Contents
புகை பிடித்தல்
Second Hand Smoke இரண்டாம்நிலை புகை என்பது சிகரெட் மற்றும் புகையிலையிலிருந்து வரும் புகை ஆகும். இந்த இரண்டாம்நிலை புகை என்ற சிகரெட் பிடிப்பது, சாதாரணமாக நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாக ஆரம்பித்து பின் நம் வாழ்க்கை அன்றாடம் செய்யும் ஒரு வேலையாகவே மாறி, விரும்பினாலும் விடவே முடியாமல் நம் தவிக்கும் ஒரு பழக்கமாகும்.
இந்த புகையில் 4000-க்கும் அதிகமான நச்சுப்பொருட்களும் அதன்மூலம் ஒருவருக்கு 200 -க்கும் அதிகமான நோய்களும் வர வாய்ப்புள்ளதாம்.
தொடக்கத்தில் புகை பிடிப்பதை விரும்பி செய்துவந்தாலும், போகப்போக இதை விட்டுவிடவே அனைவரும் விரும்புவார்கள். புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிப்பவர்களில் 100 -ல் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். ஆனால் மீதம் உள்ள 99 நபர்கள் திரும்பவும் இந்த புகை ஏக்கதில் மீண்டும் தொடர ஆரம்பிக்கிறார்கள்.
சிகரெட் புகையில் கலந்துள்ள நச்சுக்கள்
- எலி மருந்துகளில் உள்ள ஆர்சனிக்
- தீக்குச்சி மருந்தில் உள்ள கந்தகம்
- விஷ வாயுக்களான ஹைட்ரஜன் சயனைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு
- இறந்த உடல்களை பதப்படுத்தும் பார்மால்டிஹைட்
- நச்சு கலந்த ஈயம்
- அந்துருண்டை மூலப்பொருளான நாப்தலின்
புகை பிடிப்பதால் புற்றுநோய், சுவாச கோளாறுகள், நுரையீரல் நோய்கள், நுரையீரலில் உள்ள சிறு காற்றுப்பைகள் சேதமாவதால் ஆக்சிஜனை எடுக்க முடியாமல் இதய பாதிப்பு ஏற்படும் அபாயம் ஆகிய நோய்கள் தாக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் சிகரெட் குடிப்பவர்களுக்கு அருகில் இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பற்றி அனேக மக்கள் அறிவதில்லை. அதை பற்றி பார்க்கலாம்.
சிகரெட் குடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்துமே கண்டிப்பாக அருகில் உள்ளவர்களுக்கும் ஏற்படும். அதிக காற்றோட்டம் இல்லாத இடங்கள், வீடு, வீட்டின் அறை போன்றவற்றில் ஒருவர் பிடிக்கும் சிகரெட்டின் புகை வெளியேறினாலும், மேற்சொன்ன நச்சுப்பொருட்கள் யாவும் அங்குள்ள பொருட்களில் படிந்து பின் காற்றில் சுற்றிக்கொண்டே இருக்குமாம்.
இதனால் அதிகம் பாதிக்கபடுவது குழந்தைகளும், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களும்தான். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்தல், சுவாச கோளாறுகள், காதில் சீழ் வருதல், சளியுடன் தொடர்புடைய ஆஸ்துமா, வீசிங், தொடர் இருமல், மூளை செயல்படும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுமாம். எனவே புகை பிடிப்பவர்கள் இந்த மாதிரி இடங்களை தயவு செய்து தவிர்க்கவும்.
புகையை நிறுத்த யோகா
புகையை கைவிட நினைப்பவர்கள் தியானம் மற்றும் யோகாவை செய்ய ஆரம்பியுங்கள். சிகரெட்டை நிருத்தியதம் நம் உடலில் உண்டாகும் தவிர்க்கமுடியாத சில மாற்றங்களை சமாளிக்க யோகாசனம் மட்டுமே நல்ல பலன் தரும்.
மேலும் புகை மற்றும் மதுவை மறக்க மருந்து மாத்திரைகளும் வந்துவிட்டதாம். எனவே இவற்றை கைவிடவேண்டும் என்று நினைப்பவர்கள் தயவு செய்து அந்த மருந்துகளை தேடி வாங்கி உபயோகித்து பயன்பெறுங்கள்.
இந்த மருந்துகளை பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து அதன் பெயர்களையும் கிடைக்கும் இடங்களையும் கமெண்ட் -ல் பதிவிட்டு பலருக்கும் உதவுங்கள்.புகையி(லை)ல்லா சமுதாயத்தை உருவாக்குவதில் நாமும் ஒரு பங்கு வகிப்போம்.
[…] பகலில் ஆக்சிஜனையும் இரவில் கார்பன்டை ஆக்சைடையும் வெளியிடும். ஆனால் இந்த பாம்பு செடி, […]