Contents
தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் விண்ணப்பம் டவுன்லோடு │ PSTM Form Download │ Certificate for having studied in Tamil Medium Application Download
Tnpsc Group 2, Group 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது தமிழ் வழியில் பயின்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் விண்ணப்பம் │ PSTM Form Download │Certificate for having studied in Tamil Medium Application Download செய்வது எப்படி யாருக்கு இது பொருந்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டிற்கு Tnpsc Group 4 தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தகுதி என்று வைத்துக்கொண்டால் 10ஆம் வகுப்பு வரை நீங்கள் தமிழ் வழியில் பயின்று இருந்தால் உங்களுக்கு முன்னுரிமை உண்டு.
அதேபோல Group 2 தேர்விற்கு பட்டப்படிப்பு தகுதி என்றால் பட்டப்படிப்பு வரை நீங்கள் தமிழ் வழியில் பயின்று இருக்க வேண்டும்.
அதாவது அனைத்து படங்களுமே தமிழ் வழியில் பயின்று இருக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக மட்டும் வைத்துக்கொண்டு பிற பாடங்கள் ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ இருந்தால் அது வந்து தமிழ்வழியில் பயின்றதற்கான தகுதி இல்லை.
எனவே நீங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் விண்ணப்பிக்க தகுதி உள்ள நபராக இருந்தால் கீழே உள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, அதை பூர்த்தி செய்து கையெழுத்திட தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி அப்லோட் செய்ய அல்லது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.