நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஒரே மொபைலில் Youtube பார்க்கிறீர்களா?

10
2578
YOUTUBE NEW UPDATE

Contents

YOUTUBE

தற்போது ஒரு வயது குழந்தை கூட மொபைலில் யூடியூப் பார்க்கிறது. இது தவிர்க்க முடியாததாகிறது. குழந்தைகள் கையில் மொபைலை கொடுத்துவிட்டால் போதும் அவர்கள் யூடியூப் -ல் வரும் பீம், சின் சான், மற்றும் குழந்தைகளுக்கான வீடியோக்களை வரிசையாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த நேரம் தாயும் வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் முடித்து விடுவார்கள்.

YOUTUBE UPDATE DO SOMETHING NEW

இந்த ஒரு விஷயத்திற்காக பழக்கப்படுத்தும் இந்த பழக்கமானது நாளைடைவில் குழந்தைகள் வெளி விளையாட்டை மறந்து மொபைலிலேயே முடங்கி விடுகிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகள் சேட்டை செய்யாமல் ஒரே இடத்திலிருப்பதால் இதை கண்டுகொள்வதில்லை.

இதனால் குழந்தைகளின் கண்பார்வை கோளாறு ஏற்படுகிறது. மேலும் சுயமாக சிந்திக்கும் திறனும் குறைந்து போகிறது. இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றில் மிக மோசமானது என்னவென்றால் யூடியூப் -ல் நாம் ஒரு வீடியோ பார்த்தல் அது சம்பந்தமாகவே அடுத்தடுத்த வீடியோ -க்கள் வந்து நிற்கும்.

நாம் எல்லாவற்றையும்தான் யூடியூப் -ல் பார்க்கிறோம். வீட்டிற்கு வந்ததும் பிள்ளைகள் உடனே மொபைலை வாங்கி பார்க்கும் போது நாம் பார்த்தது சம்பந்தமாக வரும் வீடியோ -க்களை பார்க்க நேரிடும். அது நல்லதாக இருந்தால் பரவாயில்லை. அதே சமயம் கெட்டதாக இருந்தால்???

YOUTUBE UPDATE DO SOMETHING NEW

அதற்காகத்தான் யூடியூப் -ல் புதிய செட்டிங் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். நாம் எந்த வீடியோக்கள் பார்த்தாலும் இந்த செட்டிங் -ஐ ஆன் செய்துவிட்டு பார்த்தல் நாம் பார்ப்பது பதிவாகாது. மறுபடியும் அந்த செட்டிங் – ஐ ஆப் செய்துவிட்டால் போதும். நார்மல் மோடுக்கு வந்து விடும்.

செட்டிங் வழிமுறை

[wp_ad_camp_3]
YOUTUBE UPDATE DO SOMETHING NEW

யூடியூப் -ல் உங்கள் ப்ரொபைல்- ஐ கிளிக் செய்தால் வரிசையாக சில ஆப்சன்ஸ் வரும். அதில் Turn on Incognito என்று ஒரு ஆப்சன் இருக்கும் இதை கிளிக் செய்து அடுத்து வரும் சிறிய விண்டோவில் Got it என்பதை கிளிக் செய்தால் இந்த செட்டிங் ஆன் ஆகிவிடும். இப்பொழுது நீங்கள் பார்க்கும் அனைத்தும் ஹிஸ்டரி – யில் போய் சேராது. அதுமட்டுமில்லாமல் நாம் பார்த்த வீடியோ சம்பந்தமாக தானாக வரும் வீடியோக்களும் வராது.

திரும்பவும் ப்ரொபைல் – ஐ கிளிக் செய்து Turn off Incognito என்பதை கிளிக் செய்து இந்த செட்டிங் – ஐ ஆப் செய்து கொள்ளாலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள்.நன்றி.

10 COMMENTS

  1. […] குழந்தைகளைத் தான் எளிதில் பாதிப்படைய செய்யும். ஏனெனில்,குழந்தைகளுக்கு அப்போது தான் மூளை வளரச் செய்யும். அதனால் எளிதில் குழந்தைகளை பாதிப்படையச் செய்கிறது. […]