ரயில் பயணம்
இன்றைய காலத்தில் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனென்றால் ரயிலில் மற்றவற்றை விட விலை மிக குறைவு. அதே சமயம் மிகவும் வசதியாகவும் பயணிக்க முடியும் என்பதால்தான்.
நமது ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதுபுது வசதிகளை அறிமுகபடுத்தி வருகிறது. அதேபோல இந்த புதிய வசதி கண்டிப்பாக ரயிலில் பயணம் செய்யும் அனைவருக்குமே நல்ல பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரயிலின் தற்போதைய நிலை
நாம் பயணம் செய்யப்போகும் ரயில் தற்போது எங்குள்ளது, தாமதமாக வருகிறதா இல்லை முன்கூட்டியே வருகிறதா? இந்த தகவல்களையெல்லாம் நாம் நமது மொபைலில் உள்ள வாட்சப் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும்.
இதற்காக அதிக விளம்பரங்கள் வரும் எந்த செயலியையும் நாம் நமது மொபைலில் நிறுவ தேவை இல்லை.
வாட்சப்
உங்கள் மொபைலில் 7349389104 என்ற எண்ணை சேமித்துக்கொள்ளுங்கள். பிறகு வாட்சப்பில் அந்த எண்ணை ஓபன் செய்து நீங்கள் செல்ல வேண்டிய ரயிலின் எண்ணை அதில் டைப் செய்து SEND பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது நீங்கள் செல்லவேண்டிய ரயில் இந்த ஸ்டேசனிலிருந்து கிளம்பிவிட்டது, அடுத்து இந்த ஸ்டேசனிற்கு இத்தனை மணிக்கு வந்து சேரும் என்ற விவரங்களை துல்லியமாக வாட்சப் செய்தியாக வந்து சேரும். இதை வைத்து நீங்கள் உங்கள் பயண திட்டங்களை வகுத்துகொள்ளலாம்.
இதற்கான வீடியோ
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். மேலும் இது மாதிரி பயனுள்ள பதிவுகள் உங்களை தேடிவர உங்கள் இ மெயில் id கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். நன்றி.