மின் கட்டணம் கணக்கிடும் முறை TNEBbill calculator மின் கட்டணத்தை குறைக்க முடியும்

0
10585
மின் கட்டணம் கணக்கிடும் முறை TNEB bill calculator மின் கட்டணம் குறைய

Contents

மின் கட்டணம் கணக்கிடும் முறை – TNEB bill calculator – மின் கட்டணம் குறைய

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தமிழ்நாட்டில் நாம் பயன்படுத்தும் மின்சாரம் எத்தனை யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அதற்கேற்ப மின் கட்டணம் கணக்கிடும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறாக கணக்கிடப்படும் மின்சாரம், யூனிட்டுகளின் அளவுகளுக்கு ஏற்ப தொகை கணக்கீடு செய்யப்படும்.

எடுத்துக்காட்டுக்கு ஒன்றிலிருந்து 100 யூனிட்டுகள் வரை நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு இலவசமாகவும் அதற்குமேல், அதாவது 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட்டுகள் வரை நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு யூனிட் 1 -ற்கு ரூ. 2.50 மின் கட்டணம் கணக்கிடும் முறைப்படி வசூலிக்கப்படுகிறது.

201 யூனிட்டிலிருந்து 500 யூனிட்டுகள் வரை நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூபாய்களும் ரூ.3 வசூலிக்கிறார்கள்.

மின் கட்டணத்தை குறைக்க வழி

இதுபோல கணக்கிடப்படும் மின் கட்டணங்களை, நாம் உபயோகித்த மின் கட்டணம் கணக்கெடுக்க வரும்முன், நாமே எத்தனை யூனிட்டுகள் பயன்படுத்தி இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டால், மின்சாரத்தை முடிந்த அளவு சிக்கனமாக பயன்படுத்தி மின் கட்டணத்தை குறைத்துக்கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு உங்கள் வீட்டின் மின் கட்டணம் கணக்கிடும் நபர் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு உங்கள் மீட்டரில் உள்ள யூனிட்டுகளை கணக்கு எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். 260 யூனிட்டுகள் இதுவரை பயன்படுத்தியுள்ளீர்கள் என்று வைத்துக் கொண்டால், அதன்பிறகு நீங்கள் மின்சாதனங்களை அதில் சிக்கனம் காட்டி 300 யூனிட்டுகள் கொண்டுவரமுடியும்.

இவ்வாறாக நாம் எத்தனை யூனிட்டுகள் பயன்படுத்தி இருக்கிறோம் என்று எளிதாக கணக்கிடுவதற்கு 2 சிறந்த வழிகளை பார்க்கப்போகிறோம்.

முதலில் எத்தனை யூனிட்டுகள் ஓடி இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம். உங்கள் EB கார்டில் கடைசியாக கணக்கெடுத்த யூனிட்டுகளை எழுதியிருப்பார்கள்.

இப்பொழுது மீட்டரில் கடைசியாக கிலோவாட் என்ற பெயரில் இருக்கும் யூனிட்டை குறித்து அதிலிருந்து உங்கள் EB கார்டில் கடைசியாக எழுதியிருக்கும் யூனிட்டை கழித்தால் இப்பொழுது நீங்கள் எத்தனை யூனிட்டுகள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று தெரிந்துவிடும்.

மின் கட்டணம் கணக்கிடும் முறை TNEB bill calculator மின் கட்டணம் குறைய

ஒருவேளை கடைசியாக கணக்கெடுத்த யூனிட் உங்கள் EB கார்டில் இல்லை என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து

http://tneb.tnebnet.org/newlt/menu3solar1.html

உங்களது EB சர்வீஸ் நம்பர், எந்த ஊர், உங்கள் மொபைல் எண் மற்றும் Captcha ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக வரும் இந்த பக்கத்தில் இங்கே நீங்கள் கடைசியாக பயன்படுத்திய யூனிட்டை தெரிந்து கொள்ளுங்கள்.

மின் கட்டணம் கணக்கிடும் முறை TNEB bill calculator மின் கட்டணம் குறைய 1

நீங்கள் பயன்படுத்திய மின்சார யூனிட்டுகளுக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது என்பதை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

மின் கட்டணம் கணக்கிடும் எளிய முறை

http://biogem.org/tool/TNEB/

மின் கட்டணம் கணக்கிடும் முறை TNEBbill calculator

இதில் எத்தனை யூனிட்டுகளோ அதை டைப் செய்து கால்குலேட் என்பதை கிளிக் செய்தால் நீங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டண தொகை வந்துவிடும்.

ஆனால் இந்த வெப்சைட்டில் வீடுகளுக்கான மின் கட்டணம் மட்டுமே கணக்கிட முடியும். கடை மற்றும் இதர வணிகரீதியான இணைப்புகளுக்கு கீழே உள்ள மொபைல் செயலி மூலமாக கணக்கிட்டுக் கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=nithra.tneb.electricity.bill.calculator&hl=en_IN

மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த ஆப் -ஐ டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் TNEB bill calculator, Tariff Guides, ஆன்லைன் பேமென்ட் என்ற மூன்று வசதிகள் இருக்கும்.

TNEB bill calculator என்பதை கிளிக் செய்து உங்களது இணைப்பு எந்த மாதிரியானது என்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டு உங்கள் இணைப்பின் காண்ட்ராக்டடு லோட் (Contract Load HP) விவரங்களையும் டைப் செய்து கால்குலேட் என்பதை கிளிக் செய்தால் நீங்கள் பயன்படுத்திய மின் யூனிட்டுகளுக்கு எவ்வளவு தொகை என்று வந்துவிடும்.

மின் கட்டணம் கணக்கிடும் முறை TNEB bill calculator மின் கட்டணம் குறையமேலும் இந்த App வழியாகவே TNEB மின் கட்டணமும் நாம் செலுத்திக் கொள்ளலாம். Online Payment என்பதை கிளிக் செய்தால் tneb இணைய தளத்திற்கு நேராக செல்லும். அதில் உங்கள் கணக்கை ஆரம்பித்து உங்கள் மின்கட்டணத்தை செலுத்த முடியும்.

மேலும் தெளிவான தகவல்களுக்கு