HDFC credit card reward points redemption – எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ரிவார்டு பாயின்ட்

0
15821
HDFC credit card reward points redemption - எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ரிவார்டு பாயின்ட் 1

Contents

HDFC credit card reward points redemption – எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ரிவார்டு பாயின்ட்

நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டு பாயிண்ட் என்ற பெயரில் புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு வகையான கார்டுகளுக்கும் வெவ்வேறு மதிப்பில், ஒரு ரிவார்டு பாயிண்டுக்கு இவ்வளவு என்று கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த பதிவில் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் எப்படி HDFC credit card reward points redemption செய்வது என்று பார்க்கலாம்.

  • எடுத்துக்காட்டிற்கு Hdfc Titanium Edge, Platinum Edge, Freedom credit card போன்றவற்றிற்கு ஒரு பாயிண்ட் -க்கு 0.10 பைசா கணக்கிடப்படுகிறது.
  • Diners Rewardz, Regalia First ஆகிய கார்டுகளுக்கு ஒரு பாயிண்ட் -க்கு 0.15 பைசாவும் கணக்கிடப்படுகிறது.
  • Money Back / Solitaire / Business Money Back / Regalia/ Diners Club Miles/ Diners Premium/IOCL ஆகிய கார்டுகளுக்கு ஒரு பாயிண்டுக்கு 0.20 பைசா கணக்கிடப்படுகிறது.
  • Infinia / Diners Black/ Best Price Save Max  போன்ற கார்டுகளுக்கு பாயிண்ட் ஒன்றிற்கு 0.30 பைசா கிடைக்கிறது.
  • Millennia /Best Price Save Smart/Bharat இந்த வகை கார்டுகள் வைத்திருப்பவர்கள் 1 பாயிண்ட் -க்கு 1 ரூபாய் பெறமுடியும்.

இவை அனைத்துமே பணமாக நமது எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும்.

அதாவது நாம் ஒவ்வொரு முறையும் வாங்கும் பொருட்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட ரிவார்டு பாய்ண்டுகள் நமது கணக்கில் வரவு வைத்துக் கொண்டு வரப்படும்.

HDFC credit card reward points redemption - எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ரிவார்டு பாயின்ட்

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரிவார்டு பாய்ண்டுகள் அதிகரிக்கும்போது நாம் அதை ரெடீம் செய்து கொள்ள முடியும். HDFC credit card reward points redemption Online மற்றும் Offline இரண்டு வழிகளிலுமே செய்துகொள்ள முடியும்.

Offline Redeemption

  • அதாவது நமது கிரெடிட் கார்டு கணக்கிற்கு வரவு வைத்துக் கொள்ள முடியும்.
  • அதற்கு கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து வருகின்ற form -ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

https://v1.hdfcbank.com/assets/pdf/Cashback-redemption-form.pdf

  • விண்ணப்பத்தில் உங்களது கிரடிட்கார்டு எந்த வகை என்பதை தெரிந்துகொண்டு அந்த கிரெடிட் கார்டின் ரிவார்டு பாயின்ட் -க்கு எவ்வளவு மதிப்பு என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
  • பின்னர் உங்களது கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் -ல் கடைசியாக எவ்வளவு ரிவார்டு பாய்ண்டுகள் உள்ளன என்பதை உறுதி செய்துவிட்டு, உங்களுக்கு எத்தனை ரிவார்டு பாயிண்டுகளை ரெடீம் செய்ய வேண்டுமோ அந்த எண்ணிக்கையை உங்கள் கார்டுக்கான பாயின்ட் மதிப்புடன் பெருக்கிக்கொள்ளுங்கள்.
  • எடுத்துக்காட்டிற்கு Titanium Edge கார்டில் 2500 பாய்ண்டுகள் நீங்கள் ரெடீம் செய்ய வேண்டும் என்றால் 2500 × 0.10 = 500 என்று படத்தில் காட்டிய இடத்தில் நிரப்பிக்கொள்ளுங்கள்.

HDFC credit card reward points redemption - எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ரிவார்டு பாயின்ட்

  • அடுத்ததாக உங்கள் கிரடிட் கார்டு எண்ணை டைப் செய்துகொள்ளுங்கள்.
  • பின்னர் கீழே தேதி மற்றும் கையெழுத்து ஆகியவற்றை நிரப்பி விட்டால் வேலை முடிந்தது.
  • இந்த விண்ணப்பத்தை உங்கள் அருகில் உள்ள HDFC வங்கியிலோ அல்லது HDFC ATM சென்டரில் இருக்கும் கிரெடிட் கார்டு பெட்டியிலோ போட்டுவிடவேண்டும்.
  • HDFC credit card reward points redemption குறைந்தது 10 வேலை நாட்களில் உங்கள் கிரெடிட்கார்டு கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.

Online Redemption

  • HDFC கிரெடிட்கார்டு நெட்பேங்கிங் வசதியை ஆக்டிவேட் செய்து வைத்துக்கொண்டு அதில் login செய்து பின்னர் இங்கே Redeem reward point என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

HDFC Credit card net banking Register link

https://netbanking.hdfcbank.com/netbanking/CCLogin.html?v=1

  • பின்னர் உங்கள் கிரெடிட்கார்டு எண்ணை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
  • அடுத்து Continue என்பதை கிளிக் செய்தால் மற்றொரு பக்கம் திறக்கும். (popup window allow -ல் இருக்க வேண்டும்)
  • இங்கே உங்கள் கிரெடிட்கார்டு எண்ணும் அதன் அருகே எத்தனை ரிவார்டு பாய்ண்டுகள் உள்ளன என்ற விவரங்கள் இருக்கும்.
  • உறுதிபடுத்திக்கொண்டபின், கீழே எத்தனை ரிவார்டு பாய்ண்ட்களை ரெடீம் செய்ய வேண்டுமோ அதை டைப் செய்து அருகே கிளிக் செய்தால் அதற்கு எவ்வளவு தொகையோ அது தானாகவே வந்துவிடும்.

HDFC credit card reward points redemption - எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ரிவார்டு பாயின்ட்

  • பின்னர் Proceed என்பதை கிளிக் செய்து பின்னர் வரும் பக்கத்தில் Terms and Conditions படித்து பார்த்து டிக் செய்து விட்டு பின்னர் Redeem Now என்பதை கிளிக் செய்தால் உங்கள் விண்ணப்பத்தின் கோரிக்கை எண் வரும்.
  • அதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்களின் கிரெடிட்கார்டு பதிவு மொபைல் எண்ணிற்கு SMS -ம் வந்துவிடும்.

இதுபோல பணமாக நமது கிரெடிட்கார்டு கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி குறிப்பிட்ட ஒருசில கார்டுகளுக்கு மட்டுமே உள்ளது. மற்ற HDFC credit card reward points redemption நமக்கு தேவையான ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை நிறுவனங்களில் ஏதேனும் பொருட்கள் வாங்கும் போது Gift Voucher -ஆக மாற்றிக்கொள்ளலாம்.

அதற்கு கிரெடிட்கார்டு நெட்பேங்கிங் கணக்கு ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் தெளிவான தகவல்களுக்கு வீடியோ பாருங்கள்