Tnpsc question answer in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வு வினா விடைகளின் தொகுப்பு -18

3200
tnpsc group 4 important questions,tnpsc group 4 tamil,tnpsc group 4,tnpsc group 4 science important,tnpsc important questions,tnpsc,tnpsc group 4 science questions and answers in tamil,tnpsc group 2a important topics,tnpsc tamil importaant questions,tnpsc group 4 vao exam pattern,tnpsc group 4 science shortcut,tnpsc group 4 vao,tnpsc group 4 science syllabus,tnpsc group 4 study plan,group 4

Tnpsc group exams question answer

Tnpsc group exams தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒரு காரியம். அதற்குத் தேவை விடாமுயற்சியும் சற்று கடின உழைப்பும். இரண்டும் இருந்தால் உங்களால் கண்டிப்பாக tnpsc குரூப் தேர்வுகள், விஏஓ தேர்வுகள், tet தேர்வுகள் மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வுகளிலும் உங்களால் வெற்றி பெற முடியும். 1. மயங்கொலி எழுத்துகள் யாவை? – ண,ன,ந,ல,ழ,ள,ர,ற 2.ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் வரும் சொல்லிற்கு ஒரு (எ. கா) தருக மற்றும் பொருள் கூறுக: – வாணம்- வெடி வானம்- ஆகாயம் 3. விலை என்ற பொருளின் வேறுபட்ட சொல் யாது? – பொருளின் மதிப்பு 4. ஏரி என்ற சொல்லின் வேறுபட்ட பொருள் யாது? – குளம் 5. ஏறி என்ற பொருளின் வேறுபட்ட சொல் யாது? – மேலே ஏறி 6. விழை என்ற பொருளின் வேறுபட்ட சொல் யாது? – விரும்பு 7. விளை என்ற சொல்லின் வேறுபட்ட பொருள் யாது? – உண்டாக்குதல் 8. கூறை என்ற சொல்லின் வேறுபட்ட பொருள் யாது? – புடவை 9. கூரை என்ற பொருளின் வேறுபட்ட சொல் யாது? – வீட்டின் கூரை 10. பறவை வானில்____? – பறந்தது 11. சிரம் என்பது___? – தலை 12. வண்டி இழுப்பது___? – காளை 13. கதவை மெல்லத்___? – திறந்தான் 14. பூ____வீசும்? – மணம் 15.புலியின்____சிவந்து காணப்படும்? – கண் 16.குழந்தைகள்____விளையாடினர்? – பந்து 17. வீட்டு வாசலில்____போட்டனர்? – கோலம் 18.sculpture என்பதின் தமிழ் சொல் யாது? – சிற்பங்கள் 19.chips என்பதின் தமிழ் சொல் யாது? – சில்லுகள் 20. Readymade dress என்பதின் தமிழ் சொல் யாது? – ஆயத்த ஆடை 21. makeup என்பதின் தமிழ் சொல் யாது? – ஒப்பனை 22. விருந்தினர் முகம் எப்போது வாடும்? – நம் முகம் மாறினால் 23. நிலையான செல்வம்___? – ஊக்கம் 24. ஆராயும் அறிவுடையவர்கள்____? – பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்லார் 25.பொருளுடைமை என்னும் சொல்லினை பிரித்து எழுதக் கிடைப்பது? – பொருள்+உடைமை 26. உள்ளுவது+எல்லாம் என்னும் சொல்லினை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? – உள்ளுவதெல்லாம் 27. பயன்இலா என்னும் சொல்லினை பிரித்து எழுதக் கிடைப்பது? – பயன்+இலா 28. உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது தள்ளாமை தள்ளினும் நீர்த்து என்னும் குறளை சரியாக எழுதுக: – உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து 29. அரும்பயன் ஆயும்_____சொல்லார் _____இல்லாத சொல்? -அறிவினார் -பெரும்பயன் 30. ஆக்கம்____செல்லும் அசைவுஇலா ஊக்கம்____உழை -அதர்வினாய்ச் -உடையான் 31. மல்லெடுத்த என்னும் சொல்லின் பொருள் யாது? – வலிமை பெற்ற 32. சமர் என்ற சொல்லின் பொருள் யாது? – போர் 33. நல்கும் என்ற சொல்லின் பொருள் யாது? – தரும் 34. கழனி என்ற சொல்லின் பொருள் யாது? – வயல் 35. மறம் என்ற சொல்லின் பொருள் யாது? – வீரம்

மேலும் TNPSC பற்றிய பயனுள்ள பதிவுகளுக்கு

https://dosomethingnew.in/category/tnpsc-tntet-முக்கிய-வினா-விடைகள்/