஹீரோக்கள் தான். அப்படிப் பட்ட நல்ல விஷயத்தை செய்யும் அனைவரும் நாம் பார்க்க போகும் இந்த செயலியின் வாயிலாக இணைந்துள்ளனர்.

blood donation app tamil

இந்த செயலியின் பெயர் Friends to Support. 6 நாடுகளிலிருந்து இரத்த தானம் செய்யும் ஹீரோக்கள் இந்த செயலியில் தங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து இரத்த தானம் செய்பவர்களாக பதிவு செய்துகொண்டுள்ளார்கள்.

இரத்தம் தேவை படுபவர்கள் இந்த blood donation app – ஐ இன்ஸ்டால் செய்து அதில் தேவையான இரத்த க்ரூப், எந்த நாடு, மாநிலம், மாவட்டம், ஏரியா போன்ற வற்றை தேர்வு செய்தால், நமது அருகில் இரத்த தானம் செய்யும் நண்பர்களின் பெயர்களும் அவர்களின் மொபைல் எண்ணும் பட்டியலாக வரும்.நாம் அவர்களை தொடர்பு கொண்டு விவரங்களை பேசி இரத்த தானம் பெற முடியும்.

blood donation app tamil

மேலும் இந்த செயலியில் Menu என்ற பட்டனை கிளிக் செய்து நம்முடைய நாடு, மொபைல் எண் மற்றும் நம்மை பற்றிய விவரங்களை கொடுத்து இரத்த தானம் செய்பவராகவும் இணைந்து கொள்ளலாம்.

Blood Donation App லிங்க்

https://play.google.com/store/apps/details?id=com.alen&hl=en_IN

வீடியோ

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக நீங்கள் கருதினால் அனைவருக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் Share செய்யுங்கள். நன்றி. 

1 COMMENT