ShareIt alternative apps – Best Alternative china apps
ஒருவரிடம் மொபைல் இருந்தால் அந்த மொபைலில் இருக்கும் ஆப்ஸ் -களில் இந்த ShareIt என்ற ஆப் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இப்பொழுது இந்த App பயன்படுத்த முடியாத சூழ்நிலை. எனவே சிறந்த 5 ShareIt Alternative Apps உள்நாட்டு தயாரிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ShareIt மட்டும் இல்லை, ShareIt போன்று குறைந்தபட்சம் 10 சீன ஆப் -களாவது நாம் பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வந்து இருப்போம்.
தற்போது இந்தியா முழுவதும் 59 சீன ஆப்ஸ்-களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே.
எனவே நாம் பயன்படுத்தி வந்த ShareIt சீனா ஆப் -க்கு பதிலாக சிறந்த உள்நாட்டு ஆப்ஸ் -களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Best ShareIt Alternative Apps – JIO Switch
ஜியோ வில் பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு சார்ந்த ஆப்ஸ்-கள் உள்ளன. அதில் ஜியோ ஸ்விட்ச் என்ற ஆப் ShareIt ஆப் -க்கு சிறந்த மாற்றாக இருக்கும்.
மிக எளிமையாக ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு கோப்புகளை துரிதமாக அனுப்புவதற்கு இந்த ஜியோ ஸ்விட்ச் சிறந்த ShareIt Alternative Apps ஆக, அதுவும் நமது உள்நாட்டு ஆப் ஆகும்.
குறிப்பாக இந்த ஜியோ ஸ்விட்ச் ஆப் -ல் விளம்பரத் தொல்லைகள் இல்லை. ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து ஐஓஎஸ் ஆப்பிள் மொபைல்களுக்கும் கூட கோப்புகளை துரிதமாக அனுப்ப முடியும்.
MX ShareKaro – Indian Shareit
MX பிளேயர் வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை ப்ளே செய்வதற்கு நாம் பயன்படுத்தி வருகிறோம்.
இப்பொழுது இந்த நிறுவனம் புதிதாக MX ShareKaro என்ற புதிய ஆப்- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
மிகவும் எளிமையாக ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு கோப்புகளை அனுப்புவதற்கு இந்த MX ShareKaro ஆப் பயன்படுகிறது.
இந்த MX ShareKaro ஆப் – ம் ShareItஆப் -க்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்.
இந்த MX ShareKaro ஆப் -ல் முற்றிலுமாக விளம்பரம் வருவதில்லை. Send அல்லது Receive என்பதை தேர்ந்தெடுத்து எந்த கோப்பு நீங்கள் அனுப்ப வேண்டுமோ அதை மிக எளிய வழியில் துரிதமாக ShareIt- ல் அனுப்புவது போலயே இந்த ஆப் – லும் அனுப்பலாம்.
Z Share
இந்த ஆப் -ம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு மொபைல்களுக்குள் மற்றும் மொபைலில் இருந்து கணினிக்கும் கோப்புகள் பரிமாற பயன்படும் ஆப் ஆகும்.
இந்த ஆப் மூலமாக ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு மிகத் துரிதமாக ஆப்ஸ், ஆடியோ பைல்ஸ், வீடியோ பைல்ஸ், போட்டோஸ் போன்றவற்றை பரிமாறிக் கொள்ளலாம். ShareIt எந்த அளவுக்கு கோப்புகள் பரிமாறிக் கொள்வதற்கு திருப்தியாக இருந்ததோ அதே அளவிற்கு மிக எளிமையாக இருக்கும்.
Zapya File Transfer
ஆண்ட்ராய்டு மற்றும் IOS ஆப்பிள் மொபைல்களுக்கும் இந்த Zapya File Transfer ஆப் மிகப்பெரிய கோப்புகளாக இருந்தாலும் அதை பரிமாற்றத்தில் எந்த தடங்கலும் இன்றி மிகவும் துரிதமாக கோப்பு பரிமாற்றம் நடைபெறுவதற்கு பயன்படுகிறது.
நான்கு வழிகளில் எந்த ஆப் -ல் நீங்கள் கோப்பு பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
- ஒரு குழு உருவாக்கி அதிலுள்ள நபர்களுடன் கோப்பு பரிமாற்றம் செய்து கொள்ளலாம்
- மொபைலை குலுக்குவதன் மூலமாக கோப்புகளை பரிமாறிக் கொள்ளலாம்
- QR Code ஸ்கேன் செய்து அதன் மூலமாக கோப்புகளைபரிமாறிக்கொள்ளலாம்
- ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலிற்கோ அல்லது நண்பர்கள் மொபைலில் இருந்து அப்படியே உங்கள் மொபைலுக்கு APK கோப்புகளை நிறுவ முடியும்
அதைப்போல இந்த ஆப் -ல் மொத்த மற்றும் பெரிய கோப்புகளை பரிமாற எந்த சிரமமும் இல்லாமல் ஒரே கிளிக்கில் சேவையைப் பெற முடியும்.
Send Anywhere
ShareItபோலவே இந்த Send Anywhere ஆப் -ம் உங்கள் மொபைலில் உள்ள சமீபத்திய போட்டோக்கள், வீடியோக்கள், ஆடியோக்கள், APK கோப்புகள், மொபைல் எண்கள், மற்றும் அனைத்து விதமான கோப்புகளில் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலிற்கோ, மொபைலில் இருந்து கணினிக்கும் பரிமாறிக்கொள்ள முடியும்.
- QR Code ஸ்கேன் பண்ணுவது மூலமாக கோப்புகளை அனுப்ப முடியும்
- லிங்க் உருவாக்கி அதன் மூலமாக எங்கு இருக்கும் நபர்களுக்கு வேண்டுமானாலும் கோப்புகளை அனுப்ப முடியும்
- இந்த ஆப் ஃபைல் மேனேஜர் போலவும் செயல்படும்
- பணம் செலுத்தும் சேவையை பெற்றால் 1TB வரை லிங்க் உருவாக்கி கோப்புகளைப் பகிர முடியும்
- பணம் செலுத்தும் சேவையை பெற்றால் ஒரே நேரத்தில் 50GB வரை கோப்புகளை பரிமாறிக்கொள்ள முடியும்.
Download Send Anywhere
எனவே நீங்களும் சீன செயலிகளுக்கு மாற்றாக, அதாவது ShareIt Alternative Apps தேடுகிறீர்கள் என்றால் மேற்கண்ட செயலிகளை முயற்சி செய்து பாருங்கள்.