பதஞ்சலி சிம் கார்டு
ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கு 1 GB இண்டர்நெட்டை ரீச்சார்ச் செய்து வைத்துக்கொண்டு, பார்த்து பார்த்து பயன்படுத்திக்கொண்டிருந்த வேளையிலே ஜியோ வந்து தினமும் 1GB, 1.5GB என்று அள்ளிக்கொடுக்க பல்லில்லாதவனுக்கு பால்கோவா கிடைச்சது போல அனுபவிதுக்கொண்டிருந்தோம்.
தற்பொழுது ஜியோ –வை விட குறைந்த விலையில் அதை விட அதிக சலுகைகளை அள்ளித்தர வந்து விட்டது பதஞ்சலி நிறுவனத்தின் சுதேசி சம்ரிதி சிம் கார்டு.BSNL நிறுவனத்துடன் இணைந்து பாபா ராம்தேவ் -ன் பதஞ்சலி நிறுவனம் புதிய சிம் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் அட்டகாசமான ரீச்சார்ஜ் பேக்குகள்
Rs.144 -30 நாட்கள், அளவில்லா அழைப்புகள், 2Gb,100SMS.
Rs.792 -180 நாட்கள், அளவில்லா அழைப்புகள், 2Gb,100SMS.
Rs.1584 -365 நாட்கள், அளவில்லா அழைப்புகள், 2Gb, 100 SMS.
இந்த சலுகைகள் ஜியோ –வை காட்டிலும் கூடுதலாகும். தற்பொழுது இந்த சுதேசி சம்ரிதி சிம் கார்டு பதஞ்சலி நிறுவன ஊழியர்கள் மற்றும் டீலர்கள் மட்டும் சோதனை அடிப்படையில் பயன்படுத்த அளிக்கப்படும்.
கூடிய விரைவில் அனைத்து பொது மக்களுக்கும் பயன்படுத்தும் வகையில் இதன் சேவை விரிவு படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இலவச காப்பீடு
மேலும் இந்த சிம் கார்டு பயனாளர்களுக்கு இது வரை எந்த தொலை தொடர்பு நிறுவனமும் கொடுக்காத ஒரு அறிய சலுகையாக 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையிலான விபத்து காப்பீடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 சதவீதம் தள்ளுபடி
மேலும் எதிர்காலத்தில் இந்த பதஞ்சலி சிம் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பதஞ்சலி பொருட்களை வாங்கும்போது 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள்.
இந்த பதிவின் வீடியோ
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளுக்கும் கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள்.
மேலும் உங்களது மெயில் முகவரியை கொடுத்து இந்த தளத்தின் அணைத்து பயனுள்ள பதிவுகளையும் தவறாமல் படியுங்கள். நன்றி.