Whatsapp software for windows and mac
இந்த பதிவில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிமுகமாக விண்டோஸ் மற்றும் மேக் டெக்ஸ்டாப், லேப்டாப் போன்ற சாதனங்களுக்கு தன்னுடைய Whatsapp Software -ஐ தயாரித்து வெளியிட்டுள்ளது, அதை பற்றி பார்க்கலாம்.
மிக நீண்ட நாட்களாக அனைவரின் கோரிக்கையாக இருந்த லேப்டாப் மற்றும் PC க்கு தனியாக Whatsapp App வேண்டும் என்பது இப்பொழுது நிறைவேறியுள்ளது.
அதாவது நாம் லேப்டாப் அல்லது PC -ல் நாம் வாட்ஸ்அப் உபயோகிக்க வேண்டும் என்றால் முன்பெல்லாம் அதற்காக ஒரு பிரௌசரில் வாட்ஸ்அப் வெப் என்பதை நாட வேண்டியிருந்தது.ஆனால் தற்பொழுது அந்த நிலை தேவை இல்லை
How to install Whatsapp software in Pc Or laptop
லிங்க் கீழே உள்ளது தேவைப்படுபவர்கள் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
https://www.whatsapp.com/download/
இதற்காக 163 எம்பி அளவுள்ள ஒரு Whatsapp Software ஐ வெளியிட்டுள்ளது. இதை நம் PC அல்லது லேப்டாப் -ல் இன்ஸ்டால் செய்து பின்னர் நமது மொபைலில் மெனுவில் சென்று Whatsapp Web என்பதை கிளிக் செய்து QR code ஸ்கேன் செய்து மிக எளிதாக இணைந்து கொள்ள முடியும்.
மேலும் லேப்டாப் அல்லது PC -யில் இந்த வாட்ஸ்அப் அப்ளிகேஷனை டாஸ்க் பார் -ல் கூட இணைத்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே மிக எளிதாக லாகின் செய்து லாக் அவுட் செய்ய முடியும்.
தொடர்ந்து வரும் மெசேஜ்களை பார்க்கவும் அதற்கு பதில் அளிக்கவும் முடியும்.
அதேபோல அப்ளிகேஷனில் தொடர்ந்து அப்டேட்கள் இருக்கும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.