வேலை வாய்ப்பு
அந்த காலத்தில் வேலை வாய்ப்பு தேடி தேடி செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம் என்று சொல்வதுண்டு. ஆனால் இந்த காலத்தில் அதை அப்படியே மாற்றி வேலை தேடி தேடி விரல் ரேகை தேய்ந்து விட்டது என்று மாற்றிக்கொள்ளலாம்.
ஏனென்றால் இப்பொழுதெல்லாம் நாம் வேலை தேடி வெளியில் அலைய வேண்டியதில்லை. நம்மை தேடி வேலை வாய்ப்பு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. வேலை வாய்ப்பு செய்திகளுக்கென்றே ஏகப்பட்ட வெப்சைட்டுகளும், மொபைல் செயலிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.
அவற்றில் எனக்கு தெரிந்த ஒரு நல்ல செயலியை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அந்த செயலியின் பெயர் தமிழ்நாடு வேலைவாய்ப்புகள் என்பதாகும். இந்த செயலி பல பயனுள்ள செயலிகளை வழங்கிய நித்ரா என்ற நிறுவனத்துடையதாகும்.
இந்த செயலியில் நீங்கள் உங்களின் தகுதியை பதிவு செய்து விட்டால் உங்கள் தகிதிகேற்ற வேலை வாய்ப்பு செய்திகள் உங்கள் மொபைலிற்கு வந்துசேரும்.அது மட்டுமில்லாமல் பல பிரிவுகளில் உங்களுகேற்ற வேலைகளை, உங்கள் ஊரிலேயே தேர்ந்தெடுக்கும் வசதியும் தனி தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பணிகள், மாநில அரசு பணிகள், மத்திய அரசுப்பணிகள், கன்சல்டன்சி பணிகள், ஆரம்ப நிலை பணிகள் போன்ற பணிகள் மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி, எந்த முறையில் தேர்ந்தெடுப்பார்கள் போன்ற அனைத்து விவரங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் நிர்வாக பணி, ஆசிரியர் பணி, மார்கெட்டிங், ஓட்டுனர், மருத்துவம், ITI, உதவியாளர், மேலாளர், அலுவலகப்பணி போன்ற அனைத்து பிரிவுகளும் உள்ளன. எனவே பொறுமையாக தேடி பயன்பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த செயலியில் ஒரு தெளிவான வழிகாட்டுதல் இருக்கும்.
அது மட்டுமில்லாமல் நீங்கள் உங்கள் உங்களின் தகுதியை பதிவு செய்து விட்டால் உங்கள் தகிதிகேற்ற வேலை வாய்ப்பு செய்திகள் உங்கள் மொபைலிற்கு வந்துசேரும்.
இந்த செயலியின் லிங்க்
[wp_ad_camp_3]
https://play.google.com/store/apps/details?id=nithra.jobs.career.placement&hl=en_CA
மேலும் இதில் உங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்றாலும் நீங்கள் அதில் உள்ள மொபைல் எண்ணிற்கு அழைத்து உங்களுடைய தகவல்களை கொடுத்து பயன்பெறலாம்.
உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க எங்களது வாழ்த்துக்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள்.நன்றி.
My qualifications is 12+ b.e 2yrs complete