சேனைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்:
சோம்பு-1/4 ஸ்பூன்
சேனை கிழங்கு-1/4
மஞ்சள்தூள்-1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள்-1ஸ்பூன்
கரமசாலா -1/2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
சேனைக்கிழங்கு தேவையான அளவு எடுத்து முக்கோண வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின், உப்பு போட்டு பிசைந்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரில் நனைத்து வேறொரு பாத்திரத்தில் வைக்கவும்.
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் சோம்பு போட்டு வெடிக்க விட்டு பின் சேனைக்கிழங்கு போட்டு நன்கு வதக்கவும். பிறகு, மஞ்சத் தூள், மிளகாய் தூள், கரமசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின்பு தேவையான அளவு நீர் வற்றி சேனைக்கிழங்கு நன்கு வெந்தவுடன் இறக்கிவிடலாம்.
அருமையான சேனை கிழங்கு வறுவல் ரெடி!
[…] ஒரு காய் ஆகும். முருங்கைக்காய் வறுவல் செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி […]