புத்தாண்டு ராசி பலன்கள் 2019 கும்பம்

2696
கும்பம், கும்ப ராசி, கும்ப ராசி புத்தாண்டு பலன்கள், கும்ப ராசி புது வருட பலன்கள், கும்பம் ராசி புத்தாண்டு பலன்கள், கும்பம் ராசி புது வருட பலன்கள், கும்ப ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 கும்பம் ராசி பலன்கள், கும்பம் ராசி பலன்கள் 2019, கும்பம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 கும்பம், புத்தாண்டு பலன்கள் கும்பம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் கும்பம், kumbam, kumbam raasi, kumbam rasi new year 2019, kumba rasi palangal 2019, kumba rasi palan 2019, kumba rasi palangal 2019 in tamil, kumba rasi palan 2019 in tamil,

2019 New Year Predictions

கும்பம்

சுய ஜாதகத்தில் யாருக்கு எத்தனை சதவிகிதம் பலன்கள் என்ற சூட்சமத்துடன்

 பொதுவாக சொல்லப்படும் பலன்கள் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.

சொல்லப்படும் பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே. இருந்தாலும் இன்னொரு சூட்சமமும் உள்ளது.

அந்த சூட்சமத்தையும் அதன்படி பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்

புத்தாண்டு பலன்கள் கும்பம் – 2019

கும்பம் ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு வாழ்க்கை, தொழில், வேலை, நட்பு, குடும்பம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்களைக் கொடுக்கும்.

ஆரம்பத்தில் அவை கஷ்டமாகத் தோன்றினாலும் வருடத்தின் இறுதிப் பகுதியில் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்பது உங்களுக்குத் தெரிய வரும்.

இளைய வயதுகாரர்களுக்கு அவரவர்கள் வயதுக்கேற்றப்படி படிப்பு, வேலை, திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை கிடைக்கும் வருடம் இது.

நடுத்தர வயதுக்காரர்களை இதுவரை தொல்லைப்படுத்தி கொண்டு வந்த கடன் தொல்லைகள், குடும்பச் சிக்கல்கள், வழக்குகள் வருடத்தின் ஆரம்பத்திலேயே சாதகமான முடிவுக்கு வரும்.

ராசிநாதன் ராசியை பார்க்க பலம் கூடும் என்ற அமைப்பின் படி, ராசிநாதன் பதினொன்றில் அமர்ந்து தனது மூன்றாம் பார்வையால் உங்கள் ராசியை, பலம் அதிகரிப்பதால், உங்களால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும்.

ஆனாலும், சனி மந்த கிரகம் என்பதால், எதுவும், கடின உழைப்பிற்கே பின்பே வெற்றி பெறும்.

உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால், உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.

மேலும் மார்ச் மாதத்தில் நடக்கும் ராகு-கேதுப்பெயர்ச்சி மூலம் ராகு ஐந்தாமிடத்திற்கும் கேது பதினொன்றாமிடத்திற்கும் மாற இருக்கிறார்கள்.

பதினோராமிட கேதுவால் இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு வெற்றிகள் இருக்கும். விரும்பிய தேசத்திற்குச் செல்வீர்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு வெளி மாநிலம் மற்றும் தூரமான இடங்களில் பணி அமையும். இன்னும் சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவு இடங்களுக்கு போய் வாரா வாரம் திரும்புவது போன்ற வேலைகள் கிடைக்கும்.

செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.

பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு இருக்கப் போவது இல்லை.

செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளிப் போகலாம். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும்.

அரசு, தனியார் துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம்.

சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்கு வழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம்.

மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப் பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சொத்துத் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம். ஏற்கனவே

நீதிமன்றங்களில் வழக்கு இருப்பவர்கள் தீர்ப்பு வரும் நாள் பக்கத்தில் இருந்தால் அதைக் கொஞ்சம் தள்ளிப் போட முயற்சிப்பது நல்லது. போலீஸ், கோர்ட் வழக்கு போன்றவை இன்னும் சில மாதங்களுக்கு சாதகமாக இருக்காது.

அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம்.

யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.

இளைய சகோதர சகோதரிகளுக்கு இந்த வருடம் உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு.

யாரையும் நம்ப வேண்டாம். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதியாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தில் சந்தோஷமும், மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தன காரகனான குரு தன ஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து உங்களின் வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ, வாங்கவோ செய்வீர்கள்.

மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். தெரிந்த கேள்விதான் கேட்பார்கள் என்பதால் பரீட்சை எழுதுவற்கு சுலபமாக இருக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும்.

மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச் செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும்.

ஆரம்பத்து பல நாட்கள் ஆகியும் தொடங்கிய இடத்திலேயே சுழலுவது போல் காட்சி தந்தாலும், வருட இறுதியில், அனைத்தும், நல்ல முடிவை நோக்கிதான் காத்திருக்கிறது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளும்படியான வருடம் இது

பலன்கள் யாருக்கு, எவ்வளவு நடக்கும்?

மேலே சொன்ன பலன்கள் யாவும், கும்பம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள். அவற்றை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. நன்மை தரும் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும்

பலன்கள் நடக்கும் அளவு மதிப்பெண்களில்

(உங்களின் சுய ஜாதகத்தில்)

  • விருச்சிகத்தில், மீனத்தில், ரிஷபத்தில், கடகத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லது சமர்கள் இருக்க வேண்டும் (90 மதிப்பெண்கள்)
  • தனுசில், மேஷத்தில், மிதுனத்தில், சிம்மத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லது சமர்கள் இருக்க வேண்டும் (60 மதிப்பெண்கள்)
  • கன்னியில், துலாமில், மகரத்தில், கும்பத்தில் – உங்கள் லக்ன சுபர்கள், அசுபர்கள் அல்லது சமர்கள் இருக்க வேண்டும் (30 மதிப்பெண்கள்)

கவனத்தில் கொள்ளவேண்டியவை

  • லக்ன சுபர்கள் எனில் அதிக நன்மையையும், லக்ன அசுபர்கள் எனில் அதிக தீமையையும், லக்ன சமர்கள் எனில் அளவான நன்மையையும் மற்றும் சமாளிக்கக்கூடிய அளவு தீமையையும் ஜாதகர் பெறுவார்.
  • சுபர்கள், அசுபர்கள், சமர்கள் பெற்றுள்ள ஸ்தான பலம் மற்றும் நடக்கும் தசாபுத்தி – சொல்லபட்ட பலன்களின் அளவை மாற்றி அமைக்கும்.

கும்பம், கும்ப ராசி, கும்ப ராசி புத்தாண்டு பலன்கள், கும்ப ராசி புது வருட பலன்கள், கும்பம் ராசி புத்தாண்டு பலன்கள், கும்பம் ராசி புது வருட பலன்கள், கும்ப ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 கும்பம் ராசி பலன்கள், கும்பம் ராசி பலன்கள் 2019, கும்பம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 கும்பம், புத்தாண்டு பலன்கள் கும்பம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் கும்பம், kumbam, kumbam raasi, kumbam rasi new year 2019, kumba rasi palangal 2019, kumba rasi palan 2019, kumba rasi palangal 2019 in tamil, kumba rasi palan 2019 in tamil,

யாருக்கு பெரிதாக பலனளிக்காது?

  • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் போன்ற 90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறும் இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது, உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ நடக்காது என்பதனை மனதில் நிறுத்துங்கள்

இறைவழிபாடு

எந்த கிரகம் உங்களுக்கு தீமைகளை அளிக்க முற்பட்டாலும் குருபகவான் என்று அழைக்கபடும் வியாழன் கிரகம், தனது அருட்பார்வையால் அன்பர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் இருந்து கடைத்தேற்றிவிடுவார் என்பது பலரும் அறிந்ததே, அப்படிபட்ட குருபகவான் உங்கள் சுய ஜாதகத்தில் எங்கு அமர்ந்திருக்கிறார் அறிந்து கொண்டு இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.

  • மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு    –     செவ்வாய்க்கிழமை
  • ரிஷபம் அல்லது துலாமில் குரு             –     வெள்ளிக்கிழமை
  • மிதுனம் அல்லது கன்னியில் குரு          –     புதன்கிழமை
  • கடகத்தில் குரு                                        –     திங்கட்கிழமை
  • சிம்மத்தில் குரு                                       –     ஞாயிற்றுக்கிழமை
  • தனுசு அல்லது மீனத்தில் குரு                –     வியாழக்கிழமை
  • மகரம் அல்லது கும்பத்தில் குரு              –     சனிக்கிழமை

 வழிப்பாட்டு ஸ்தலங்கள்   

  • திருச்செந்தூர் முருகன் கோயில்
  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும்.  

கும்பம், கும்ப ராசி, கும்ப ராசி புத்தாண்டு பலன்கள், கும்ப ராசி புது வருட பலன்கள், கும்பம் ராசி புத்தாண்டு பலன்கள், கும்பம் ராசி புது வருட பலன்கள், கும்ப ராசி புத்தாண்டு பலன்கள் 2019, 2019 கும்பம் ராசி பலன்கள், கும்பம் ராசி பலன்கள் 2019, கும்பம் ராசி புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019, புத்தாண்டு பலன்கள் 2019 கும்பம், புத்தாண்டு பலன்கள் கும்பம் ராசி 2019, ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2019, 2019 புத்தாண்டு பலன்கள் கும்பம், kumbam, kumbam raasi, kumbam rasi new year 2019, kumba rasi palangal 2019, kumba rasi palan 2019, kumba rasi palangal 2019 in tamil, kumba rasi palan 2019 in tamil,

குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், தை, மாசி பங்குனி (மூன்று மாதங்களுக்குள்) தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,  மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு இந்த ஆண்டை இனிய ஆண்டாக மாற்றும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திர சேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************