Contents
Reliance மியூச்சுவல் ஃபண்ட் இப்பொழுது Nippon India மியூச்சுவல் ஃபண்ட் ஆக மாறிவிட்டது. எனவே கீழே உள்ள வீடியோவை பார்த்து Nippon India Mutual Fund விவரங்களை ஆன்லைனில் கையாளுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Nippon India Link
https://www.nipponindiamf.com/investeasy/#/auth/register?type=signup
மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)
நாம் முழு தொகையாகவோ அல்லது மாதம் மாதமாகவோ பல நிறுவனங்களின் இந்த மியூச்சுவல் ஃபண்ட் -களை கட்டி வருகின்றோம். மியூச்சுவல் ஃபண்ட் -களில் நாம் சேரும்போதும் பணத்தை திரும்பப் பெறும்போதும் ஏஜெண்டுகளின் மூலம் விண்ணப்பிப்பது வழக்கம்.
ஆனால் நாம் சேர்ந்த ஏஜெண்ட் நமக்கு சரியாக சேவை செய்யவில்லை என்றாலோ அல்லது நாம் வேறு ஊருக்கு மாறுதலாகி வந்தாலோ அந்தந்த நிருவனகளுக்குச் சென்று பணத்தை திரும்ப பெற அலைய வேண்டியிருக்கும். அல்லது இந்த இந்த வேலைகளுக்காக ஏஜெண்டுகளை நம்பியே இருக்க வேண்டியிருக்கும்.
அனால் தற்போது அந்த பயமே நமக்கு வேண்டியதில்லை. ஏனெனில் அந்தந்த நிறுவனங்களின் இணையதளத்திற்கோ அல்லது மொபைல் செயலிகளுக்கோ சென்று புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் சேர வேண்டியிருந்தாலும் அல்லது பணத்தை திரும்ப பெற வேண்டியிருந்தாலும் நாம் எளிதாக விண்ணப்பிக்க முடியும் இருக்கும் இடத்திலிருந்தே.
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Reliance Mutual Fund)
எடுத்துக்காட்டுக்காக இந்த பதிவில் ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் -ல் நாம் எப்படி ஒரு மியூச்சுவல் ஃபண்ட் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.
ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் -ல் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பது எப்படி?
இந்த லிங்கை கிளிக் செய்து ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இணையதளத்திற்கு வந்து கொள்ளுங்கள்.
[wp_ad_camp_3]
https://investeasy.reliancemutual.com/Online/Account/Registration
இந்த பக்கத்தில் Register என்பதை கிளிக் செய்து உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் -ன் Folio எண்ணை டைப் செய்து பின்னர் கீழே உள்ள Submit என்பதையும் கிளிக் செய்தால் அடுத்து இந்த பக்கம் வரும்.
இப்பொழுது உங்கள் Folio கணக்குடன் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண் மற்றும் இமெயில் -க்கு OTP (ஒரு முறை கடவு சொல்) எண் வரும் அதை Enter Otp என்ற இடத்தில் டைப் செய்து Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் இந்த பக்கத்தில் User Id உங்கள் இமெயில் இருக்கும். அடுத்து உங்களுக்கு நினைவில் இருக்கின்ற வகையில் பாஸ்வோர்டு உருவாக்கி கொள்ளுங்கள்.
பின்னர் அதை வைத்து ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் -ல் Log in செய்து கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் செலுத்திய மொத்த தொகை மற்றும் கூடுதலாக உள்ள தொகை போன்ற விவரங்கள் வரும். அதில் இந்த Systematic Plans என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து SIPs என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக உங்கள் Folio ஆரம்பித்த தேதி, முடியும் தேதி போன்ற விவரங்கள் வரும். அதில் இந்த Modify SIP என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது வரும் இந்த பக்கத்தில் நீங்கள் ஒரு சில விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும். அதாவது உங்களின் தவணை தேதி, SIP Amount, Plan, முடிவு தேதி ஆகியவைகளுக்கு பக்கத்தில் இருக்கும் Change என்பதை கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.
நீங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள Cancel SIP என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்னர் என்ன காரணத்திற்காக Cancel செய்கிறீர்களோ அதை டைப் செய்த பின் Transact Using Otp என்பதை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் -ற்கு OTP எண் வரும். அதை Enter Otp என்ற இடத்தில் டைப் செய்து Submit கொடுத்தால் நீங்கள் எந்த வங்கியில் இருந்து பணம் செலுத்தி வருகிறீர்களோ அந்த வங்கி கணக்கிற்கு திரும்ப வந்து சேரும்.
இந்த விண்ணப்பத்தை நாம் நம் மொபைல் செயலி வழியாகவும் செய்யலாம். Reliance Mutual Fund App Link
[wp_ad_camp_3]
https://play.google.com/store/apps/details?id=com.godbtech.reliancemf&hl=en
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது எனில் கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்து அனைவருக்கும் உதவுங்கள். நன்றி.