நாம் இந்த பதிவில் கார் மற்றும் இரு சக்கர வாகன இன்சூரன்ஸ் COVERFOX வெப்சைட்டில் ஆன்லைனில் புதிப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
நம் தளத்தில் ஏற்கனவே POLICY BAZAR வெப்சைட்டில் எப்படி வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதிப்பிப்பது என்று பார்த்தோம். அதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செயுங்கள்.
இந்த Coverfox மற்றும் Policy Bazar இரண்டு வெப்சைட்டுகளையும் பார்க்காமல் உங்களது கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பிக்க்காதீர்கள். ஏனென்றால் இந்த இரண்டு வெப்சைட்டுகளிலுமே ஓரளவு விலை குறைப்பில் எங்கும் அலையாமல் நமது வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பிக்கலாம்.
இரு சக்கர வாகன இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதிப்பிக்க
இந்த லிங்கை கிளிக் செய்து Coverfox வெப்சைட்டிற்கு வாருங்கள். இங்கே நீங்கள் கார் அல்லது பைக் எதற்கு இன்சூரன்ஸ் புதிப்பிக்க வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள்.
அடுத்து இந்த இடத்தில் உங்கள் வாகனத்தின் பதிவு எண் டைப் செய்து வாகனத்தின் இன்சூரன்ஸ் முடிந்து விட்டதா இல்லையா என்பதையும் தேர்ந்தெடுத்து பின் VIEW QUOTES என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்னர் வரும் பக்கங்களில் உங்கள் வாகனத்தின் கம்பெனி, மாடல், Self Start போன்ற விவரங்களை தேர்வு செய்து பின் VIEW QUOTES என்பதை கிளிக் பண்ணுங்கள்.
இப்பொழுது உங்கள் மாடல் பைக் அல்லது கார் -க்கு இன்சூரன்ஸ் கம்பெனிகளின் தவணை மற்றும் காப்பீடு தொகை போன்ற விவரங்களின் பட்டியல் வரும்.
இந்த இடத்தில் Comprehensive என்ற ஒரு ஆப்ஷன் இருக்கின்ற மாதிரி தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
கீழே உங்கள் வாகனத்திற்கு காப்பீடு தொகையை உங்களுக்கு உகந்ததாக மாற்ற இந்த ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் எந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும் என்று நினைகிறீர்களோ அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக வரும் பக்கத்தில் பைக் ஓனர் விவரங்களை Rc புக்கில் உள்ளவாறு டைப் செய்யுங்கள்.
பின்னர் உங்களின் முகவரி, அஞ்சல் எண், மாவட்டம் , மாநிலம் போன்ற விவரங்களை டைப் செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் வாகனத்தின் விவரங்கள் அனைத்தையும் டைப் செய்யுங்கள்.
அதன் பிறகு உங்கள் பழைய பாலிசி விவரங்களை தேர்ந்தெடுத்து பின்னர் Review and Pay என்பதை கிளிக் செய்து கொண்டு Payment பக்கத்திற்கு சென்று பணம் செலுத்தி கொள்ளலாம்.
பின்னர் நீங்கள் கொடுத்துள்ள இமெயில் id க்கு இன்சூரன்ஸ் பாலிசி வந்துவிடும்.
அதை கலர் பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம்.