தேன் என்பது குழந்தைகளுக்கு நாக்கில் வைக்க பயன்படுத்தலாம் என்கின்ற செய்தி மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை மருந்தாகவும்,அழகு சேர்க்கும் பொருளாகவும் கூட பயன்படுகிறது.தேன் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது. சித்த மருத்துவம், மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தேன் கலக்காத மருந்துகளே கூட இல்லை என்கின்ற அளவிற்கு தேன் அவ்வளவு மருத்துவ மகத்துவம் நிறைந்தது.
தேனில் குளுக்கோஸ் மற்றும் புருக்டோஸ் அதிகம் உள்ளன.தாதுக்களான மெக்னீசியம், சோடியம் குளோரின், பொட்டாசியம், கால்சியம், சல்பர், இரும்பு மற்றும் பாஸ்போட் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. மேலும் இதில் மகரந்த தன்மைக்கு ஏற்ப வைட்டமின்களான பி1,பி2,பி3,பி5,பி6,சி,மற்றும் தாமிரம், அயோடின், துத்தநாகமும் காணப்படுகின்றன.
சுத்தமான தேனை எப்படி கண்டுபிடிப்பது
- சுத்தமான தேனாக இருந்தால் நீங்கள் எங்கு வைத்தாலும் எறும்பு மொய்க்காதாம்
- பேப்பரில் ஒரு சொட்டு தேனை விட்டால் ஊறி படராமல் இருந்தால் அது சுத்தமான தேனாம்
- ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் ஓரிரு சொட்டு தேனை விட்டால் கரையாமலும் மிதக்காமலும், வண்ணம் மாறாமலும் நீரின் அடியில் படிந்தால் அது சுத்தமான தேனாம்
- மணலில் ஓரிரு சொட்டு தேனை விட்டு வாயால் ஊத மண்ணுடன் ஒட்டாமல் உருண்டோடினால் அது தூய தேனாம்
- நாக்கில் வைத்த தேனை விழுங்கிய பிறகு நாக்கில் இந்த வண்ணமும் இல்லையென்றால் அது தூய தேன்
தேன் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்:
- கண் கோளாறு நீங்கும்
- சரும சுருக்கத்திலிருந்து பாதுகாக்கிறது
- ஆண்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டது
- காயங்களை குணமாக்கும் தன்மைக்கொண்டது
- சொறி,சிரங்கு,படை போன்ற தோல் நோய்களை குணமாக்குகின்றது
- முதுமை தோற்றத்தை தடுக்கிறது
- முகப்பருவை நீக்குகிறது
- உதடுகளின் பாதுகாப்பிற்கு பயன்படுகிறது
- ஊட்டசத்துக்களைக் கொண்டது
- உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின் அதிகம் கொண்டது
- தசைகள் சோர்வடைவதை தடுக்கிறது
- இரத்த சோகை நோய்க்கு எதிராக போரட உதவுகிறது
- உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது
- சுவாச குழாயில் இருக்கும் நோய்த் தொற்றுக்களை சரிசெய்கிறது
- உடல் எடை குறைய உதவுகிறது
- இருமல் மற்றும் ஆஸ்துமாவை குணமடைய செய்கிறது
- இளமையுடன் வாழ வேண்டுமானால் தினமும் ஒரு தேக்கரண்டி தேனை கலையில் சாப்பிட்டு வரலாம்
தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டியவைகள்
- சுத்தமான தேனை பாலில் கலந்து தினமும் இரவு குடித்து வர மெலிந்த உடல் தேறும்
- சுத்தமான தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் இரவு சாப்பிட்டு வர மெலிந்த உடல் தேறும்
- இரண்டு தேக்கரண்டி தேனுடன் இரண்டு தேக்கரண்டி இஞ்சி சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் குடித்துவர இரத்தம் சுத்தமாகி அதிக இரத்தம் ஊரும். மேலும் நரம்பு மண்டலம் வலுவடையும்
- ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் பித்தம், வாந்தி, குமட்டல், தலைவலி போன்றவைகள் குணமாகும்
- குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் தொல்லை இருந்தால் பாலில் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்து பருகி வர நல்ல பலன் கிடைக்கும்
தேனை உட்கொள்ளும் போது கவனிக்கவேண்டியவைகள்:
- வெப்பநிலை அதிகம் உள்ள இடங்களில் வேலை பார்ப்பவர்கள் தேனை எடுத்துக்கொள்ளக் கூடாது
- தேனை சூடு படுத்தக்கூடாது
- தேனுடன் மழைநீர்,கடுகு,நெய்,காரமான பொருட்கள் போன்றவைகளை கலக்கக்கூடாது