Contents
வாட்டர் லெவல் கண்ட்ரோலர்
தினமும் நமது வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ தொட்டி நிறைந்துவிட்டது மோட்டரை நிறுத்துங்கள் என்று சத்தம் போடுவதை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஏனென்றால் மேலே உள்ள தண்ணீர் தொட்டி நிறைந்து வழிந்தால் மட்டுமே நமக்கு தெரியும்.
தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் நிறைந்து அனுதினமும் சுவற்றின் மீது வழிந்தால் சுவர் வீணாகிவிடும். மேலும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலத்தில் தேவையில்லாத தண்ணீர் செலவு. தேவையில்லாத மின்சார செலவு. அதுமட்டுமில்லாமல் தண்ணீர் வழிந்து பக்கத்து வீட்டு சுவற்றின் மீது தெளித்தால் தேவையில்லாத பிரச்சினைகள்.
எனவே இந்த மாதிரி பிரச்சனை களை தீர்ப்பதற்காகவே ஆட்டோமேட்டிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் என்ற சாதனங்கள் அனேக கம்பெனிகளால் கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Imagine Tech fully automatic water tank level controller
அதில் நாம் இப்போது பார்க்கப்போவது இமேஜின் என்ற கம்பெனியின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர்.
வாட்டர் லெவல் கண்ட்ரோலர் வகைகள்
மேலும் ஒருசில வசதிகளில் இந்த வாட்டர் லெவல் கண்ட்ரோலர் சாதனங்கள் கிடைக்கின்றன. அதாவது மோட்டாரை நாம் மேனுவல் ஆக ஆன் செய்துவிட்டு ஆட்டோமேட்டிக்காக ஆப் ஆகும்படி செய்துகொள்ள முடியும்.
ஒரு சில வீடுகளில் கீழே உள்ள தொட்டியில் கார்ப்பரேஷன் தண்ணீர் சேகரித்து அதை மேலே உள்ள தொட்டிக்கு ஏற்றி பயன்படுத்துவார்கள். கீழே தண்ணீர் இல்லாதபோது ஆட்டோமேட்டிக்காக மோட்டர் ஆன் செய்து ஓடினால் மோட்டார் வீணாவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் இந்த வகை வீடுகளில் மேனுவல் ஆக ஆன் செய்து ஆட்டோமேட்டிக்காக ஆகும் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் பயன்படுத்துவது நல்லது.
இதே வகை வீடுகளுக்கு இன்னொரு வாட்டர் லெவல் கண்ட்ரோலர்களும் உள்ளது. அது எப்படி செயல்படும் என்றால், கீழே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருக்கும் அளவை பொருத்து மோட்டார் இயங்குவதை நிர்வகிக்கும். இந்த வகை கண்ட்ரோலர் களில் கீழே உள்ள தொட்டிக்கு மூன்று சென்சார்கள் மேலே உள்ள தொட்டிகளுக்கு மூன்று சென்சார்கள் பொருத்தப்படும்.
எனவே உங்கள் வீட்டில் எந்த வகையில் தண்ணீர் தொட்டிகள் இருக்கிறதோ அந்த வகைக்கேற்ப வாட்டர் லெவல் கண்ட்ரோலர்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த இமேஜின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் கண்ட்ரோலர் மூன்று சென்சார்களை கொண்டது. இது மேலே உள்ள தொட்டியில் தண்ணீர் அளவு குறிப்பிட்ட லெவலுக்கு கீழே சென்றதும் மோட்டார் தானாக ஆன் ஆகிவிடும். பின்னர் தண்ணீர் நிறைந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலே வரும் பொழுது தானாக ஆப் செய்து விடும்.
மிகவும் நேர்த்தியாக இந்த வேலையை இந்த சாதனம் செய்கிறது. இந்த சாதனத்தில் சென்சார்களை எவ்வாறு இணைப்பது, மின்மோட்டார் எவ்வாறு இணைப்பது போன்ற விளக்கங்கள் இந்த வீடியோவில் தெளிவாக உள்ளது.
மேலும் இந்த சாதனம் மோட்டார் எவ்வாறு இயங்குகிறது என்பதற்கும் தெளிவான விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது. எனவே மேலும் தெளிவான தகவல்கள் உங்களுக்கு தேவை என்றால் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள். இந்த சாதனம் உங்களது தேவை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளுங்கள் இதன் விலை 799 ரூபாய் மட்டுமே.