குருப்பெயர்ச்சி 2018 – 2019
மீனம்
மீனம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்
பலன்கள் யாருக்கு நடக்கும்
பலன்கள் யாருக்கு நடக்காது
குருப்பெயர்ச்சி பலன்கள்
மீனம் ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் நன்மைகளைத் தராத அமைப்பில் இருந்த குருபகவான் தற்போது ஒன்பதாம் இடத்திற்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இது ஒரு மிகவும் சிறப்பான நிலை. இந்த பெயர்ச்சியினால் மீனத்திற்கு மிகுந்த நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும்.
குரு நிற்க போவது – ஒன்பதாமிடம் – (விருச்சிகம்)
குருவின் ஐந்தாம் பார்வை – ராசியில் (முதலிடம்) – (மீனம்)
குருவின் ஏழாம் பார்வை – மூன்றாமிடம் – (ரிஷபம்)
குருவின் ஒன்பதாம் பார்வை – ஐந்தாமிடம் – (கடகம்)
இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் நடுத்தர வயதினருக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.
இந்தக் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து, மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி.
இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.
பண விஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த மீன ராசிக்காரர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள். உங்களின் எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப் போகும் காலம் இது. உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.
நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.
அலுவலகத்தில் புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு கிடைக்கும். உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.
மேலும் சில முக்கிய பலன்கள்
சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்ல நேரம்.
வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்லவிதமாக அமையும். வேலையில் இருந்து விலகியவர்களுக்கு அதைவிட நல்ல வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.
இளைய பருவத்தினருக்கு ஏமாற்றமும், மன அழுத்தமும் இருக்காது. இந்தக் குருப் பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தை தரப் போவதோடு இதுவரை இருந்து வந்த குழப்பங்களையும், காரியத் தடைகளையும், துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையப் போகிறது.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும்.
முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். திருமணம் தள்ளிப் போய் இருந்தவர்களுக்கு உடனடியாக வரன்கள் நிச்சயிக்கப் பட்டு சுபகாரியங்கள் குடும்பத்தில் ‘ஜாம் ஜாம்’ என்று நடக்கும்.
குழந்தை பாக்கியம் தாமதமானவர்களின் வீட்டில் சிறு குழந்தைகளின் அழுகைக் குரலும், மழலைச் சத்தமும் கேட்டு தாத்தா, பாட்டிகளின் மனம் குளிரப் போகிறது.
கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.
மீன ராசியின் பாக்கியதிபதியின் வீட்டில் வந்து அமரும் குரு உங்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கவிருக்கிறார். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதை மனதில் நிறுத்தி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி வாகை சூட வைக்க ஒன்பதாமிட குரு காத்திருக்கிறார்
குருப்பெயர்ச்சி நிகழும் நாள்
- வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)
- திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)
குருவின் சுப பார்வையானது, மீனம் ராசியினருக்கு ராசியை (முதலிடம்), மூன்று, மற்றும் ஐந்து ஆகிய இடங்களில் விழுகிறது. இதனால் மேற்கண்ட தலிடம்பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.
ராசியை பார்க்கும் குருபகவானின் பார்வையானது, உங்களுக்கு அபரீதமான சக்தி அளிக்கவிருக்கிறது. மனதில் குதூகலம் அதிகரிக்க போகிறது.
குருபகவானின் மூன்றாமிடத்துப் பார்வையால் உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மேலோங்கி அனைத்துப் பிரச்னைகளையும் நீங்கள் தனி ஒருவராகவே சமாளித்து தீர்க்கும் அளவிற்கு ஆற்றல் பெறுவீர்கள்.
மூன்றாமிடம் சகாயஸ்தானம் என்பதால் எதிர்பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும்.
மேலும் சில முக்கிய பலன்கள்
குருபகவானின் ஐந்தாமிடப் பார்வையால் உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.
பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும். தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள் புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும். ஆலயப் பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள்.
இழுபறியில் இருந்து வந்த பேச்சுவார்த்தைகள், நடவடிக்கைகள் சாதகமாக முடிவுக்கு வரும். வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்.
கோர்ட், கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்பு முனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். வெளிநாட்டுப் பயணத்திற்கு தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தையின் ஆதரவு பூரணமாய்க் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.
கணவர் மற்றும் பிள்ளைகளின் நலன் மட்டும்தான் முக்கியம் என்று நினைக்கும் ஆளாக இருப்பீர்கள் நீங்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது சுயநலம் போலத் தெரியும். பொறுப்புள்ள குடும்பத்தலைவி இருக்கும் குடும்பத்தில் சிக்கல்களுக்கு இடமில்லை.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடி கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக் குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.
மீனம் ராசிக்கு இந்தக் குருப்பெயர்ச்சி விடியலைத் தந்து வழியையும் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
யாருக்கு பலன்கள் நடக்கும்?
இது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், மீனம் ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.
மீனம் ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் பொது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும்.
பலன்கள் நடக்க தேவையான அமைப்பு
(அவரவர் சுய ஜாதகத்தில்)
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- விருச்சிகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- மீனத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- ரிஷபத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
- கடகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்
- சுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்
- சுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன்மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்
- சுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்
- விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
- மீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)
பாக்கியதிபதியின் வீட்டில் வந்து அமரும் குரு, ஐந்தாம் பார்வையால் உங்களை பார்த்து உங்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கவிருக்கிறார்.
- ரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)
- கடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
- உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.
யாருக்கு பலன்கள் நடக்காது?
- உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் ஆகிய இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.
- உங்கள் ராசி மேல் குரு பார்வை விழுவதால், நிச்சயமாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மை செய்யாமல் போகாது. (மற்ற இடங்களான விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போதும்)
இறைவழிபாடு
உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு – செவ்வாய்க்கிழமை
ரிஷபம் அல்லது துலாமில் குரு – வெள்ளிக்கிழமை
மிதுனம் அல்லது கன்னியில் குரு – புதன்கிழமை
கடகத்தில் குரு – திங்கட்கிழமை
சிம்மத்தில் குரு – ஞாயிற்றுக்கிழமை
தனுசு அல்லது மீனத்தில் குரு – வியாழக்கிழமை
கும்பம் அல்லது கும்பத்தில் குரு – சனிக்கிழமை
வழிப்பாட்டு ஸ்தலங்கள்
- திருச்செந்தூர் முருகன் கோயில்
- ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.
குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)
*********************************
மீனம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ
https://youtu.be/GGzjZxFNeF8
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர்
ஜோதிட ஆச்சார்யா
பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN
(M.M.சந்திர சேகரன்)
89730-66642, 70102-92553
(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
*********************************