மருத்துவ ஆலோசனை ஆன்லைன் -ல் செய்வதற்கான சிறந்த 5 ஆண்ட்ராய்டு செயலிகள்

0
2999
DocsApp, MFine,1mg, Tata Health, Phable - top best doctor consultation apps

Contents

மருத்துவ ஆலோசனை ஆன்லைன்

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய நாகரிக உலகில் அனைத்து வசதிகளும் நாம் இருக்கும் இடத்திலேயே கிடைப்பது சாதரணமாகிவிட்டது. அதில் இப்பொழுது மருத்துவ ஆலோசனை ஆன்லைன் -ல் பெறுவதும் ஒன்றாகி விட்டது.

அவற்றில் Electronics, Foods, Home Gadgets, Fashion things, Books, E-Books –ல் தொடங்கி இன்று School Lessons வரை Online-ல் கிடைத்து வருகிறது.

குறிப்பாக Corona Covid 19 Lockdown –ற்கு பிறகு இந்த மாதிரி அனைத்து சேவைகளும் Online –ற்கு மாறிவிட்டது.

அதில் குறிப்பிடத்தக்கது மருத்துவம். நாம் வெளியில் வர இயலாத இந்த காலகட்டத்தில் மாதாமாதம் நாம் பெற வேண்டிய doctor consultation –ஐ நாம் இந்த மாதிரி doctor consultation app மூலம்தான் பெற்றுவந்தோம்.

இது போன்ற மருத்துவ ஆலோசனை ஆன்லைன் -ல் பெறுவதற்கான apps –கள் தற்போது அதிகம் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் சிறந்த 10 apps –களை பற்றி பார்க்கலாம்.

Phable – Remote Health & Doctor Consultation

மருத்துவ ஆலோசனை செயலி best doctor consultation app

இந்த அப்ளிகேஷனில் நாம் இணைவதன் மூலம் அன்றாடம் நமது  உடல்நிலை கண்காணிக்கப்பட்டு ஒரு மருத்துவரால் ஆலோசனை வழங்கப்படும்.

உங்களின் அன்றாட வாக்கிங்,  ரத்த அளவு,  பிளட் பிரஷர்,  உயிர் அனுக்கள் போன்றவற்றின் அளவுகளை நாம் அணிந்திருக்கும் பிட்னஸ் bands  மூலியமாக  இந்த அப்ளிகேஷனில் கண்காணிக்க முடியும்.

இந்த அப்ளிகேஷனில் பெரும்பான்மையான நிறுவனங்களின் பிட்னஸ் bands   இணையும் வசதி உள்ளது.

மேலும் நமது மருந்து சீட்டை அப்லோட் செய்யும் வசதியும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது. எனவே நமது மருந்து சீட்டை பார்த்து மருத்துவர் தரும் ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் பெற முடியும்.

மேலும் இந்த அப்ளிகேஷனில் ஆயுர்வேதிக்  மருத்துவ டிப்ஸ்,  மூலிகை வைத்தியம்,  ஒர்க்கவுட் மற்றும் உடற்பயிற்சி  பற்றிய கட்டுரைகள், வீடியோக்களை  கண்டு  பயன்பெற முடியும்.

இவ்வாறு  பிட்னஸ் பான்ட்ஸ்  மூலமாகவும் மருத்துவருடனும்  இந்த அப்ளிகேஷன் மூலமாக  இணைந்துள்ளதால்  நமது உடல் நலம் பற்றிய  பயமில்லாமல் இருக்கலாம்.

மருத்துவ செயலி best doctor consultation app

DocsApp – மருத்துவ ஆலோசனை ஆன்லைன் 24×7 on Chat/Call

மருத்துவர் ஆன்லைன் best doctor consultation app DocsApp

DocsApp என்பது அனைவருக்கும் மிகவும் எளிமையாக ஆன்லைன் மருத்துவம் ஆன்லைன் -ல் பெற  ஒரு சிறந்த செயலி ஆகும். வீடியோ அழைப்பு, குரல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் உங்கள் மருத்துவர்களிடம் 24×7 உடன் Chat செய்வதின் மூலம் உங்கள் நோய்க்கான தீர்வைப் பெறலாம். இது நள்ளிரவாக இருந்தாலும் டாக்ஸ்ஆப்பில் சாத்தியமாகும்.

இந்த பயன்பாட்டில் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தினால், இந்த பயன்பாட்டிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளைத் தொடர்ந்து காணலாம்.

 • இலவச வரம்பற்ற ஆலோசனைகள்
 • எல்லா சுகாதார பிரச்சினைகளுக்கும் இலவசம்
 • இலவச ஆலோசனைக்கு முழு குடும்பம்
 • Chat மற்றும் வீடியோ ஆலோசனை

நீங்கள் ஒரு முறை பணம் செலுத்தியதும் உங்களுக்கு என தனியாக ஒரு ஸ்பெஷல் டாக்டர் நியமிக்கப்படுவார்.

நீங்கள் அவரை எந்த நேரம் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் நோய்கள் பற்றிய சந்தேகங்களை இடம் கேட்டு விளக்கம் பெறலாம்.

அதேபோல இந்த அப்ளிகேஷனிலேயே மருந்துகளும் ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவைக்க முடியும்.

மேலும் நீங்கள் ரத்தப்பரிசோதனைக்கும் உங்கள் வீட்டிற்கே வந்து இரத்த மாதிரிகளை எடுத்துச் செல்லவும் எந்த அப்ளிகேஷனிலேயே விண்ணப்பிக்கலாம்.

DocsApp -ல் நாம் என்னென்ன சலுகைகளை பெற முடியும்

 • நாம் மருத்துவரை உடனடியாக Chat மற்றும் அழைப்புகளை மேற்கொண்டு தொடர்பு கொள்ள முடியும்.
 • தற்போது இந்த App -ன் வழியாக பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நீங்கள் மருத்துவ சேவைகளை பெற முடியும். மேலும் அந்த நகரங்களில் உள்ள மொழிகளிலேயே டாக்டர்களிடம் பேச முடியும்.
 • ரகசிய மற்றும் பாதுகாப்பான மருத்துவ ஆலோசனையை பெற முடியும்.
 • 20க்கும் மேற்பட்ட நோய் அறிகுறிகளுக்கு இந்த இதன் வாயிலாக மருத்துவ ஆலோசனை பெற முடியும்.
 • நீங்கள் எடுக்கும் ரத்தப் பரிசோதனை மற்றும் இந்த அப்ளிகேஷன் வாயிலாக மருந்துகள் ஆடர் செய்யும் போதும் அதிக தள்ளுபடிகளைப் பெற முடியும்.

இந்த DocsApp ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்கு தளங்களிலும் கிடைக்கிறது.

நீங்கள் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி எவ்வாறு பயனுள்ளதாக உள்ளது என்று உங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிருங்கள்.

மருத்துவ ஆலோசனை ஆன்லைன் best doctor consultation app DocsApp

MFine – Online Doctor Consultation App and Book Health test

மருத்துவர்கள் ஆன்லைனில் ஆலோசனை best doctor consultation app

இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து உங்கள் செல் நம்பரை கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் உங்களுக்கோ அல்லது நீங்கள் யாருக்காக மருத்துவ வேண்டுமோ அவருக்கு நோய் தாக்கம் அல்லது நோய் அறிகுறி உள்ளது என்று தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் திரையில் பரிந்துரைக்கப்படும் சிறந்த மருத்துவமனைகளில் உள்ள பிறந்த டாக்டர்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.

அதன் பிறகு அவர்களின் மருத்துவம் ஆலோசனை கட்டணத்தை செலுத்திய பிறகு அவர்கள் கொடுக்கும் PRESCRIPTION PDF வடிவில் கிடைக்கும்.

அதை உங்கள் அருகிலுள்ள மருந்தகங்களிலோ அல்லது இந்த Mfine அப்ளிகேஷனிலோ வாங்கிக் கொள்ள முடியும்.

மேலும் Mfine நிறுவனம் பல தரமான மருத்துவமனைகளையும் அதிலுள்ள மருத்துவர்களையும் கொண்டுள்ளது. எனவே உங்கள் நோயின் தன்மைக்கேற்ப, பண தகுதிக்கேற்ப மருத்துவமனையையும் மருத்துவரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷனில் கிடைக்கும் ஆஃபர்ஸ்

முதல் முறை மருத்துவ ஆலோசனை ஆன்லைன் -ல் பெறுவதற்கு rs.199 மட்டுமே

உங்கள் வீட்டிற்கு வந்து ஹெல்த் செக்கப் செய்வதற்கு 60% தள்ளுபடி தருகிறார்கள்

ஹெல்த் செக்கப் செய்யும்போது ரத்த பரிசோதனை செய்யவேண்டுமென்றால் வீட்டிற்கு வந்து ரத்த மாதிரி எடுப்பதற்கு தனியாக பணம் செலுத்த தேவையில்லை

நீங்கள் MFine App -ல் சந்தாவாக செலுத்தி உறுப்பினராகும் பட்சத்தில் முதன்முறை என்றால் 50% தள்ளுபடி பெறலாம்

இந்த அப்ளிகேஷனில் கிடைக்கும் சேவைகள்

 • Chat மற்றும் Voice Call வாயிலாக மருத்துவ ஆலோசனை ஆன்லைன் -லியே நீங்கள் பெற முடியும்
 • உங்கள் வீட்டிலிருந்தே மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும் வசதி
 • தனி மற்றும் குடும்பத்திற்கான மருத்துவ சேவைக்கான சந்தா வசதி
 • குடும்பத்திற்காக சாந்த செலுத்தினால் 6 நபர்கள் வரை வரம்பில்லா மருத்துவ ஆலோசனைபெற முடியும்
 • உங்களின் மருத்துவ சோதனைகளின் பதிவுகள் டிஜிட்டல் வடிவில் கிடைப்பதால் பாதுகாப்பானதாகவும், அதே சமயம் எப்பொழுது வேண்டுமானாலும் கிடைக்கப்பெறும் வாய்ப்பும் உண்டு
 • இந்த App நீங்கள் மருந்து உண்ணும் நேரத்தை உங்களுக்கு நினைவூட்டவும் செய்யும்

மருத்துவ ஆலோசனை செயலி best doctor consultation app

Tata Health- மருத்துவ ஆலோசனை ஆன்லைன் -ல், Partner Clinics, Lab

மருத்துவ ஆலோசனை ஆன்லைன் best doctor consultation app

டாட்டா ஹெல்த் அப்ளிகேஷனிலும் 24 *7 ஆன்லைனில் டாக்டர்களை Chat மற்றும் அழைப்புகளை மேற்கொண்டு உங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை பெற முடியும்.

உங்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களிடம் நேரில் ஆலோசனை பெறுவதற்கு முன் பதிவு செய்வதற்கும் இந்த அப்ளிகேசன் உதவுகிறது.

டாட்டா ஹெல்த் அப்ளிகேஷனில் உயர்தர சான்றளிக்கப்பட்ட பெரும்பான்மையான மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இணைந்துள்ளனர்.

நீங்கள் கேட்கும் ஆலோசனைக்கேற்ப மருத்துவர்கள் கொடுக்கும் பரிந்துரைகள் டிஜிட்டல் வடிவில் கிடைக்கப்பெறும்.

மேலும் டாட்டா ஹெல்த் அப்ளிகேஷனில் NABL சான்றளிக்கப்பட்ட மருந்தகங்கள் மற்றும் ஆய்வகங்கள் இணைந்துள்ளன.

இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே உடற் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மற்றும் மருந்துகளையும் வாங்கிக்கொள்ள முடியும்.

இந்த சேவைகள் அனைத்தும் சரியான விலையில் கிடைக்கும். எந்த மறைமுக கட்டணங்களும் கிடையாது என்று டாட்டா ஹெல்த் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

டாட்டா ஹெல்த் அப்ளிகேஷனில் Fitcoins என்ற பெயரில் வெகுமதிகள் ஈட்டமுடியும். இவ்வாறு நீங்கள் ஈட்டும் Fitcoins களை இந்த அப்ளிகேஷனில் கிடைக்கும் கட்டண சேவைகளுக்கும் அல்லது top e-commerce partners இணைய தளங்களிலும் செலவு செய்து கொள்ளலாம்.

உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக டாட்டா ஹெல்த் அப்ளிகேஷன் உங்களின் ஜிமெயில் ஐடி அல்லது Health Bands உடன் இணைய வேண்டும்.

நீங்கள் உண்ணவேண்டிய முறைகள் மற்றும் நேரங்கள், மற்றும் எடுத்துக் கொள்ளவேண்டிய போன்றவற்றை இது நினைவூட்டும்.

உங்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்திற்காக தேவையான உலகத்தரம் வாய்ந்த கட்டுரைகளை இந்த அப்ளிகேஷனில் நீங்கள் வாசிக்க முடியும்.

உங்களின் ஹெல்த் ரிப்போர்ட், மெடிசன் பில், ஹெல்த் செக்கப் ரிப்போர்ட், பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் போன்றவற்றை ரகசியமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் உங்கள் மொபைலில் ரகசிய எண் கொண்டு பாதுகாக்க முடியும்.

மேலும் நீங்கள் எங்கு சென்றாலும் மொபைலில் இருந்து இந்த ரிப்போர்ட்களை எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மருத்துவ ஆலோசனை seyali best doctor consultation app

1mg – Online Medical Store & Healthcare App

மருத்துவ ஆலோசனை செயலி best doctor consultation app

1mg நிறுவனம் டெல்லி, பெங்களூர், குர்கான், அகமதாபாத், லக்னோ, மும்பை போன்ற பல முக்கிய நகரங்களிலும் வேறு சில நகரங்களிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிற நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் நீங்கள் பெறப்போகும் சேவைகள்

 • நமக்குத் தேவையான மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம்
 • மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனை ஆன்லைன் -ல் பெற முடியும்
 • மருத்துவ பரிசோதனை செய்வதற்கு பதிவு செய்யலாம்
 • நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்
 • ஹெல்த் டிப்ஸ் பற்றி அதிகம் படிக்கலாம்

நீங்கள் ஆர்டர் செய்யும் மருந்துகள் மற்றும் உங்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் போன்றவைகள் அன்று அல்லது மறுநாள் கிடைத்துவிடும்.

2 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் அலோபதி ஆயுர்வேதிக் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளில் கிடைக்கின்றன. மேலும் மருத்துவ சாதனங்களும் ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவையும் இந்த அப்ளிகேஷன் மூலமாக இருந்த இடத்திலிருந்தே வாங்கிக் கொள்ள முடியும்.

மருந்து வாங்குவதற்கு ஆர்டர் செய்யும்போது ஒவ்வொரு மருந்தாக தேடித்தேடி செய்வது நமக்கு சலிப்பை ஏற்படுத்தும். அதைப் போக்க உங்களது மருந்துச் சீட்டை அப்லோட் செய்யும் வசதியும் இந்த அப்ளிகேஷனில் உண்டு.

உங்களின் அருகே உள்ள மருத்துவரை தேர்ந்தெடுத்து நோய் சம்பந்தமாக அவருடன் சாட் செய்யும் வசதியும் இந்த அப்ளிகேஷனில் உண்டு.

 

மருத்துவ ஆலோசனை செயலி best doctor consultation app DocsApp