Contents
Pf – வருங்கால வைப்பு நிதி
முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது நமது அரசு பிஎஃப் துறையில் எண்ணற்ற புதிய மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றது
அந்த வகையில் இதற்கு முன்பு பிஎஃப் இருப்பு தொகையை தெரிந்து கொள்வதற்கு பாஸ் புக், எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளும் முறை, மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் தெரிந்து கொள்ளும் முறை ஆகிய வழிகளை அறிமுகம் செய்தது.
அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாக நமது பிஎஃப் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பெறவும் வழிவகை செய்தது.
மேலும் ஆன்லைன் வழியாக நமது பிஎஃப் தொகையில் அட்வான்ஸ் பெறுவதற்கும், நம் முதிர்வு தொகையை பெறுவதற்கும் ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்கவும் வழி உள்ளது.
அதேபோல பிஎஃப் அக்கவுண்ட் உடன் நமது ஆதார், பான், வங்கி கணக்கு போன்ற விவரங்களை அனைவரும் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Pf account photo
அதேபோல இப்பொழுது மேலும் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது என்னவென்றால் நமது pf account உடன் நமது புகைப்படத்தை இணைக்கும் வசதி. இவ்வளவு நாள் இந்த வசதி இல்லை இப்பொழுது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் கண்டிப்பாக அனைவரும் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும் என்று அறிவிப்பு வந்தாலும் வரலாம்.
எனவே அனைவரும் தங்களது புகைப்படத்தை UAN அக்கவுண்ட் லாக் இன் செய்து பதிவேற்றிக் கொள்ளுங்கள்.
pf account photo அப்லோட் செய்வது எப்படி என்று தெளிவாக பார்க்கலாம்.
UAN Activate
பெரும்பாலும் அனைவரும் UAN நம்பரை ஆக்டிவேட் செய்து வைத்திருப்போம். ஒருவேளை உங்கள் UAN நம்பரை ஆக்டிவேட் செய்ய வில்லை என்றால் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது என்று கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் Uan அக்கவுண்டை Login செய்து கொள்ளுங்கள். பின்னர் இந்த இடத்தில் View என்பதை கிளிக் செய்து அதில் Profile என்பதையும் கிளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக வரும் இந்த பக்கத்தில் Change Photo என்பதை கிளிக் செய்து அடுத்து வரம் பக்கத்தில் Browse என்பதை நீங்கள் ஏற்கனவே ஸ்கேன் செய்து வைத்திருக்கும் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தேர்ந்தெடுக்கலாம்.
பின்னர் சரியான அளவிற்கு அதை Zoom செய்து Preview என்பதை கிளிக் செய்து உங்களின் புகை படம் சரியான அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு பின்னர் Upload Photograph என்பதை கிளிக்செய்தால் உங்களது புகைப்படம் வெற்றிகரமாக பதிவேற்றி விடும்.
புகைப்படம் இப்படித்தான் இருக்க வேண்டும்
- நீங்கள் அப்லோட் செய்ய வேண்டிய உங்களின் புகைப்படம் 100 Kb க்குள் இருக்க வேண்டும்.
- இரண்டு காதுகளும் தெரியும்படி உங்களின் புகைப்படம் இருக்க வேண்டும்.
- மொபைலில் தெளிவில்லாமல் எடுத்த போட்டோக்களை அப்லோட் செய்ய கூடாது.
- 3.5 Cm *4.5 Cm என்ற அளவுவில் உங்கள் புகைப்படம் இருக்க வேண்டும்.
- Jpeg, Jpg, Png இந்த பார்மட்டுகளில் உள்ள போட்டோ பைல்கள் மட்டுமே அப்லோட் செய்ய முடியும்.
வீடியோ
இந்த பதிவு அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.