HP கேஸ்
எல்லாமே ஆன்லைன் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அதன் வேகத்திற்கு ஏற்ப ஓட வேண்டியுள்ளது. அதன்படி முன்பெல்லாம் சிலிண்டர் புக் செய்வதற்கு அந்தந்த சிலிண்டர் நிறுவங்களுக்கு போன் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதற்கு லைன் கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
பிறகு IVR -ல் சிலிண்டர்களை புக் செய்து கொண்டிருந்தோம். இப்பொழுது இன்னும் அட்வான்ஸாக ஆன்லைனிலேயே சிலிண்டர் புக் செய்து அதற்கு பணமும் கட்ட முடியும்.
HP கேஸ் சிலிண்டர் ஆன்லைனில் எப்படி புக் செய்து பணம் செலுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த லிங்கை கிளிக் செய்து HP GAS நிறுவனத்தின் APP -ஐ இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.hpclgas&hl=en
APP -ஐ ஓபன் செய்தால் இந்த பக்கம் வரும். இதில் நீங்கள் HP கேஸ் சிலிண்டர் நிறுவனத்தில் எந்த மொபைல் எண் இணைத்துள்ளீர்களோ அந்த எண்ணை இதில் டைப் செய்து LOG IN / SIGN IN என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்னர் உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும். அதை அடுத்து வரும் இந்த பக்கத்தில் டைப் செய்து பின் உங்களுக்கு நினைவில் இருக்கின்ற மாதிரி PASSWORD உருவாக்கி கொண்டு கீழே உள்ள VERIFY OTP என்பதை கிளிக் செய்தால் மறுபடியும் LOG IN பக்கத்திற்குள் செல்லும்.
இங்கே உங்களின் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து LOG IN செய்தால் இந்த முகப்பு பக்கம் வரும்.
இதில் LPG REFILL ORDER (ONLINE PAYMENT) என்பதை கிளிக் செய்தால் நீங்கள் மானியத்தில் வாங்கிய சிலிண்டர்களின் எண்ணிக்கை, மீதமிருக்கும் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் இருக்கும். அதற்கு கீழே PAY ONLINE என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு TERMS AND CONDITION ஐ படித்து பார்த்து கொண்டு ACCEPT AND PAY ONLINE என்பதை கிளிக் செய்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற வழிகளில் பணம் செலுத்தும் வசதி வரும்.
அதில் உங்களுக்கு எது வசதியோ அந்த ஆப்சனை தேர்ந்தெடுத்து பணம் செலுத்திய பிறகு சிலிண்டர் புக்கிங் விவரங்கள் உங்களின் மொபைல் எண்ணிற்கு வந்து விடும்.
மேலும் இந்த REFILL ORDER HISTORY என்பதை கிளிக் செய்து நாம் பதிவு மற்றும் பணம் கட்டிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.