வறுத்த தேங்காய் சட்னி மதுரை ஸ்டைலில் செய்வது எப்படி?

1674

வறுத்த தேங்காய் சட்னி

சாதாரண தேங்காய் சட்னி அரைத்து சலித்துப்போய் விட்டதா? இதோ வித்தியாசமான வறுத்த தேங்காய் சட்னியை மதுரை ஸ்டைலில் எப்படி அரைப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வறுத்த தேங்காய் சட்னி அரைக்க தேவையான பொருட்கள்:

  • ஒரு அரை மூடி தேங்காய் துருவி
  • ஒரு ஸ்பூன் அளவு  குழம்பு கடலைப்பருப்பு
  • ஆறு வரமிளகாய் எடுத்துக் கொள்ளவும்
  • சிறிதளவு புளி
  • தேவையான அளவு எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு கடுகு கருவேப்பிலை எடுத்துக் கொள்ளவும்

சட்னி செய்முறை:

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் எடுத்து வைத்திருக்கும் குழம்பு கடலைப்பருப்பை நன்கு போட்டு வறுக்கவும்.
  • பின்பு வரமிளகாய் அதில் சேர்த்து வதக்கவும்.
  • இவை இரண்டும் நன்கு வதங்கியவுடன் துருவி வைத்திருக்கும் தேங்காயை எடுத்து அதில் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • சிறிதளவு புளியை அதில் சேர்க்கவும். இதை ஒரு தட்டில் போட்டு நன்கு ஆற வைக்கவும்.
  • இப்பொழுது தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • இதை நன்கு ஆறியவுடன்  மிக்ஸி ஜாரில் போட்டு வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு கடுகு சேர்த்து பொரியவிடவும் நன்கு பொரிந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து பொரியவிடவும்.
  • இவற்றை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் போட்டு நன்கு கிளறி விடவும்.

இதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இப்பொழுது மிகவும் சுவையான அருமையான சட்னி ரெடி.