தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி?

0
4075
மின் வாரியத்தில் கைப்பேசி எண்ணை இணைக்க 2 நிமிடங்கள் போதும்

Contents

மின் வாரியத்தில் கைப்பேசி எண்ணை இணைக்க

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து மின்சார வாரியத்தின் சேவைகளை பற்றியோ, நாம் பணம் செலுத்திய அல்லது செலுத்த வேண்டிய மின் கட்டணம் பற்றி அறிவிப்பது, மின்தடை எப்பொழுது என்ற முன்னறிவிப்பு செய்வது போன்ற இந்த வசதிகள் அனைத்தும் நமது மொபைல் எண்ணிற்கு எஸ் எம் எஸ் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த சேவையினால் பல நன்மைகள் உள்ளன. உதாரணத்திற்கு மின்தடை எப்பொழுது என்று நமக்கு தெரிந்து விட்டால் நமது வேலைகளை அதற்கேற்றார்போல் அமைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் ஒரு கம்பெனியோ அல்லது கடையோ மின்சாரத்தை நம்பி நடத்தி வந்தால் மின்தடை எப்பொழுது என்று தெரிந்துவிட்டால் உங்கள் வேலைகளை நீங்கள் தொடர வசதியாக இருக்கும்.

ஆனால் அதிக மக்களுக்கு தமிழ்நாடு மின் வாரியத்தின் இந்த சேவை அவர்களது மொபைல் எண்ணிற்கு எஸ் எம் எஸ் வாயிலாக வருவதில்லை.

ஏனென்றால் அவர்கள் தங்கள் கைப்பேசி எண்ணை அவர்களது மின் இணைப்பு எண்ணுடன்(TNEB Service Number) இணைத்து இருக்க மாட்டார்கள். அல்லது அந்த இடத்தில் அதற்கு முன்பு குடியிருந்தவர்களின் மொபைல் எண்ணிற்கு SMS போய்க்கொண்டிருக்கும்.

இதில் எதுவாக இருந்தாலும் நாம் இப்பொழுது இருக்கும் வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் நமது மொபைல் எண்ணை இணைப்பது எப்படி என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

மின் வாரியத்தில் கைப்பேசி எண்ணை இணைக்க 2 நிமிடங்கள் போதும்

மின் வாரியத்தில் கைப்பேசி எண்ணை இணைக்கும் முறை

  1. இந்த லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வந்து கொள்ளுங்கள் http://www.tnebltd.gov.in:8080/mobilenoentry/
  2. Choose Region Code என்பதில் உங்கள் ஊர் எந்த மண்டலத்தில் வருகிறது என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் மண்டலத்திற்குள் வருகிறது என்று தெரியவில்லை என்றால் https://www.tnebnet.org/qwp/kyr இந்த லிங்கை கிளிக் செய்து உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
  3. Enter Consumer Number என்பதில் உங்கள் மின் இணைப்பு எண்ணை டைப் செய்யுங்கள்
  4. Enter your Last transcation Receipt Number என்பதில் நீங்கள் கடைசியாக செலுத்திய மின் கட்டண ரசீது எண்ணை கவனமாக பார்த்து டைப் செய்யுங்கள்
  5. Enter your Last transcation Date (dd/MM/yyyy) என்பதில் நீங்கள் உங்கள் கடைசி மின் கட்டணத்தை செலுத்திய தேதியை தேதி மாதம் வருடம் என்ற வரிசையில் பதிவு செய்யுங்கள்
  6. Enter Mobile number என்பதில் எந்த மொபைல் எண்ணை உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டுமோ, அதை டைப் செய்யுங்கள்
  7. பின்னர் Submit என்பதை கிளிக் செய்தால் உங்களது புதிய மொபைல் எண் நீங்கள் இருக்கும் வீட்டின் மின் இணைப்புடன் பதிவாகிவிடும்