தொப்பை
இப்பொழுதுள்ள உணவு பழக்கங்களால் மனிதர்களின் செரிமான சக்தி குறைந்து அனேகமாக 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் தொப்பை -யை சுமந்து வலம் வருகிறார்கள்.
இப்பொழுதுள்ள கால சூழ்நிலைகளில் ஜிம் -க்கு சென்று உடற்பயிற்சி செய்யதோ, யோகாசனம் செய்யதோ, நடை பயிற்சி செய்தோ தம் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள நேரம் ஒதுக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.
ஜிம் – க்கு சென்றால் குறைந்தது 1 லிருந்து 2 மணி நேரமாவது பயிற்சி செய்யவேண்டும். யோகா செய்வதென்றாலும் அதே மாதிரி 1 லிருந்து 2 மணி நேரம் ஒதுக்க வேண்டும்.
இந்த நேரம் இல்லாமலும், நேரம் கிடைத்தாலும் இந்த பயிற்சிகள் செய்ய சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டும் தனது உடலை கெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்காகத்தான் இந்த உடற்பயிற்சி. இதன் பெயர் பிளான்க் (PLANK) . இதை 20 நொடிகளில் ஆரம்பித்து 30 நாட்களில் 5 நிமிடங்கள் செய்யும் அளவிற்கு தங்களை தயாற்படுதிக்கொண்டால் போதும். குறைந்த நேரத்தில் உங்கள் உடல் கட்டுக்கோப்பாக மாறும்.
செய்யும் முறை
இந்த பயிற்சியை காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். படத்தில் உள்ளது போல உங்கள் உடல் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் 5 லிருந்து 10 நொடிகள் இந்த நிலையில் இருப்பதே பெரிய கடினமாக இருக்கும். எனவே தொடக்கத்தில் உங்களால் எவ்வளவு நேரம் முடிகிறதோ அதில் ஆரம்பித்து போக போக உயர்த்திக்கொள்ளுங்கள்.
முக்கிய பயன்கள்
இதன் முக்கிய பயன் தொப்பை நன்றாக குறைவதை உணர முடியும். நீங்கள் இந்த பயிறிசியை செய்யும்போதே உங்கள் வயிற்றில் ஒரு சூடு பரவுவதை நீங்கள் உணர முடியும்.
அடுத்து முதுகு வலி உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தால் வலி குறைவைதை உணர முடியும்.
மேலும் தோள்பட்டையில் மூட்டு நழுவும் பிரச்சினை உள்ளவர்களும் இதை முயற்சி செய்யலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். மேலும் இது மாதிரி பயனுள்ள பதிவுகள் உங்களை தேடிவர உங்கள் இ மெயில் id கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். நன்றி.
arumai anna.
thank you