தமிழ்நாட்டில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நல்ல ஒரு செய்தியாக கடந்த 01/03/2019 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள்.
அதில் தமிழ்நாடு முழுவதும் Computer Instructor -களுக்கான 814 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பற்றிய தெளிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த தேர்வுக்கும் டிஎன்பிஎஸ்சி மற்றும் TNTET ஆகிய தேர்வுகளுக்கு போலவே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Contents
விண்ணப்ப விவரங்கள்
இதற்கான ஆரம்ப தேதி 20/03/2019 முதல் 10/04/2019 வரை விண்ணப்பிக்க முடியும்.
அடுத்ததாக எந்தெந்த பிரிவினர்களுக்கு காலி பணியிடங்கள் உள்ளன என்ற விவரங்களை கொடுத்துள்ளார்கள்.
அதை நன்கு படித்து பார்த்து உங்களது பிரிவுக்கு உண்டான காலிப்பணியிடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக எந்தெந்த பிரிவுகளுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு என்ற விவரங்களை கொடுத்து உள்ளார்கள்.
இந்த இட ஒதுக்கீடு விவரங்களில் கவனிக்க வேண்டிய முக்கியமான அறிவிப்பு, நாம் தமிழ் மீடியத்தில் PG டிகிரி மற்றும் B.ed முடித்திருந்தால் அதற்காக தனியாக 20% ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே நீங்கள் தமிழ் மீடியத்தில் PG மற்றும் B.ed டிகிரி முடித்து இருந்தால் அதற்கான சான்றிதழுக்கு விண்ணப்பித்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த சான்றிதழுக்கான விண்ணப்ப படிவம் எப்படி இருக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல விண்ணப்பித்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
கல்வித் தகுதி
இந்த தேர்வைப் பொருத்த வரையில் நாம் மிகவும் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம் கல்வித்தகுதி.
PG TRB தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம் Computer Instructors காலிப் பணியிடங்களுக்காக என்ன கல்வித்தகுதி வேண்டும் என்று அவர்கள் கொடுத்துள்ள அறிக்கையில் மிகத் தெளிவாக கொடுத்துள்ளார்கள்.
கம்ப்யூட்டர் சம்பந்தமாக நாம் ஏதேனும் PG டிகிரி முடித்திருக்க வேண்டும். அதோடு சேர்த்து B.ed டிகிரி முடித்திருக்க வேண்டும்.இதுதான் இந்த தேர்வுக்கான கல்வித் தகுதியாக இருக்கிறது.
இங்கே என்னென்ன டிகிரிகள் இந்தத் தேர்வுக்கு சரியானவை என்று கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு கட்டணம்
தேர்வுக் கட்டணம் 500 ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் Sc, St, Sca மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 250 ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் பணம் செலுத்தும் முறை ஆன்லைன் வாயிலாக மட்டுமே முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது இன்டர்நெட் பாங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வாயிலாக நமது தேர்வு கட்டணத்தை செலுத்த முடியும்.
PD TRB Computer Instructors Exam syllabus
இந்தத் தேர்வுக்கு Computer Science பிரிவில் இருந்து 130 மதிப்பெண்களுக்கும், பொது அறிவு பிரிவிலிருந்து பத்து மதிப்பெண்களும், சைக்காலஜி பிரிவிலிருந்து 10 மதிப்பெண்களுக்கும், ஆக மொத்தம் 150 மதிப்பெண்கள் 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும்.
சான்றிதழ்கள்
நீங்கள் எந்தெந்த சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற பட்டியல் கொடுத்துள்ளார்கள்.
அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு UG, PG, B.ED ஆகியவற்றிற்கான அசல் சான்றிதழ்கள்.
அதற்கடுத்து ஜாதி சான்றிதழ். அதில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்களாக இருந்தால் 11/11/1989 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த சான்றிதழ்களை நீங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக நீங்கள் தமிழ் மீடியத்தில் PG, B.ED டிகிரி படித்ததுடித்ததற்கான சான்றிதழ்களையும் விண்ணப்பித்து பெற்று வைத்துக் கொள்ளவும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களையும் மாற்றுத்திறனாளிகள் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
பொதுவான தகவல்கள்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ JPEG, JPG, PNG Format 20-60 KB -குள் இருக்கும்படி ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல வெள்ளைத்தாளில் கருப்பு மை பேனாவில் உங்களது கையெழுத்தை இட்டு அதை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் JPEG, JPG, PNG Format 10-30 KB -க்குள் இருக்கும்படி ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றால் Computer Based Exam மற்றும் Certificate Verification ஆகிய இரண்டு முறைகளில் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
இந்த அறிக்கைக்கான PDF File லிங்க்
[wp_ad_camp_3]
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நினைத்தால் அனைவருக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூகவலைதளங்களில் ஷேர் செய்யுங்கள் நன்றி