ராகு கேது பெயர்ச்சி மகரம் பலன்கள்
யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது
ராகு கேது பெயர்ச்சி மகரம் 2019
ராகு கேது பெயர்ச்சி மகரம் ராசிக்கு ஏழரைச்சனியில் முதல் இரண்டரை ஆண்டுகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில், மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழில் ராகுவும், ராசியில் கேதுவும் இருந்து உங்களுக்கு சொல்லவொண்ணா இன்னல்களை தந்த ராகு கேதுக்கள் இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம்ஆறில்ராகுவும்,பண்ணிரண்டில் கேதுவும் மாற போகிறார்கள். இது ஒரு விதத்தில் யோகமே.
ராகு இருப்பது 7ல் (கடகம்) – வரவிருப்பது 6ல் (மிதுனம்)
கேது இருப்பது 1ல் (மகரம்) – வரவிருப்பது 12ல் (தனுசு)
ஆறாமிடராகு
மிதுன ராசிக்கு ஆறில் ராகு சஞ்சரிக்கும் இந்த காலம், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகும்.
ஏனெனில், இம்முறை ராகு அமர போவது புதனின் வீட்டில், சொந்தமாக வீடுஇல்லாத ராகு கேதுக்கள், தான் அமரும் இடத்தின் அதிபதியின் தன்மையோடு தனது பலத்தை வெளிப்படுத்தி கொள்வார்கள் என்பது விதி.
அதன்படி, புதனின் சேட்டைகளோடு களம் இறங்குவதால், கலகலவென நகரும்காலத்தில் அதிக கவனம் தேவைப்படும்.
எச்சரிக்கை. ஆனாலும் பொதுவாக 3, 6, 11ல் வந்து அமரும் ராகு கேது எப்பவும் ஜாதகருக்கு தேவையான விசயங்களை தருவதில் முன்னுரிமை தரும் என்பதால், நிம்மதி அடையுங்கள்.
ஆகையால், மகரம்ராசிக்காரர்களுக்கு ராகு கேதுப் பெயர்ச்சியால் மிக அதிக நன்மைகள் கிடைக்கும்.
பன்னிராண்டாமிடகேது
கேதுபகவான்12-மிடத்திற்கு மாறுவதால்,மகரராசியினருக்குபன்னிரண்டாமிட அதிபதி குரு என்பதாலும், குருபகவான் முழுசுப கிரகம் என்பதாலும்.
ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும்.
ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார்.
ராகு கேது பெயர்ச்சி மகரம் ராசிக்கான பலன்கள்
பிறந்தஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு இம்முறை ராகுபகவானால் மேம்பட்ட நல்லலாபங்கள் கிடைக்கும்.
வீடு, மனை, ஆசைகள்
இதுவரைவீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பரவீடு அமைய போகிறது.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படைவீட்டிற்காவது மாற முடியும். வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும்நினைத்தபடியே நிறைவேறும்.
வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
கடன் பெற்று நல்ல பிளாட் வாங்க முடியும். எதிர்காலமுதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனைவாங்குவீர்கள்.
வேலைவாய்ப்பு தொழில்முன்னேற்றம், வெளிநாடு பயணம்
இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்குப்பிடித்த வகையில் நல்லசம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
பொதுவாழ்க்கையில்இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள்உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும்.
கலைத்துறையினர் இதுவரை இல்லாதநல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும்.
பொருத்தமில்லாதவேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகிநினைத்த மாதிரியான வேலை கிடைக்கும்.
உங்களைப் பிடிக்காத மேலதிகாரிமாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில்இருந்த பிரச்னைகள் மறையும்.
ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்றமுடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாகநடக்கும்.
தொழில்
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக்கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பள உயர்வு, பதவிஉயர்வு போன்றவைகள் கிடைக்கும்.
தொழிற்சங்கங்களில் பதவியில்இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள், சுயதொழில்செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் தொழில்மேன்மையும், புதிய தொழில் தொடங்குதலும்அடைவீர்கள்.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமானநிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும்உதவிகரமாக இருப்பார்கள்.
தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும்.அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோஅதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும்.
எந்த ஒருகாரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலைவிரிவுபடுத்தலாம். புதிய முயற்சிகளை இப்போது செய்யலாம்.
செய்தொழில் விருத்தி, எதிலும் லாபம், யாவற்றிலும் வெற்றி, அரசலாபம், அன்னிய இன, மத, மொழிக்காரர்களால் நன்மை.
வெளிநாடு, வெளிமாநில மேன்மை, தூரஇடங்களில் இருந்து பணம் கிடைத்தல், சிறிதுமுயற்சி, பெரியநன்மை. அதிர்ஷ்டம் ஆகிய பலன்கள் உங்களுக்கு நடக்கும். தாராள பணவரவு
விவசாயிகளுக்கு இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்தபயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில்குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும்விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.
குடும்பம்
தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உதவிகள்நன்றாக இருக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்மகாரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர்வாங்குவீர்கள்.
இதுவரைநடக்காமல் தட்டிப்போயிருந்த அத்தனை பாக்கியங்களும், கொடுப்பினைகளும்இப்போது தடையின்றிக் கிடைக்கும்.குழந்தைகளால் பெருமை போன்ற பலன்களைச் செய்வார்.
குடும்பத்தில்இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த மங்களகாரியங்கள் இனிமேல் சிறப்பாகநடைபெறும். காதலித்துத் கொண்டிருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன்திருமணம் நடக்கும்.
சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தைபாக்கியம் தாமதித்தவர்களுக்கு நல்லமுறையில் குழந்தை பிறக்கும்.இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும்பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.
திருமண வாழ்வில் பிரச்னைகள்ஏற்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகஅமையும். இந்த வாழ்க்கை நீடித்தும் நிம்மதியாகவும் இருக்கும்.
கடன் மற்றும் வழக்கு
வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக்கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும்.
அநியாயவட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழிபிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும்எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாகபேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்றுமுடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம்.
பெண்களுக்கான விசேஷ பலன்கள்
பெண்களுக்கு இந்த ராகுகேதுப் பெயர்ச்சி சிறப்பான நன்மைகளைத் தரும்.உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில்இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள்உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும்.
வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வாங்க முடியும். புதிதாக வாகன யோகம்வந்து விட்டது. நீண்ட காலமாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த புதியவாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.
அடுத்தடுத்து நன்மையாக வந்திருக்கும்இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி மகரம் ராசியினர் உங்கள் வாழ்வைவளப்படுத்திக் கொள்வீர்கள் என்பது நிச்சயம்.
குறிப்பிட்ட சிலர் கடந்த காலங்களில் மனக்கஷ்டங்களையும் வாழ்வில்தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது இருக்காது.எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும். வருமானத்திற்கு எந்த விதகுறையும் இருக்காது.
செலவுகள் அதிகம் இருக்கும் எனபதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றிநல்ல விதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம் என்பதால் வரப்போகும்வருமானத்தை முதலீடாக்குவது நல்லது.
ராகு கேது பெயர்ச்சி மகரம் சிறப்பு பலன்கள்
(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)
ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள்.
ராகு கேது பெயர்ச்சி மகரம் – குருபெயர்ச்சி வரை
(07.03.2019 முதல் 04.11.2019 வரை)
உங்களுக்கு இம்முறை நல்ல பணவரவுகள்இருக்கும்.வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும்.திரவப் பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. இதுவரை நல்லவேலைகிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்லசம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம்பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்குஇது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக்காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும்.இருந்தாலும் ஏழரைச்சனி நடப்பில் இருப்பதால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம்
ராகு கேது பெயர்ச்சி மகரம் – குருபெயர்ச்சி பின்
(04.11.2019 முதல் 24.01.2020வரை)
ஏழரைச்சனி நடந்தாலும், சனியுடன் குரு சேரும்இந்த காலம் மிக சிறந்த பொருளாதார நன்மைகளை நிச்சயம்உங்களுக்கு தரும். குருபகவானும் அதிகவலுவாக உள்ளதால் மனதில் ஆன்மிக எண்ணங்கள்மேலோங்கும். தந்தையைப் பெற்ற பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்புஇருக்கிறது.
இந்த வருடம் நீங்கள் செய்யும் ஒரு உதவியால் வாழ்நாள் முழுவதும்உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். கடன் பிரச்னைகளிலும் வழக்குவிவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள்நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும்.
இதுவரை காணாமல்போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம்தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனி ஒருவராகவே சமாளித்துதீர்க்கப் போகிறீர்கள்..
ராகு கேது பெயர்ச்சி மகரம் – சனிபெயர்ச்சிக்கு பின்
(24.01.2020 முதல் 23.09.2020 வரை)
ஜென்ம சனி வருவதால், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமிது இருந்தாலும் சனி பகவான் உங்களுக்கு ராசிநாதன் என்பதாலும் அவரே உங்களுக்கு தான,வாக்கு, குடும்ப ஸ்தானங்களுக்கும்அதிபதி என்பதால், சற்று நிம்மதியும் அடையலாம். தனக்கு தானே அதிக துன்பங்களை தரமாட்டார் என்பதல்ல இதன் அர்த்தம், துன்பத்தை சமாளிக்கும் ஆற்றல் திறன் தந்துவிடுவார் என்பதே அது. எதிரி தன்னை எப்படி தாக்குவார் என்று தெரிந்தால் அதில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள முடியும் என்பதன் சூட்சமமே இது. ஆகையால், இயல்பாகவேசனிபகவானின் குணங்கள் உங்களிடம் இருப்பதால், சனி எவ்வாறு உங்களை தாக்குவார் என்பது, அந்த தாக்குதலில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே.இருந்தாலும் இந்த சமயங்களில், எடுக்கும்முடிவுகள் அனைத்தும் மிக அதிகமான அளவு முயற்சிக்கு பின்னரே எதிர்பார்த்த அளவு வெற்றி தராவிடிலும், குறைந்த பட்ச வெற்றியையாவது தொட வேண்டுமெனில், உங்கள் முடிவுகளை, வெற்றி பெறும் வரை யாரிடமும் வெளியிட வேண்டாம். ஏனெனில் ஜென்ம சனி என்பது ஒருவகையில்புனர்பூசம் தோசம் போன்றே செயல்படும். இந்த சமயங்களில், தன்னை அதிகம் வெளிபடுத்தி கொள்ளாமல் இருப்பதே சிறப்பு.
ராகு கேது பெயர்ச்சி மகரம் ராசியில் பாதிப்புயாருக்கு இருக்கும் –யாருக்கு இருக்காது
பாதிப்பு குறைய என்ன பரிகாரம்
சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும். அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடுமற்றும் பரிகார முறைகளையும் தெரிந்துகொள்ள பின்வரும் வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.
ராகு கேது பெயர்ச்சி மகரம் பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது
************************************
மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM
மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)
ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,
(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)
எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா
M.M.CHANDRA SEGARAN,
(M.M.சந்திரசேகரன்)
ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை
70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்
*********************************
எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்
குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு
உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
*********************************