பாடல்கள் கேட்பது என்பது அனைத்து தரப்பினரையும் கவர்ந்த ஒரு விஷயம்தான். இசையை ரசிக்க, கேட்க எத்தனை சாதனங்கள் வந்தாலும் அவை அத்தனையுமே மக்கள் மத்தியில் அது பிரபலமாகும். அந்த அளவுக்கு இசை வயது, மொழி தாண்டி அனைவரிடமும் கலந்த ஒன்றாகி விட்டது. அவ்வாறு பாடல்களை மிக துல்லியமாக ரசிக்க அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சாதனம்தான் Saregama Carvaan.
இது ஒரு தரமான ரேடியோ ஆகும். இதன்மூலம் Fm, Pen drive, Bluetooth போன்ற வழிகளில் பாடல்களை கேட்கலாம். மேலும் இந்த Saregama Carvaan -ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இனிமையான 5000 தமிழ் பாடல்களை பதிவு செய்து வைத்துள்ளனர்.
எனவே Fm , Pen drive, Bluetooth போன்ற எதுவும் இல்லாமலே 5000 பாடல்களை கேட்டுக்கொள்ளலாம். இந்த Saregama Carvaan மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதால் இந்நிறுவனம் Saregama Carvaan mini என்ற அடுத்த தயாரிப்பை வெளியிட்டது. இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது, இதின் விலை என்ன? போன்ற விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த Saregama Carvaan mini -யில் மொத்தம் 351 தமிழ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் USB வழியாகவும் பாடல்கள் கேட்கும் வசதியும் உள்ளது. பின்னர் ப்ளூடூத் வழியாகவும் நமது மொபைல்களை இணைத்து பாடல்களை கேட்கும் வசதியும் உள்ளது.
அடுத்து fm வழியாகவும் பாடல்களைக் கேட்டுக் கொள்ளலாம். நாம் மொபைலுக்கு பயன்படுத்தும் எந்த சார்ஜரையும் பயன்படுத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இது மொத்தம் ஆறு கலர்களில் கிடைக்கிறது. அதில் இந்த சிவப்பு கலர் பார்ப்பதற்கு மிகவும் லுக் ஆக இருக்கும்.
இதன் எம்ஆர்பி 2,490 , ஆன்லைனில் விலை மாறிக்கொண்டே இருக்கும். இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரம் அனைவரும் விரும்பும் வண்ணம் இருக்கும்.
எவ்வளவு அதிகமாக சத்தம் வைத்து கேட்டாலும் சிறிய இரைச்சல் கூட இல்லாமல் மிகத்தெளிவான இசையை கேட்கலாம்.
உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இந்த ரேடியோவை பரிசளித்தால் அவர்களுக்கு மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும்.
Saregama Carvaan mini சிறப்பம்சங்கள்
இதில் 351 தமிழ் பாடல்கள் உள்ளன.
5 லிருந்து 6 மணி நேரங்கள் வரை தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம்.
ஒரே நேரத்தில் 10 பாடல்கள் வரை ஸ்கிப் செய்யலாம்.
Headphone மூலமும் பாடல் கேட்டுக்கொள்ளலாம்.
இந்த ரேடியோவிற்கு நிறுவனத்தின் தரப்பில் 6 மாதம் வாரண்டி உள்ளது.
இந்த Saregama Carvaan mini பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.