Contents
OLA ஆட்டோ
ஒரு காலத்தில் ஆட்டோவில் பயணம் செய்தால் குறைந்தது 100 -லிருந்து 150 வரை ஆகும். ஆனால் இந்த OLA ஆட்டோ நிறுவனம் வந்த பிறகு 29 ரூபாயிலிருந்து பயணம் செய்ய முடிகிறது. இதே போலத்தான் OLA டாக்ஸி -யில் பயணம் செய்வதற்கும் குறைந்த தொகையே ஆகும்.
ஆனால் இந்த OLA ஆட்டோ மற்றும் டாக்ஸி யில் பயணம் செய்யவேண்டும் என்றால் ஸ்மார்ட் போன் வழியாகத்தான் புக் செய்ய முடியும். அது நிறைய பேருக்கு குழப்பமாகவும், அதை முயற்சி செய்ய சோம்பல் பட்டுக்கொண்டும் அதிக தொகை கொடுத்து பயணித்துக்கொண்டிருகிறார்கள்.
இந்த முறையை அனைவரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்.
வழிமுறைகள்
உங்கள் ஆன்ராய்டு மொபைலில் இந்த லிங்கை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். செயலியை ஓபன் செய்ததும் உங்கள் மொபைல் எண் கேட்கும். அதை டைப் செய்தால் ஒரு OTP எண் வரும். அதை கொடுத்தால் உங்களது மொபைலில் லொகேஷன் ஆன் ஆகும்.
https://play.google.com/store/apps/details?id=com.olacabs.customer&hl=en_IN
[wp_ad_camp_3]
பிறகு மேப் ஓபன் ஆகும். அதில் நீங்கள் இப்பொழுது உள்ள இடத்தை பச்சை நிற பின் காட்டும்.அதோடு உங்கள் அருகாமையில் உள்ள ஆட்டோக்களையும் காட்டும்.
கீழே இந்த இடத்தில் உங்களுக்கு ஆட்டோ தவிர வேறு வாகனங்கள் தேவைப்பட்டாலும் அதை தேர்வு செய்து கொள்ளலாம். பிக்கப் லோகேசனில் உங்களின் இடம் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக்கொண்டு கீழே RIDE NOW என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் நீங்கள் எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடத்தை டைப் செய்யுங்கள்.
பின்னர் மறுபடியும் RIDE NOW என்பதை கிளிக் செய்தால், அடுத்து இந்த பயணத்திற்கான உத்தேசமான தொகை எவ்வளவு ஆகும் என்று தெரியும். அதற்கு கீழே CONFIRM BOOKING என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் பக்கத்தில் ACCEPT AND BOOKING என்பதை கிளிக் செய்தால் உங்களின் புக்கிங் உறுதி செய்யப்படும்.
அடுத்து இந்த மாதிரி சிறிய விண்டோவில் நீங்கள் புக் செய்த ஆட்டோ எண், ஓட்டுனருக்கு கால் செய்யும் ஆப்சன், இந்த பயணத்திற்கான OTP எண் போன்ற விவரங்கள் இருக்கும். வரும் ஓட்டுனரிடம் OTP எண்ணை சொல்லி பயணித்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும் இடம் வந்ததும் உங்களுக்குண்டான இறுதியான பயணத்தொகை உங்களுக்கு SMS ஆக வரும். அதை ஓட்டுனரிடம் கொடுத்தால் போதும்.
OLA நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண் +91-11-33553355 ஆனால் இந்த எண்ணிற்கு அழைத்து புக் செய்ய இயலாது. ஏதாவது சந்தேகங்கள் மட்டுமே கேட்டுக்கொள்ளலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்படலாம். எனவே கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி