வேகமாக பரவி வரும் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையிலிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு இயற்கையான அருமருந்து

0
4596
nochi ilai நொச்சி இலை பயன்கள் do something new

Contents

நொச்சி இலை

நொச்சி இலை, பூக்கள், வேர்கள் மற்றும் பட்டைகள் அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக காணப்படுகின்றன.

மேலும், இது அதிக அளவு வெப்பத் தன்மையைக் கொண்டது. ஆனால்,இதன் மலர்கள் அதிக குளிர்ச்சித் தன்மையை கொண்டது.நொச்சி கசப்பு, துவர்ப்பு மற்றும்  காரச்சுவைகளைக் கொண்டது.

நொச்சி இலையின் பயன்கள்

nochi ilai நொச்சி இலை பயன்கள் do something new

 • கொசுக்களை விரட்டும் சக்தி உடையது.
 • கொதிக்க வைத்த இலையின் தண்ணீர் உடல் அசதியினால் ஏற்படும் வலியைக் குணப்படுத்த மிக சிறந்தது.
 • புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி நொச்சி இலைகளுக்கு உண்டு.
 • வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் சக்தி உடையது.
 • புண்களுக்கு நொச்சி இலையின் சாறு மிகவும் ஏற்றது.
 • நொச்சி இலைகளை காய்ச்சி ஒத்தனம் கொடுத்து வந்தால் முதுகுவலி, கால்வலி மற்றும் மூட்டுவலியிலிருந்து விடுபடலாம்.
 • மண்ணீரலில் வீக்கம் ஏற்பட்டால் நொச்சி இலையை அரைத்து போட்டால் குணமாகும்.

[wp_ad_camp_3]

 • நொச்சியின் வேர்களை கொதிக்க வைத்து ஆவி பிடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். மேலும் மூக்கடைப்பு, ஜலதோசம், சளி, தலையில் நீர்கோர்த்தல் தொல்லையிலிருந்தும் விடுபடலாம்.
 • நொச்சி இலைகளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சீராகும்.
 • மேலும் மூக்கடைப்பு, ஜலதோசம், சளி, தலையில் நீர்கோர்த்தல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
 • இலையின் சாறை கழுத்து, மூக்கு, கன்னம் ஆகிய பகுதிகளில் தேய்த்து வந்தால் சைனஸ் நோயிலிருந்து விடுபடலாம்.
 • நொச்சி இலையை தலயனையாகப் பயன்படுத்தி வந்தால் தலைவலி,தலைப்பாரத்திலிருந்து விடுபடலாம்.
 • நொச்சி இலைகளை வதக்கி ஒத்தனமிட்டு வந்தால் வீக்கம் ஏற்பட்ட இடங்களில் வீக்கங்கள் குறையும்.
 • நொச்சி இலையுடன் மிளகு, கிராம்பு, பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயிலிருந்து விடுபடலாம்.
 • நொச்சியின் வேர்கள் சிறுநீரைப் பெருக்கும். மேலும், சளி, பசியின்மை, குடல்வலி மற்றும் உடலில் ஏற்படும் கட்டிகள் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.
 • காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நொச்சியின் மலர்கள் ஏற்ற மருந்தாகும்.

நொச்சி இலைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் பல்வேறு நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான உடல் நலத்தை பெறலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள். நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள்.